மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 6(3)

அப்படியேதான் அவள் மேடை ஏறியதும்….

படு அலட்சியமாக ஒரு தைரிய பாவத்துடன் இவள் போய் ஆதிக் முன் நின்றாள் இவளுக்கான அவார்டை வாங்க…

“சொல்றதுக்கு உங்க வீட்ல வேற எதுவுமேவா காரணம் கிடைக்கல…. செத்துட்டன்னு சொல்லிட்டாங்களேடி” எந்த வித உணர்வும் இல்லாத வெற்று முகத்துடன்….அத்தனை அத்தனை அனாதை உணர்வையும் கொட்டிய குரலில் ஆதிக் சொல்ல….

அடி நழுவியது இவளுக்கு….

என்னது????????!!!! செத்துட்டனா???????!!!!

இடிவிழுந்ததா இதயத்தில்….இல்லை என்றானாளா இவள் என்றெல்லாம் தெரியவில்லை இவளுக்கு…

அடுத்து இவளுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என கொஞ்சமாவது சிந்தனை தெளிவு வந்த போது…..

முதல் நாள் போல் விமானத்தில் ஒரு வின்டோ சீட்டில் சுருளாத குறையாக இருண்டு கிடந்தாள் இவள்….அடுத்த சீட்டில் பஜ்ஜிதான்….. அதற்கும் அடுத்த அயல் சீட்டில் ஆதிக்…

சென்னையிலிருந்து தூத்துகுடிதான் சென்று கொண்டிருந்தார்கள்….

ஆதிக் இவர்களை விட்டு சென்ற அந்த நாளில்……காரிலிருந்து இறக்கிவிட்டுவிட்டு செல்லவும்….. ஒரு இடத்தில் ரோடுக்கு குறுக்காக மரம் விழுந்து கிடந்ததாம்….என்ன செய்யலாம் என காரிலிருந்து அவன் இறங்கிப் பார்த்த நேரம்… ஏற்கனவே  ஸ்டார்ட் ஆகியே நின்றிருந்த இவன் காரை யாரோ எடுத்துக் கொண்டு பறந்து விட்டார்களாம்…. அதாவது பஜ்ஜி சற்று முன் கற்பனை செய்தபடி கார் திருட்டுதான் போயிருக்கிறது….

காரை யாரோ எடுப்பதை உணர்ந்து இவன் திரும்பி ஓடத் துவங்கிய நேரம் அடுத்து வந்த லாரி இவனை தூக்கி எறிய…..

காரில் இருந்து இறங்கியவன் கையில் என்ன டாக்குமென்ட்ஸ் இருந்துவிட முடியும்…..மொபைல் கூட கிடையாது…… ஆக சுயநினைவு இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த இவனை அடையாளம் கண்டு கொள்ள ஒரு வழியும் இல்லாமல் ஏறத்தாழ மூன்று வாரகாலம் சென்றிருக்கிறது….

அடுத்து இவன் நினைவு திரும்பி கொடுத்த தகவலில்தான் இவன் வீட்டுக்கு விஷயம் தெரியுமாம்….  இவனோட பேரெண்ட்ஸ் அடிச்சு பிடிச்சு இங்க தூத்துகுடி ஓடி வர….. அவங்கள அன்றில் வீட்டுக்கு தகவல் சொல்ல சொல்லி இருக்கிறான் ஆதிக்….

ஆதிக்கின் அப்பாதான் அழைத்தது…. பெரியம்மாவின் ஸ்கூல் மேட் அண்ட் ஃபெரெண்ட்தான் ஆதிக்கின் அம்மா….. கழுத்தைகட்டும் வகை நட்பு இல்லை என்றாலும் நன்றாகவே பழக்கம்.

ஆக திருமணவகை தகவல் பரிமாற்றம் எல்லாம் ஆதிக் வீட்டிலிருந்து அன்றிலின் பெரியம்மாவுடன்தான் நடைபெறும்…

ஆம் ஆதிக் வீட்டில் பெண் பார்க்க தொடங்கவும்….அன்றிலை குறித்து அவர்களுக்கு சொன்னதே பெரியம்மாதான்….ஆதிக் வீட்டிற்கும் அது மனதுக்கு பிடித்திருக்க…. இருபக்க  பெரியவர்கள் முழுக்க முழுக்க விரும்பிய திருமண ஜோடிதான் ஆதிக்கும் அன்றிலும்….

ஆக ஆதிக் அப்பா அன்றிலின் பெரியம்மாவுக்கு தகவல் சொல்ல….பெரியம்மாவோ முகம் கொடுத்தே பேசவில்லையாம்…. “நல்ல வேளை இந்த ஆக்சிடென்ட் மேரேஜ்க்கு முன்ன நடந்துச்சு….இதுவே கல்யாணத்துக்கு பிறகு நடந்தா என்ன ஆகி இருக்கும் எங்க பிள்ள நிலம……இனி இந்த கல்யாணம் பத்தி இங்க எதுவும் பேச்சு வச்சுகாதீங்க” என்றுவிட்டாராம்.

ஏன்????!!!!

அத பெரியம்மா இனிதான் சொல்லனும்…

ஆதிக்  பிழைப்பதே கஷ்டம் என்ற அந்நேரத்து சூழ்நிலைதான் காரணம் என ஆதிக் வீட்டில் அப்போது நம்பி இருக்கின்றனர்…

ஆதிக் முழு ஆரோக்கியத்தோடு வெளிவர அடுத்து மூன்று மாதகாலங்கள் ஆகியதாம்…. இதற்கு இடையில் ஒரு கட்டத்தில் அவன் காதுக்கும் பெரியம்மா சொன்ன தகவல் சென்று சேர்ந்திருக்க….

அவன் பெரியம்மா வீட்டிற்கு காருக்கு காம்பன்ஷேஷன் பணத்தோடு வந்திருக்கிறான்…. எப்படியாவது அன்றிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் எண்ணம்.

இவனைப் பார்க்கவும் அழுதுவிட்ட பெரியம்மா…..முதலில் மறுத்துவிட்டு பின் இவன் அழுத்தி கூறியதில் பணத்தை ஏற்றுக் கொண்டாலும்…..அன்றில் இப்ப உயிரோடயே இல்லன்னு சொல்லிட்டாங்களாம்.

????????????????????

அதற்கு இப்போதுவரை  இவளைப் போல ஆதிக்கிற்கும் காரணம்  யூகிக்க முடியவில்லை.

தொடரும்…

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 7