மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 5 (4)

வன்தான் வரவில்லையே தவிர…..அவனைப் பற்றிய   அத்தனை தகவல்களும் அவள் அடி நெஞ்சை அறுத்தெடுக்கவென அவசரமின்றி படிப்படியாய் வந்து சேர்ந்தன….

முதல் தகவல்…..ஆதிக்கிடம் இவர்கள் கொடுத்த கார் பாகிஃஸ்தான் எல்லைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என  ட்ராக்கிங் டெக்னாலஜி தெரிவித்தது….. பொதுவா இந்த ஃபோர் வீல் ட்ரைவ் கார்கள் திருடப்பட்டு தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது உபரித் தகவல்….

7 நாளாகியும் ஆதிக்ட்ட இருந்து எந்த காலும் வரலையே அவன் சேஃபாதான் இருக்கானா என தெரிந்து கொள்ள உருண்டு கொண்டு வந்த பஜ்ஜிக்கு ஏதேச்சையாய் வந்த ஐடியாதான் இந்த காரை லொகேட் செய்யும் எண்ணம்…

அது வரைக்கும் மொபைல் கூட இல்லாமதான கிளம்பிப் போனான் ஆதிக்….பிசியா இருக்றதால கால் பண்ணலை போல என வலுக்கட்டாயமாக எண்ணி தங்களை தாங்களே சமாளித்ததில் வீட்டில் கூட அன்றிலும் பஜ்ஜியும் எதுவும் சொல்லி இருக்கவில்லை….

இப்போதும் ஆதிக்கின் அதீத கார் நாலெட்ஜ்….. ஒரு வகையில் ட்ரெய்ன்ட் பேர்சன் போன்ற பிசிகல் ஃபிட்னெஸ் அண்ட் அப்ரோச்…..என பலவும்  எதை எதையோ எண்ணச் சொன்னாலும்…..

முதல் வேலையாக ஆதிக்கின் பேரேண்ட்ஸ் நம்பர் வாங்கி அவர்களிடம் பேசலாம் எனதான் பஜ்ஜியும் இவளும் முடிவு செய்தது…

அந்நேரம்  எதேச்சையாய் ஆதிக்கின் போட்டோவைப் பார்த்த பெரியம்மாவோ….இது யார் என கேட்டது அல்டிமேட் தகவல்…. “என்ன அத்த உங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச குடும்பம்….பையன்னு சொல்லிட்டு ஃபோட்டோவப் பார்த்து யார்னு கேட்கிறீங்க…?” என பஜ்ஜி பதறிப் போய் கேட்க….

“எனக்கு தெரிஞ்ச குடும்பத்து பையனுக்கு நம்ம அன்றில கேட்டாங்கதான்……ஆனா பையன் இது இல்லையே” என விழித்தார் அவர்…

அடுத்து விசாரித்ததில் அன்னைக்கு ஃப்ளைட்ல அவன் பேரில் டிக்கெட்டே எடுக்கப்பட்டிருக்கவில்லை…..அவன் பயணிக்கவும் இல்லை என்பது கொசுறுத் தகவல்….

நாள் செல்ல செல்ல…. கார் திருடன் அவன்…. இல்ல வெறும் காருக்காக எதுக்கு இவ்ளவு ட்ராமா? அப்டின்னா முதல் தடவ காரை கொடுத்தப்பவே கொண்டுட்டு போய்ருப்பானே….. இது அன்றில கிட்நாப் செய்யவோ இல்ல…எதுவோ ப்ளான் செய்துறுக்கான்….. ஆனா கடைசி நிமிஷத்தில் மாட்டிப்போம்னு நினச்சு கிடச்ச மட்டுக்கும் லாபம்னு கார கொண்டு போய்ட்டான்….

முதல்ல அன்றில்ட்ட தனியா பேசனும்னு சொன்னவன்….அடுத்து இவங்க வீட்ல இருந்து மாப்ள வீட்டுக்கு பேசி இருப்பாங்கன்னு சொல்லவும்தானே ஓடிட்டான்…… தான் ஃப்ராடுன்னு தெரிஞ்சு எந்த நிமிஷமும் தன்னை பிடிச்சுடுவாங்கன்னு நினச்சு ஓடிட்டான்….  என பஜ்ஜி பலவகையில் யோசித்து புலம்பிக் கொண்டிருந்தாலும்…..

இவளுக்கு மட்டும் அடுத்துமே நம்பிக்கை இருந்தது…..ஏதோ ஒரு வகையில் அவன் புறம் நியாயம் இருக்கும்….வந்துவிடுவான் என….

ஆனால் நாட்கள் மாதங்களாக……அவன் புறம் நியாயம் என்று ஒன்று இருந்தால்…..ஒரு வேளை இந்த மேரேஜ்க்கு அவன் வகையில் வழியே இல்லாது போயிருந்தாலும்….. எதற்காக இல்லையென்றாலும் குறைந்த பட்சம் காரையாவது திருப்பி தந்திருக்க வேண்டாமா?

அதுவும் முடியவில்லை என்றால் ஒரு மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டாமா? என அறிவு கேட்கும்தானே…..

அப்போதுதான் கார் திருட்டைப் பத்தி கேஸ் பதியச் சொன்னாள் இவள்….. அவன் மீதிருந்த நம்பிக்கை செத்திருந்தது அவளுக்கு….

“கார் போனா போகுது….இதைப் போய் வெளிய சொன்னா கண்ணு மூக்கு வச்சு என்னல்லாம் பேசுவாங்களோ நம்ம ஆட்கள்” என ஒரேடியாய் மறுத்துவிட்டனர் வீட்டில்.

ஆனாலும் போய் இவளும் பஜ்ஜியுமாய் பதிஞ்சுட்டு வந்தாங்கதான்…. அதுக்கு பதில்தான் ஒன்றும் கிடைக்கவில்லை.

இதில் இப்போது வந்து இவளை அரெஸ்ட் செய்றானாம்? இவன் திருடனா??? இல்ல இப்போலாம் போலீஸ்தானே பெரிய க்ரிமினல்ஸ்…..சோ நிஜமாவே போலீஸாகிட்டானா????

எது எப்டினாலும் அப்போ உள்ள அப்பாவி அன்றில் கிடையாது இவள்….

தொடரும்…

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 6