மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 6(2)

அவளது ஒருபக்கம் அந்த லேடி போலீஸ் இருக்க…அடுத்தபக்கம் இருந்த சுகந்தியைப் பார்த்தான் பஜ்ஜி…

“ஆன் டைம் என்ட்ரிண்ணா நீங்க….எங்க லேட்டாகிடுவீங்களோன்னு நினச்சுட்டே இருந்தேன்’ என்றபடி இவனுக்கு இடம் கொடுத்து நகர்ந்தாள் சுகந்தி… அவளுக்கும் அண்ணன் அவதாரத்தில் ஏதோ பதில் சொன்னவன்

“அவார்ட் வாங்குதே நம்ம அறிவுகொழுந்து…..அதுக்காக சர்ப்ரைஸா வரலாம்னு நினச்சேன்”  என இலகுவாக அன்றிலிடம் சொன்னபடி அவளுக்கு அடுத்த சீட்டில் உட்கார்ந்தான் பஜ்ஜி…

“அதுக்கு முன்னாலயே வந்து உட்காந்துருக்கான் இந்த ஃப்ராடு” அண்ணன்காரனின் வாயில் அழுந்த கடிபட்ட இவ்வார்த்தைகளில் க்ரோதம் கொட்டிக் கிடந்தது….

 

“வர்ற வரைக்கும் பயந்துட்டு இருப்பியேன்னுதான் விளையாடிட்டே வந்தேன்” பஜ்ஜி தொடர

ஒரு பெருமூச்சு எழும்புகிறது அன்றிலிடம்…. சொன்னதெல்லம் உண்மையாக இருக்க கூடாதா என ஒரு ஏக்கம் அடி மனதில் அறிவுகெட்ட தனமாய் எட்டிப் பார்த்து அமிழ்ந்து கொள்கிறது…

மீண்டுமாய் நிமிர்ந்து எதிரில் மேடையில் இருக்கும் ஆதிக்கைப் பார்த்தாள்..

இது வரை இருந்த பாலைவன முகபாவம் இல்லாமல்… அவன் இதழ்களிலும்.. இரண்டு கன்னங்களிலும்.. கண்டு கொண்டிருக்கும் கண்களிலும்.. சின்னதாய் சிதறத் தொடங்கி இருந்தது நிறைவின் தன்மையுடன்  ஒரு ரசனைப் புன்னகை….. இவளையும் பஜ்ஜியையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

இவங்க ஃப்ரெண்ட்ஷிப்ப அவனுக்கு பிடிக்கும்…அது உண்மைதான்…என நியாபகம் வருகிறது இவளுக்கு…

இதயத்தில் அதுவரைக்கும் ஆதிக் மீது இழுத்து பிடித்து சேர்த்து வைத்திருந்த கோபமெல்லாம் எங்கோ சென்று விழுகிறது புதை குழிக்குள்…. இல்லாமலும் போகிறது…

அதெப்படி இவன் கெட்டவனா இருக்க முடியும்? லாஜிக்கே இல்லையே…

அதெப்படி இவன் நல்லவனா இருக்க முடியும்….? அதுக்கும் லாஜிக்கே இல்லையே

“அந்த போலீஸ் இன்ஃபர்மேஷன் எல்லாம் நிஜம்தான்….ஸ்டேஷன்க்கு பேசிட்டேன்…. தெரிஞ்ச வரை அவனப் பத்தி நல்ல ரிப்போர்ட்தானாம் …ஜோஸப் சார் சொல்றார்…..ஆனா அவனோட ஆதி அந்தம்லாம் விசாரிக்க சொல்லி இருக்கேன்…. இங்க உங்க அப்பாட்ட சொல்லிட்டேன்…. ஜெயராஜ் அண்ணன் ஏஜென்சிக்கு கூப்டு அப்பா ஆள் அனுப்ப சொல்லி இருக்காங்க….. அண்ணாவோட க்ளோஸ் பசங்க ஏழு பேர்  செக்யூரிட்டிக்கு வந்துட்டு இருக்காங்க….. இவன இங்க இருந்து இன்னைக்கு சும்மா விடுறதா இல்ல…” கொஞ்சம் கெத்தும் நிறைய கொதிப்புமாய் பஜ்ஜி  சொல்லிக் கொண்டிருந்தான்…

ஒரு ‘ம்’ மட்டும் வந்து விழுகிறது இவளிடம் இருந்து…

“ப்ச்…..பழைய மாதிரி கலகலன்னு நீ பேசி ரெண்டு வருஷம் ஆகுது லூசு…. கொஞ்சம் முன்ன மெசேஜ் பண்ணியே அப்பதான் கொஞ்சமே கொஞ்சம் அப்ப போல இருந்த…”

இப்போது கண்ணில் எட்டிப் பார்த்த நீர் முத்தை தட்டிவிட்டுக் கொண்டாள் இவள்….நிமிர்ந்து ஆதிக்கைப் பார்த்தாள்…. அசல் சிலை போல் இறுகி இருந்தான் அவன்…

‘செய்ததெல்லாம் செய்துட்டு என்னமா உட்காந்திருக்கான்…..எனக்கு மட்டும் என்னவாம்…?’ நிமிர்ந்துவிட்டாள்  அன்றில்…

அடுத்த பக்கம்