மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (5)

இப்போது தன்னை சமனப் படுத்த முயன்று சின்னதாய் சிரித்துக் கொண்டாள்.

“என்னதான்பா நினச்சுட்டு இருக்கீங்க? உங்கம்மாட்ட நான் ஹர்ட் ஆகிட்டேன்னு உங்கட்ட வந்து சொன்னனா?” அழுத்தம் திருத்தமாய், அதே நேரம் முழு நிதானமாய் புன்னகையோடே இவள் துவங்க,

இத்தனை நேரத்தில் முதன் முறையாக இவள் கண்களை சந்தித்தான்.

“நம்ம குழந்தைல ஐம்பது பெர்சன்டேஜ் என் ஜீன் இருக்கும்னா, ஐம்பது பெர்சன்டேஜ் உங்க ஜீன் இருக்கும், அதுல உங்க அம்மாட்ட இருந்து வந்த ஜீனும் இருக்கும்.

ஆக பேபியோட உடம்புல இருந்து குணத்துல இருந்து எல்லாத்திலும் உங்க அம்மாவும் இருக்க, குழந்தை வேணும்னு அவங்க நம்மட்ட கேட்க கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்?

என்னைப் பொறுத்தவரை மத்த யாருக்கும் இதுல தலையிட உரிமை இல்லைதான். ஆனா நம்ம ரெண்டு பேர் அம்மா அப்பாவும் இதெல்லாம் பேசலாம்தான்.

என்ன, அது அவங்க சஜசனா இருக்கணுமே தவிர, கட்டளையாதான் வரக் கூடாது.

உங்கம்மான்னு இல்ல எங்கம்மானாலும் இந்த இயர் நீ குழந்தை வச்சுதான் ஆகணும்னு சொன்னாங்கன்னா உங்க வேலையைப் பார்த்துட்டு போங்கன்னுட்டு வந்துருப்பேன்,

அத்தை இன்னைக்கு பேசினது ஒரு கேக்ஷுவல் டிஸ்கஷன்” அவள் துவங்கியே அதே தொனியில் அதே நிதானத்தில் அந்தப் புன்னகையோடே முடிக்க,

அவன் உள்ளுக்குள் என்னவானானோ?

“நானும் பார்த்துட்டே இருக்கேன் எதுக்கெடுத்தாலும் ஐஸ் வைக்கிறேன்னு சொல்லிடுறீங்க?” இதுவும் வெகு வெகு நிதானமான கோபமற்ற குரலில்தான் புன்னகைத்த இதழில்தான் கேட்டாள்.

ஆனாலும் உண்மையில் இது எகிறல்தானே!

சொன்னவள், “இப்போதைக்கு இதயெல்லாம் பில் பண்ணுங்க, எனக்கு இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டி இருக்கு” என்றபடி எடுத்து வைத்திருந்த மூன்று புடவைகளை அவன் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.

தொடரும்…

Advertisements

6 comments

  1. Aha chella kutty clever matum ila periya manushiya porups agitangadoi!bajji paya unaku en inthe vendatha pidivatham?valakam pola sarander agiden!

Leave a Reply