மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 5 (2)

“ஏய் குட்டிபாப்பா  கல்யாணம்னாலே சொசைட்டிய சாட்சியா வச்சு  பையனும் பொண்ணும் கடவுள் முன்னால  சேர்ந்து வாழ சம்மதிக்கிறது……சீக்ரெட் மேரேஜ்னு ஒன்னு கிடையவே கிடையாது…..சீக்ரெட்டா செய்ற எதுவும் மேரேஜ் கிடையாதுன்னு பைபிள் டிஸ்கஷன்ல எத்தனை டைம் நாம படிச்சிறுப்போம்…..

நகை இல்லாம கூட கல்யாணம் செய்யலாம்…. சொசைட்டியோ இல்ல கவர்மென்டுக்கோ  தெரியாமத்தான் பண்ண முடியாதுன்னு படிக்கல….. இன்னைக்கு நடந்தது வெறும் கிஃப்ட் ஷேரிங்தான்…..” என எது அவளை முற்றிலுமாய் ஆறுதல் படுத்துமோ அதை முதலில் சொன்ன பஜ்ஜி

”இன்னைக்கே ஆதிக் மச்சான் பத்தி வீட்ல பேசிடுறேன் ஓகேவா….” என உறுதியும் கொடுத்தான்…..

ஆக அன்று இரவே பஜ்ஜி காதல் கத்தரிக்காய்… ப்ரொபோஸ் செய்தான்…ப்ரேஸ்லெட் மாத்துனாங்க என்றெல்லாம் சொல்லாமல்….. ஃப்ளைட்ல தற்செயலான சந்திப்பு….. நல்ல குணம்னு தெரியுது….. இதுதான் மாப்ளைன்னு இப்பதான் தெரியும்….. ஹாஸ்பிட்டல்ல சர்ஜரி டைம்ல அனிய விட்டுட்டு போனதால இப்ப பார்க்க வந்திருக்கார்…. நம்ம பொண்ண நல்லா வச்சுப்பார்னு எனக்கு தோணுது….ரெண்டு வருஷம் கழிச்சு மேரேஜ்னாலும் ஓகேன்னு சொல்றார்…..இல்ல இப்பவே வைக்கனும்னாலும் அவருக்கு சம்மதமாம்…… அனி ரெண்டு வருஷம் கழிச்சு இருக்கட்டும்னு சொல்றா….  என்பது போன்ற சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டிய விதமாய் அன்றிலின் அப்பாவிடம்  சொல்ல….. அன்றில் வீடு அப்போதே திருமண களைக்கு வந்துவிட்டது…

இரண்டு வருஷம் கழித்து திருமணம் என்றால் இப்போது ஒரு நிச்சய தார்த்தம் மட்டும் விமரிசையாக செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எளிதாகவே அந்த இரண்டு வருஷ கோரிக்கையும் பாஸ் ஆனது….

வெகுவாக நிறைந்திருந்தாள் அன்றில்…

இதில் விஷயத்தை அன்றிலின் அம்மா தன் அக்காவிடம் சொல்லியதும்…… அவர் துள்ளி குதிக்காத குறை….. “இப்பவே கூப்ட்டு  மாப்ள வீட்ல நான் பேசப் போறேன்” என ஒத்தைக் காலில்  நின்றவரை பஜ்ஜிதான் படாதபாடுபட்டு பிடித்து வைத்தான்.

அடுத்து ஆதிக்கிடம் மொபைலில் இது பற்றி தகவல் சொல்லலாம் என நினைத்தால் அது இன்னுமே ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது…

மறுநாளும் பகலில் அதே நிலை தொடர….என்னவாயிற்றோ என குழம்பிக் கொண்டிருந்த நேரம் ஒரு பப்ளிக் பூதிலிருந்து ஆதிக்கே அழைத்தான்…… அவன் மொபைல் தொலைந்து விட்டதாம்….. புதிது வாங்க தேவையான டாகுமென்ட் அவனிடம் கையில் இல்லையாம்…. மூன்று  மணிக்கு கே டி சி நகர் என்ட்ரென்ஸ் பக்கம் தூத்துகுடி ரோட்ல வெயிட் பண்றேன் என மட்டும் தகவல் கொடுத்தான்……  பூத்தில் இருப்பவனிடம் அதற்கு மேல் எதையும் பேசுவது  சரியாக படாததால் நேரிலேயே பேசிக் கொள்ளலாம் என முடித்துவிட்டான் பஜ்ஜி….

ஆக அன்று அன்றில் பஜ்ஜியுடன் ஏர்போர்டுக்கு கிளம்பும் போது வீட்டில் சொல்லிவிட்டே கிளம்பினாள்.

திக் குறிப்பிட்டிருந்த இடத்திலிருந்து தூத்துக்குடி விமான நிலையல் ஏறத்தாழ 20 கிமீ தொலைவு….அங்கு இவர்கள் சென்று காத்திருந்த சில நிமிடங்களிலெல்லாம் வந்த ஆதிக்…..

கதவை திறந்து உரிமையாய் பின் சீட்டில் இவள் அருகில் ஏறி அமர்ந்தான் “ஹேய் அல்வாபொண்ணு…வந்திட்டியே” என்றபடி…..சிந்திய புன்னகையை இதழ்கள் நிறுத்திக்கொண்ட பின்னும் மகிழ்ச்சியில் விம்மி வெடித்துக் கொண்டிருந்த அவனது அப்போதைய முகம் இப்போது கூட இவளுக்கு ஞாபகம் இருக்கிறது…

அன்றும் அவன் முகத்திலேயே நின்று போயிருந்தது இவள் பார்வை…. சற்று முன் பெய்த மழையின் சில தூரல்கள் இந்னும் இவன் முடிமீது அமர்ந்திருக்க….ஏதோ ஒரு சிறு இலையும் அதன் அருகில் இடம் பிடித்திருக்கிறது…. தூசி…

“ஹாய் பிஜு…” என பஜ்ஜியை விஷ் செய்த ஆதிக்…அடுத்து இவள் பார்வை உணர்ந்தவனாக இவளை திரும்பிப் பார்க்க….

கை நீட்டி அந்த தூசியை இவள் எடுத்தாள்.  அவள் கை அவன் முகம் நோக்கி நீளவுமே அனிச்சை செயலாய் அவன் கண்கள் மூடிக் கொண்டாலும்…. இவள் கை அவன் முடியை ஸ்பரிசித்தும் படாமலுமாய் அந்த தூசியை எடுத்த நேரம்…. அவன் முகத்தில் வந்த அந்த முகபாவத்தை என்னவென்று சொல்வது…..

ஏதோ தன்னையே சமர்பிப்பது போல் அமர்ந்திருந்தான்….சுகித்தானா….. சுகம் கொடுத்தானா? காமமற்ற காந்தபுலத்தில் காதலுற்ற தாய்மை சுரப்பில்…..அந்த ஒரு நொடிக்குள் இவனவளாய் இனி வாழப்போகும் வாழ்வனைத்தின் இன்பத்திற்கும் அறிமுகப்பட்டுப் போனாள் அவள்…

இவள் கை அவனிடமிருந்து பிரிந்து வரவும்…..கண் திறந்தவன் கை நீட்டி அவள் கையிலிருந்ததை வாங்கி தன் வாலட்டில் பத்திரப் படுத்தினான்….

அமிழ்த சுரப்பினுள் அமிழ்ந்து ஊறினாள் இவள்…..சின்னதாய் சிணுங்கவும் செய்தது பெண்மை…

“என்னோட கடைசி பொண்ணோட கடைகுட்டி குழந்தைக்கு இத கொடுக்கனும்….” அடுத்து அவன் ஆராதித்து சொன்ன வார்த்தைகளில்….அதுவரை அவளை ஆண்ட காதலுற்ற தாய்மை சுரப்பெல்லாம் தவிடு பொடியாக….

உர்ர்ர்ர்ர் என முறைத்தாள்…

“மத்த குட்டீஸ்கெல்லாம் அதுக்கு  முன்ன நிறைய சேர்த்துடலாம் அல்வாபொண்ணு…” ஆறுதல் சொல்கிறானாம் அவன்…

வந்துவிட்ட சிரிப்பை வாய்க்குள் அடைத்துக் கொண்டு இன்னுமே கோபம் போல் ஒற்றை விரல் காட்டினாள் இவள்… “உதபட போறீங்க இப்டில்லாம் பேசினா…”

இதுவரைக்கும் இவளைப் போல இவர்கள் இருவருக்கும் மட்டுமாக கேட்கும் வண்ணம் சிறு குரலில்  பேசிக் கொண்டிருந்தவன்….. இப்போதோ சத்தமாக “ஏய் பிஜு என்ன காப்பாத்து… உன் தங்கச்சி என்ன அடிக்க வர்றா” என உதவிக்கு அழைத்தான் காரோட்டிக் கொண்டிருந்தவனை…

“ஐயோ….மச்சான்….. நான் மௌனவிரதம்…..அடிக்கே இப்டின்னா இன்னும் எவ்ளவோ இருக்கேன்னு கேட்க முடியாது…..” என பதில் வந்தது பஜ்ஜியிடமிருந்து….

இதை கேட்டதும் ஆதிக் சின்னதாய் சிரித்தாலும்…..”நேத்து நீங்க பேசுன எதுவும் எனக்கு மனவருத்தமா இல்ல பிஜு…. உங்க ரெண்டு பேருக்கும் இடையில உள்ள ஃப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்பவும் பிடிச்ச விஷயம்…. தயவு செய்து எப்பவும் போலவே இருங்க…. எனக்கு அனிட்ட சிலது தனியா பேச வேண்டி இருந்துது…… ஆனா உங்க வீட்டு சிச்சுவேஷன் உங்களுக்குத்தானே தெரியும்… அதான் ஒன்னும் சொல்லாம கிளம்பிட்டேன்……இல்லனா  நான் அவட்ட தனியா பேசனும்னு உங்கட்டயே கூட ஓபனா சொல்லி இருப்பேன்….” என தன்பக்கத்தை வெளிப்படையாகவே சொன்னான்.

அன்றில் இதற்குள் பஜ்ஜியிடம் அவன் பேசிய வகை குறித்து சொல்லி இருந்தாள்தான்… பஜ்ஜியும் இனி பார்த்து பேசுறேன்……இருந்த சிச்சுவேஷன்ல ஃப்ளோல வந்துட்டு என சொல்லி இருந்தான்தான்….. அதை ஆதிக் புரிந்து கொண்டது ஒருவகையில் தர்மசங்கடமாக இருந்தாலும்…..அவன் விளக்கம் இளையவர்கள் மனதிற்கு மிகவுமே இதமளிக்கிறது…..

“தேங்க்ஸ் மச்சான்” என சந்தோஷமாக அதை ஏற்றான் பஜ்ஜி…  அதே வார்த்தையை தன் கண்களில் ஏந்தி ரசனையாய் தன்னவனைப் பார்த்தாள் அன்றில்…

“இவ நேத்து செம மூட் அவ்ட் மச்சான்….வீட்டுக்கு தெரியாம மறச்சு வைக்கிறது செம கில்டியா இருக்குன்னு…..சோ நேத்தே வீட்ல சொல்லிட்டோம்…. வீட்ல எல்லோர்க்கும் அவ்ளவு சந்தோஷம்…… அத கூட சொல்லாம கழுத உங்கள அடிக்கப் ப்ளான் போட்டுட்டு இருக்கு பாருங்க…. நீங்க அந்த டீடெய்ல்ஸ்லாம் அவட்டயே கேளுங்க……நல்லா கதை சொல்லுவா……” பஜ்ஜி சொல்லிக் கொண்டு போக…..ஆதிக் தன்னவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆச்சர்யத்தோடு அவன் முகம் மலரப்போவதை எதிர்பார்த்திருந்த அன்றிலுக்கு “இத எதிர்பார்த்தேன்…” என்ற விடையே அவனிடமிருந்து கிடைத்தது…. ஆனால் சாதாரணம் போல் சொன்னான் என்று இல்லை…..

நேற்றைய இரவில் பஜ்ஜி சென்னையிலிருக்கும் இவளது அப்பாவிடம் விஷயத்தை ஃபோனில்தான் சொன்னான்…. அப்பா அப்டியா என்பது போல கேட்டுக் கொண்டாலும் பதில் என எதுவும் பஜ்ஜியிடம் சொல்லவில்லை……

அடுத்த பக்கம்