மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 6

முகம் இறுக கண்கள் சற்றாய் சுருங்க கூர் பார்வை பார்த்தபடி நின்றிருந்த அன்றிலை மேடையில் இருந்த ஆதிக் இப்போது உட்காரும்படி கண்களால் சைகை செய்தான். போடா நீயாச்சு உன் கட்டளையாச்சு……. நான் போறேன்…. என்ன செய்துடுவன்னுதான் நானும் பார்க்கனே….

எந்த ரீசனுக்காகவும் ஒரு ஸ்டூடண்டை கேம்பஸ்ல வச்சு அவ்ளவு ஈசியால்லாம் அரெஸ்ட் செய்துட முடியாது….அதுவும் நான் இல்லீகலா எதுவுமே செய்யல…. என என்னதெல்லாமோ மனதில் வந்து போனாலும்….. அவன் சொன்னபடி அவளது இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள்  அன்றில்…..

‘என்னதான்  சொல்றான்னு பார்ப்போமே….’ என ஒரு எண்ணமும்….. அதையும் மீறிய வெகு ஆழ மனதில் ‘எதாவது சொல்லி அவன் பக்கம் தவறேதும் இல்லை என காண்பித்தவிட மாட்டானா’ என எழுந்த ஏக்கமும் அதற்கு காரணம்.

ஆனால் அந்த உணர்வுகளுக்குள் மொத்தமாய் தன்னை தொலைத்துவிடவும் அவள் தயாராக இல்லை… எடுத்து பேசினால் எங்க தன் மொபைலை பக்கத்தில் நிற்கும் லேடி போலீஸ் பிடிங்கி வச்சுப்பாங்களோ என்ற எண்ணத்தில் ஹேண்ட் பேக்குக்குள் வைத்தபடியே அவசரமாக பஜ்ஜிக்கு மெசேஜ் அனுப்பினாள்.

‘ஆதிக் இங்க அதிரூபன்ற பேர்ல ஐபிஎஸ் ஆஃபீசர் போல வந்திருக்கான்…..என்ன  ஃபங்க்ஷன் ஹாலவிட்டு வெளிய போக விடாம அரெஸ்ட் பண்ணி வச்சுறுக்கான்…  பங்க்ஷன் முடியவும் என்ன கிட்னாப் செய்ய போறான்..’

பஜ்ஜியின் குடும்ப பிசினஸ் சென்னையில்தான் இயங்கி வந்தாலும்…. ஆதிக்கை திருநெல்வேலியில் சந்தித்தார்களே அப்போதிருந்தே அவன் அந்த பகுதிகளில் ஆர்டர் எடுத்து  வேலை செய்து கொடுக்க துவங்கி இருந்ததால்….ஒருவகையில் அவன் அங்கேயே தங்கிவிட்டான்….

ஆக எப்டியும் அவனால இப்பவே இங்க சென்னைக்கு வந்து ஹெல்ப் பண்ண முடியாது…. இருந்தாலும் அன்றிலுக்கு அவனிடம்தான் முதலில் விஷயத்தை சொல்லி என்ன செய்யலாம் என கேட்க தோன்றியது…

இங்கு விழா துவங்கியது….

சில நிமிடங்களில் பஜ்ஜியிடம் இருந்து ரிப்ளை…. ‘ போலீஸோட Anti human trafficking unit (ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு)க்கு கான்டாக்ட் செய்ய ட்ரைப் பண்ணேன் அனி….அங்க என்னனா அந்த யூனிட் இன்சார்ஜாதான் இந்த அதிரூபன் ஜாய்ன் செய்துருக்கார்னு சொல்றாங்க…’

‘கொடும ’  இது இவளோட ரிப்ளை..

“ லாஸ்ட் த்ரீ இயர்ஸா கல்கட்டால  குழந்தைங்க கடத்தலுக்கு அகெய்ன்ஸ்ட்டா ரொம்ப எபெக்டிவா வர்க் பண்ணாராம்…. போலீஸ் டிபார்ட்மென்ட்ல  தெரிஞ்சவங்க விசாரிச்சு சொல்றாங்க…’ பஜ்ஜியிடமிருந்து மெசேஜ்

‘ஹ்ம்ம்’ இது இவள் பதில்

‘என்ன ஹ்ம்ம்?’ பஜ்ஜியின் கேள்வி

அன்றில்:-    ஃப்ராடு ஆஃபீஸர்ஸ்கெல்லாம் அப்டிதான் ரொம்ப நல்ல நேம் இருக்கும்’

பஜ்ஜி :-      ‘இருக்கலாம்தான்…இல்லனு இல்ல….’

அன்றில்:-    ‘என்னடா சொல்ல வர?’

பஜ்ஜி :-       ‘ஒரு வேள நம்ம கார அவர்ட்ட இருந்து யாரும் திருடி இருந்தா அப்டின்னு

இப்ப தோணிச்சு…’

அன்றில :-    ‘உன்ன கொன்னு புதச்சுடுவேன்….’

பஜ்ஜி :-       ‘ஆ!!!”

அன்றில் :-  ‘அப்டியே திருட்டு போயிருந்தாலும் அவர் ஏன்டா தலை மறைவாகனும்…’

பஜ்ஜி :-     ‘ காருக்கு காம்பன்ஷேஷன் கேட்போமே….அதுக்கு காசு இருந்திருக்காது….ஏழை

straight forward officer….அப்டின்னு யோசிக்க தோணுது இப்ப…’

அன்றில்:-    ‘இன்னைக்கு லஞ்ச் உன் மூளை ஃப்ரெய்தான்’

பஜ்ஜி :-      ‘ மம்மீ!!!!’

அன்றில்:-    ‘அப்றம்?’

பஜ்ஜி :-     ‘அதான் முன்னமே நீ சொன்னியே…..நாம வேற ஒரு ப்ரபோசல அவர் கூட

குழப்பிகிட்டது  போல அவரும் குழப்பி இருப்பாரா இருக்கும்..’

அன்றில்:-    ‘ஓஹோ’

பஜ்ஜி:-       ‘இப்பதான் முக்கியமான பாய்ண்ட்’

அன்றில்:-     ‘ என்ன..?’

பஜ்ஜி:-        ‘ மன்னிப்பாது கேட்கலாம்னு அவர் நினச்சுறுப்பார்தான்…..ஆனா வந்து  அவர்

கேட்றுந்தார்னா….உன்னல்ல கல்யாணம் செய்ய வேண்டி

இருந்திருக்கும்….அதான் ஆசாமி க்ரேட் எஸ்கேப்’

அன்றில் :-   ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…’

இவள் ஆக்ரோஷத்துக்கு ஆப்ட் எக்‌ஸ்ப்ரெஷன் தேடிக் கொண்டு இருக்கும் போது…..இவள் அருகில் வந்து நின்றான் பஜ்ஜி

கண்ணோடு வாயும் திறக்க அசந்து போய் அன்றில்…. பெருமளவு ஆறுதலாகவும் உணர்ந்தாள்.

அடுத்த பக்கம்