மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 5

ன்று ஆதிக் கிளம்பிச் செல்லவும் முதல் வேலையாக பஜ்ஜி அன்றிலுக்கு ஆதிக்கின் நம்பரை கொடுத்தான்……

இவளும்  ஆசை ஆசையாக எண்ணை வாங்கிக் கொண்டு…..அதை அழைத்தால் ஸ்விட்ச் ஆஃப்…. அதுக்குள்ளயா அவன் ஃப்ளைட்ல போர்டாகி இருப்பான்……சான்ஸே கிடையாதே…..

ஆக சற்று நேரம் அதனுடன் திரும்ப திரும்ப இவள் போராடியவள் “அவர் மொபைல்ல ச்சார்ஜ் இல்லையா இருக்கும்…இதுக்கு போய் ஃபீல் பண்ணிகிட்டு” என பஜ்ஜி ஆறுதல் சொல்லவும்தான் தன் போராட்டத்தை நிறுத்தினாள்.

இருந்தாலும் அவ்வப் போது அவன் எண்ணை அழைத்துப் பார்ப்பதும் டென்ஷனாவதுமாக நேரம் கழிந்து கொண்டிருக்க…. அந்நேரம் பெரியம்மாவும் அம்மாவும் திரும்பி வந்தனர் அதுவும் ஒரு உறவினரோடு…

வந்த பெண்மணி அன்றிலுக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர் என்றாலும் மரியாதை நிமித்தும் இவளும் மற்றவர்களுடன் அமர்ந்து உரையாட வேண்டும் என்ற வீட்டு முறைமையின் படி…..பெரியம்மாவுக்கு அருகில் போய்  அமர்ந்து கொண்டாள்.

வந்திருந்த அந்த பெண்மணியோ இவளிடம் நலம் விசாரிப்பு முடியவும் நேரடியாக “பொண்ணுதான் படிப்ப முடிச்சாச்சு போலயே….. நம்ம குடும்பத்துலயே நல்ல பையன் இருக்கான்” என இவளை வைத்துக் கொண்டே பேச்சை தொடங்கினார்….

எத்தனை கடுப்பானாலும் விருந்தோம்பல்னு ஒன்னு இருக்கே…..முகத்தை சுண்ட முடியாமல் இன்னுமாய் பெரியம்மாவிடம் ஒண்டி சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அன்றில்.

அந்த விருந்தாளிப் பெண்ணோ “நம்ம வசந்தண்ணாச்சி ரெண்டாவது பையன் இருக்கான்ல” என இன்னும் டீடெய்லாய் ஆரம்பிக்க…. இப்போது இவளுக்கு எதிரில் இருந்த மாடிப்படியில் அமர்ந்திருந்த பஜ்ஜியை ரகசியமாய் ஒரு பார்வை பார்த்தாள் அன்றில்….”டேய் எதாச்சும் ஹெல்ப் பண்ணுடா’ அப்டின்னு அதுக்கு அர்த்தம்…..

அவன் இப்போதே கொஞ்சம் தவிப்போடு முழு மொத்தமாய் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். பின்ன போனடைம் ஒரு ப்ரோபோஸல் கதைய கேட்டுதான அந்த ஆட்டம் ஆடி ஹாஸ்பிட்டல்லாம் போய்ட்டு வந்தா….  பிடிக்கலைனு சாதாரணமா சொன்னா கூட யாரும் அவள கட்டாயபடுத்த போறது கிடையாது வீட்ல…..அதுக்கு ஏன் அப்டி ஆடினாளாம்….அப்டின்னா இப்பவும் எதுவும் குண்டக்க மண்டக்க செய்துடுவாளா? என்பது அவன் டென்ஷன் ….

நல்லவேளை பெரியம்மாவும் அவன் முகத்தை கண்டுவிட்டார்…. அதன் விளைவாக “அதெல்லாம் எங்க பிள்ள மேல படிக்கப் போறா….MBA சேர்க்கிறோம்…..அது முடிஞ்ச பிறகுதான் இனி இதப்பத்தில்லாம் யோசிக்கனும்” என அந்த பெண்மணியின் பேச்சுக்கு பெரியம்மா உடனே முற்றுப் புள்ளியும் வைத்தார்.

ஆனால் இதுவும் அன்றிலுக்கு கேட்க பிடிக்கவில்லை…. ஏதோ ஒருவகையில் பெரியம்மாவை கூட ஏமாத்திக் கொண்டிருப்பதாய் ஒரு உணர்வு இவளுக்கு…… இதுவரை எதையும் வீட்டில் மறைத்தெல்லாம்  அவளுக்குப் பழக்கமில்லை என்பதால் இது மனதற்கு ஒவ்வவில்லை. ஆதிக் பத்தி வீட்ல சொல்கிறவரை இந்த வலியை இவள் அனுபவித்துதான் ஆக வேண்டும் போல….  இருப்பு கொள்ளவில்லை இவளுக்கு…

அதான் வந்தவங்கள வாங்கன்னு கேட்டாச்சு…..கொஞ்சம் பேசியாச்சு இனி எழுந்து போய்விடலாம்.. வித்யாசமா தோணாதே என எழுந்து கொள்ள முயன்றாள்.

இவள் எழுந்த வகையில்…..அதுவரை பெரியம்மா மீது சாய்ந்து இருந்தவள் கையிலிருந்த ப்ரேஸ்லெட் அவரது பட்டு சேரியின் ஜரிகையில் சென்று சிக்கிக் கொண்டு பட்டென இழுபட்டது……வரமாட்டேன் என நின்றது…

அவ்வளவுதான் அன்றில் தவித்துப் போனாள்……இன்றைய நாளின் நியாபக சின்னம் அது…..அறுந்து போனால் நிச்சயமாய் அவளுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்…. முகம் சுண்ட வெகு கவனமாக அவள் அதை பிரித்தெடுக்க முயல….

“இந்த மாதிரி மாடலே இப்டித்தான் ஆகும்…..அதான் வாங்குறப்ப கவனமா பார்த்து வாங்கனும்….யார் வாங்கினா இத? அம்மாவா? அப்பாவா?” என விசாரித்தபடியே பெரியம்மாவும் அதை கவனமாக பிரித்துவிட்டார்.

ஆனால் இதற்கு இவள் என்னவென்று பதில் சொல்வாள்….?தவித்த அன்றிலின் கண்கள் அதாகவே பஜ்ஜியைத்தான் தேடின…

“பிஜு பையன் வாங்கினதா….அழகாயிருக்கு “ என இவளுக்கு மட்டும் கேட்கும்படி பாராட்டினார் பெரியம்மா…

இவள் பஜ்ஜியைப் பார்த்து முழித்த வகையில்…..அது பஜ்ஜி வாங்கியது….. விருந்தினர் முன் அவன் வாங்கித் தந்தான் என சொல்வதை தவிர்க்கவே இப்படி  முழிக்கிறாள் என நினைத்துக் கொண்டார் பெரியம்மா.

அது அன்றிலுக்கும் புரிய…. ஏற்கனவே அவளை வாதித்துக் கொண்டிருந்த வீட்டு பெரியவங்களை ஏமத்துறோம் என்ற குற்றமனப்பான்மை .ரொம்பவுமே குத்த தொடங்கியது அவளுக்கு…..

பஜ்ஜி வாங்கியதுதான்……ஆனால் அதன் அர்த்தம் இவளுக்கு என்னவாக இருக்கிறதாம்? ஒரு கணம் சொல்லிவிடலாமா என்று கூட இருக்கிறது….. கூடவே இதெல்லாம் பெரியவர்களுக்கு என்னதாக தோன்றும் எனவும் இப்போது ஏனோ பயமாகவும் இருக்கிறது….

அடுத்து தன் ரூமுக்குள் சென்று தஞ்சமடைந்த இவளை தேடி வந்த பஜ்ஜியை பொரித்து வறுத்துவிட்டாள் அவள்…

“எனக்கெல்லாம் தெரியாது….இப்பவே வீட்ல சொல்லி ஆகனும்….நீ பாட்டுக்கு ஆதிக்க போன்னு சொல்லிட்ட…..ஒழுங்கா அவங்க பெரியம்மா அம்மாவெல்லம் பார்த்துட்டு போயிருக்கலாம்….. இப்ப என்னமோ எனக்கு வீட்டுக்கு தெரியாம மேரேஜே செய்துட்டது போல கஷ்டமா இருக்கு…..ஆமா நானும்தான் கேட்கேன்….கைல செயின் போடுறதுக்கும் கழுத்துல போடுறதுக்கும் என்னடா வித்யாசம்…? போடா லூசு…” தனியாய் இருந்து சிந்திக்கும் போது நடந்த விஷயங்கள் இந்த அளவுக்கு பெரிதாக தோன்றிவிட்டன பெண்ணிற்கு…

கேட்டிருந்த பஜ்ஜிக்கு உண்மையில் சிரிப்புதான் வந்தது என்றாலும்….பாசமலர் கண்ணுல தண்ணில தெரியுது…

அடுத்த பக்கம்