மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 7

ஆதிக் அப்போதே இந்த ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில்தான் வேலை செய்து வந்திருக்கிறான்…..வீட்டிற்கு அவன் ஒரே பையன்….பிசினஸ் குடும்பமான அவன் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே கவர்மென்ட் ஜாபிற்கு அவன் செல்வதில் துளியும் விருப்பம் இல்லை….. அடுத்து பிசினஸை யார் பார்ப்பதாம் என்ற கவலை அவனது அப்பாவிற்கு…

முடிந்த வரை கொஞ்ச வருஷமாவது முதலில் வெளியே வேலை செய்துவிட்டே தன் சொந்த  தொழிலுக்கு வரும் வழக்கம் அவர்கள் குடும்பங்களில் உண்டாம்…. அதைச் சொல்லி UPSC எழுதி இந்த வேலைக்கு வந்திருக்கிறான் ஆதிக்….

இந்த ஆள் கடத்தல் அதிகம் உள்ள கல்கத்தா பகுதியில் சீக்ரெட் ஆஃபீசராக பதவி இவனுக்கு….. வீட்டில் போலீஸ் என சொல்லிக் கொள்ளலாம்….ஆனால் இவனது ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களிடம் சொல்லிக் கொள்ளும் அனுமதி கிடையாது…

ஆக ஒரு கட்டத்தில் சில பல நாட்கள் அவ்வப்போது இவன் எங்கு இருக்கிறான் என்று கூட அவனது வீட்டிற்கு தெரியாது……அதற்கான காரணத்தை கேட்டால் “வேல அப்டிப்பா” என்பதை தவிர எதுவும் இவனாலும் சொல்ல முடியாது….

ஆதிக் வீட்டினருக்கு பையன் வேலைனு சொல்லிட்டு  சும்மா ஊர் சுத்திட்டு அலையுறான்…    பிசினஸுக்கு தேவையான மேனேஜ்மென்ட் ஸ்கில்லை கற்றுக் கொள்ள இந்த வேலையில் எதுவும் இல்லை என தோன்ற தொடங்கிவிட்டது…..

ஆக கல்யாணம் செய்து சொந்த தொழிலையும் தூக்கி  அவன் கையில் கொடுக்க வேண்டும் என நினைக்க தொடங்கி விட்டனர்.

ஆதிக்கிற்கோ அவன் கையில் எடுத்த அந்த ப்ராஜக்டை ஓரளவாவது வெற்றிகரமாக முடிக்க இரண்டு வருடமாவது தேவை என்ற நிலை….அதன் பின் வேலைய விட்டுட்டு வீட்டோட போக கூட அவன் தயார்தான்.

ஆக அவன் அப்போ மேரேஜ வேண்டாம்னு சொல்லி இருக்கான்….ஆனா அன்றிலை பார்த்த பிறகு அவளை இழக்கிறதும்  அவனுக்கு நியாயமாக படவில்லை….

அதே நேரம்  ஒரு ரொம்பவும் ஆபத்தான வேலையில்…… அதுவும் அவனோட சொந்த பெற்றோரே புரிந்து கொள்ள முடியாத சூழல்ல செய்ய வேண்டிய வேலையில் இருப்பவன் என்ற வகையில்….. அவளை தனக்கு பிடிச்சிறுக்குன்ற ஒரே காரணத்துக்காக அன்றே திருமணம் செய்து  ஆபத்துக்குள்ளும் அமைதி இன்மைக்குள்ளும் இழுக்கவும் மனமில்லை….

ஆக வேலைய விட்டுவிடுவது என முதலில் நினைத்திருக்கிறான்…. ஆனால் அன்றில்  ரெண்டு வருஷம் வெயிட் பண்ண தயார் என சொன்னது அவன் சற்றும் எதிர்பாரா ஆனந்த திருப்பம்.

அன்றிலிடம் அவன் தனிமையில் பேச விரும்பியது இந்த வேலையையும் அதன் ரகசிய காப்பையும் பற்றிதான்…..  அவளிடம் அவன் தெளிவாக அதைப் பற்றி சொன்ன பிறகும் அவள் காத்திருக்க விரும்பினால் இரண்டு வருடம் கழித்து திருமணம்…..ஒரு வேளை முடியாது என்றுவிட்டால்……அவன் அப்பா ஆஃபீசில் இவன் வேலைக்கு ஜாய்ன் செய்துவிட்டு உடனடியாக திருமணம் என்பது அவன் எண்ணம்.

இதில் பஜ்ஜி அவனை டெக்னிகலாய் கொஞ்சம் ஆராய்சியாய் பார்க்க துவங்கியதும் இவன் இன்னும் கொஞ்சம் அலர்ட்….

மத்தபடி அன்றிலோடு அன்று தனியாக பேச ஆதிக் ரொம்பவும் காத்துக் கொண்டுதான் இருந்தானாம்…..ஆனால் அப்போது அன்றில் பெரியம்மா அவன் வீட்டிற்கு உடனடியாக அழைக்க வாய்ப்பு அதிகம் என கேள்விப்படவும் அவனுக்கு திணறி விட்டது…..ஏனெனில் அப்போது வரை அவன் தன் பெற்றோரிடம் திருமணத்திற்கான விருப்பத்தை சொல்லி இருக்கவில்லையே….

இங்கு அன்றில் வீட்டிலிருந்து அழைக்க….இவன் பெற்றோரோ மகனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றுவிட்டால்….அந்த குழப்பத்தை வேறு அடுத்து சமாளிக்க வேண்டுமே….ஆக உடனடியாக தூத்துக்குடி போய் வீட்டிற்கு கால் செய்துவிடலாம் என அவன் நினைத்தானாம்….. அவன் கையில்தான் மொபைல் இல்லையே அப்போது…..

அன்றிலிடமிருந்தோ பிஜுவிடமிருந்தோ மொபைலை வாங்கி வீட்டிற்கு பேசுவதும் அவனுக்கு சரியாக படவில்லை…. வேலை விஷயமாக காரணம் சொல்லாமல் அங்கும் இங்கும் ஆதிக் அலைவதை புரியாத நிலையில் இருக்கும் அவன் பெற்றோர்……  அன்றில் சார்ந்த எண்ணிலிருந்து இவன் அழைத்தால்…….மற்ற நேரங்களிலும் அன்றில் அன் கோவுடன்தான் ஊர் சுற்றினானோ என நினைத்துவிட  வாய்ப்பு அதிகம்…. அது ஒரு வகையிலும் நல்லதிற்கில்லை என்பது அவன் புரிதல்…

அதே நேரம் பார்த்து காரும் சூடாக தொடங்க…. காருக்கு எதுவும் ப்ரச்சனையோ…. உள்ளே  வெப்பம் கூடிக் கொண்டே வருவதால் ஒரு வேளை கார் அதாக தீ பிடித்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில்தான் ஆதிக் இவர்களை காரிலிருந்து அவசரமாக இறக்கிவிட்டானாம்…… வெளிப்படையாக தீ விபத்துக்கு வாய்ப்பு அதிகம் என  சொன்னால் இவனை அதே காரில் அனுப்பவும் பயப்படுவார்களே என்ற எண்ணம்….எப்போதும் இயல்பில் இருக்கும் நாம சமாளிச்சுக்கலாம்…..நம்மள சார்ந்தவங்கள பாதுகாப்பா வச்சுடனும்ன்ற மனித இயல்பில் செய்த செயல் அது….

மத்தபடி இவன் வகையில் எந்த ரகசியமும் கிடையாதாம்.

இதுதான் ஆதிக் தரப்பு விளக்கம்……

அவனுக்கு ஆக்சிடென்ட் ஆன அன்று…. தூத்துகுடியிலிருந்து கிளம்புவதாக இருந்த ப்ளைட்டில் அதிரூபன் என்ற பெயரில் டிக்கெட் எடுத்திருந்ததால்….இவர்கள் விசாரித்த போது ஆதிக் என்ற பெயரில் யாரும் டிக்கெட் எடுத்திருக்கவில்லை என்ற தகவல்தான் கிடைத்திருக்கும் என்பதும் இன்னுமொரு தகவல்…

இவை எல்லாம் தலைக்குள் தாறுமாறாய் சுழல சுத்த… எதையும் நினைக்க முடியாமலும் பிடிக்காமலும் பயணித்துக் கொண்டிருந்தாள் அன்றில்…..  எலெக்ட்ரிக் போஸ்டில் கரண்ட் ஷாக் வாங்கி விழுந்த மனிதனுக்கு கூட இத்தனை அதிர்ச்சி இருக்காது என்ற நிலையில் அவள்.

ஏனோ ஆதிக்கை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவளால்.

ஆதிக் சென்னையில் வைத்து இதை சொன்னதும்…. அங்கேயே அப்போதே முடிவு செய்து பெரியம்மாவை நேரில் சந்தித்துவிட இழுத்துக் கொண்டு போவதெல்லாம் பஜ்ஜிதான். வீட்டிற்கு கூட விஷயத்தை இன்னும் சொல்லி இருக்கவில்லை….

அடுத்த பக்கம்