மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 5 (3)

அடுத்து இங்கு திருநெல்வேலியில் இவளோடு இருக்கும் அம்மாவிடம் கலந்து பேசி இருப்பாராய் இருக்கும்……

எப்படியும் எதிர்பதமான பதிலாய் இராது என்பது உறுதிதான் என்றாலும் ஒரு திவ்ய திகிலோடும் தித்திக்கும் அவஸ்தையோடும் இவள் தன் அறைக்குள் காத்திருக்க…

இயல்பாய் வந்து இவள் அருகில் அமர்ந்த அம்மா “இதுவும் நல்லதுக்குதான்….பெரியவங்களா பொண்ணையும் பையனையும் பார்க்க அரேஞ்ச் செய்றதுக்கு பதிலா என்னமோ கடவுளே செய்தது போல இருக்கு….எப்பவும் நல்லா இருப்பீங்க….” என சொல்ல…

அந்த நேரத்தில் இவள் எப்படி உணர்ந்தாளோ….. அதே வகை உணர்வுகள் இப்போது அவன் மீதெங்கும்…

“உன்னால வீட்லலாம் எதையும் மறைக்க முடியாது….” ஆதிக் தன் எதிர்பார்ப்பிற்கு அன்றிலிடம் விளக்கமும் கொடுத்தான்….

சரிந்து பதியனிடுகிறது சங்கீதவகை நினைவொன்று பெண்ணவளின் வேர்கால்களில்……..ஏனோ ரொம்பவும் பிடித்தது அந்த நொடியும் அவனும்…

“பைதவே வேணும்னா ஒரு ரவ்ண்ட் நம்ம கார்ல போய்ட்டு வாங்க…….நான் அப்டியே இங்க இறங்கிக்கிறேன்….. இல்லனா இங்க லெஃப்ட்ல நடந்து போனீங்கன்னா ஒரு சர்ச் இருக்கு….வாக்  மாதிரி ரெண்டு பேருமா போய்ட்டு வாங்க…. நான் வெயிட் பண்றேன்….இல்ல வேற எதுவும் ப்ளான் இருந்தாலும் சொல்லுங்க…. வீட்லயே சம்மதிச்சுட்டதால நீங்க தனியா பேசுறதை யாரும் பார்த்தாலும் ஒன்னும் இனி பெரிய விஷயமில்ல….” கிடைத்த பேச்சற்ற இடைவெளியில் நேத்தைக்கும் சேர்த்து கணக்கடைப்பவனாக ஆதிக்கிடம் டோட்டலாய் சரண்டர் ஆனான் பஜ்ஜி..

இதுக்கு மேலயும் கரடியா இருக்க யாருக்கு பிடிக்குதாம்??

“தேங்க்ஸ் பிஜு….” என பஜ்ஜிக்கு பதில் கொடுத்தபடி சுற்று முற்றும் பார்வையை செலுத்தினான் ஆதிக்..

இருந்த ஆவலில் அதே நேரம் இவளோ “டூ இயர்ஸ்க்கும் கூட ஓகே பண்ணிட்டாங்க….” என சிலிர்த்தாள்.  சொல்லும் போது அவள் கன்னக் கதுப்பில் இப்போதே கண்ணில் தட்டுப்பட்டது கல்யாணக் களை…

“வேலையாவது ஒன்னாவதுன்னு இப்பவே கல்யாணம் செய்துக்கலாம் போல இருக்குது….” இவளிடமாய் முனங்கினான் ஆதிக்…

“இப்பவே எங்க பெரியம்மாட்ட இதை கூப்ட்டு சொல்லிடுறேன்….” விளையாட்டு தொனியில் முனங்கினாள் அவளும் அவனைப் போலவே…

“சொன்னா?” கேட்டான் அவன்..

“ம்…அவங்கதான் இப்ப உங்க வீட்டுக்கு கூப்ட்டு பேசுவாங்க….ஒன் வீக்ல எங்கேஜ்மென்ட்ன்றதுக்கு பதிலா ஒன் வீக்ல மேரேஜ்னு  சொல்ல சொல்லிடுவோம்…” விளையாட்டாக சொன்னவள்…

“ஆனாலும் இது வேஸ்ட்டான ப்ளான்தான்…..எனக்கு தெரிஞ்சு பஜ்ஜி தல மறையவும் பெரியம்மா ஏற்கனவே உங்க வீட்டுக்கு கூப்ட்டு பேசி முடிச்சுறுப்பாங்க…..நீங்க டூ இயர்ஸ் வெயிட் பண்றது பண்றதுதான்…….மாத்த வழி இல்ல….” விளையாட்டு பேச்சை இன்னும் தொடர்ந்தாள்.

சட்டென இப்போது ஆதிக் முகத்தில் ஒரு விருப்பமற்ற உணர்வு…..

பிஜு இதற்குள் இவர்களுக்கு தனிமை கொடுக்கவென காரை நிறுத்தி இருந்தான்.

“இல்ல…..இங்க வேண்டாம்….தூத்துகுடி ஊருக்கு போலாம்…அங்க எதாவது ப்ளேஸ் இருக்கான்னு பார்த்துப்போம்…” என பிஜுவிடம் மறுத்தான் ஆதிக்… முன்பிருந்த இயல்பு நிலைக்கு ஆதிக் வரவே இல்லை.

“என்னாச்சு ஆதிக்?…எதுவும் ப்ராப்ளமா?…எதாவது தப்பா பேசிட்டனா?” அன்றிலின் விளையாட்டெல்லாம் விடை பெற்றிருந்தது….

“ஹேய்…இல்லமா….அப்டில்லாம் எதுவுமில்ல…” சொல்லிக் கொண்டிருந்த ஆதிக்….

“பிஜு கவனிச்சீங்களா கால் சுடுற மாதிரி  இருக்குது….” என ட்ரைவர் இருக்கையில் இருந்தவனை கேட்டான்….. அன்றிலும் கூட அப்போதுதான் அதை உணர்ந்தாள்.

காரின் இஞ்சின் டெம்பரேச்சர் எல்லாம் சரியாக இருப்பதாக  காண்பித்தாலும்…. ஏசி இயங்கிக் கொண்டு இருந்தாலும்…..கால் பகுதியில் சின்னதாய் ஒரு வெப்ப ஏற்றம் காணப்பட்டது..….

“இது ஜஸ்ட் நம்ம ஃபீல்தான் மச்சான்….ஒன்னும் இஷ்யூ இருக்காது” என என்னதான் பிஜு சமாதானம் சொன்னாலும்…..

இப்போது தான் ட்ரைவ் செய்வதாக காரை எடுத்துக் கொண்ட ஆதிக்…அடுத்து மெதுவாகவே காரை உருட்டியவன்…சற்று நேரத்தில் ஒரு சிறு பஸ்ஸ்டாப்பை கண்டதும்

“இங்க இருந்து பஸ் எடுத்து ரெண்டு பேரும் வீட்டுக்கு போய்டுங்க….. நான் அடுத்த சர்வீஸ் சென்டர்ல காரை விட்டுட்டு போய்டுறேன்…. அடுத்து எந்த சென்டர்னு டீடெய்ல் தரவும் வந்து காரை எடுத்துக்கோங்க…” என பிடிவாதமாக இவர்களை இறக்கிவிட்டு போனான் ஆதிக்…..

அதுதான் அன்றில் அவனை கடைசியாக பார்த்தது……அவனும் வரவில்லை காரும் வரவில்லை….. இன்றுதான் வந்து நிற்கிறான் எதிரில்…

அடுத்த பக்கம்