மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (3)

அடுத்து பிஜுவும் அவன் அம்மாவும் பேசி முடித்து எப்போது வெளி வந்தார்களோ, ராதிக்குத் தெரியாது. அவள் கிளம்பி மருத்துவமனை வந்திருந்தாள்.

ஏற்கனவே பிஜுவின் அப்பா வெளியே சென்றிருந்ததால், இன்று இவள் ஸ்கூட்டியில் செல்வதை தடுத்து நிறுத்த யாரும் இல்லை.

இவளிடம் குட்டியாய் ஒரு திட்டம் இருந்தது அதற்கு ஸ்கூட்டி தேவையாயும் இருந்தது.

என்னதான் இன்னும் பிஜு இவளிடம் சேர்ந்துவிடவில்லை என்றாலும், இவள் மனதுக்கு நேற்று போல் தவிப்பாய் இல்லை.

சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றிவிட்டிருந்தது.

அதோடு முன்ன விட சண்டைக்கு அப்றம் இன்னும் அதிகமா சேர்ந்துப்பானாமே!

நிதானமாய் யோசித்தால் அது 100% உண்மை என்றுதான் படுகிறது.

ஹாஸ்பிட்டல்ல வச்சு ஸ்கூட்டி ஹேண்ட்பார கோபத்துல உடச்சவன், அடுத்து பத்து நிமிஷத்துக்குள்ள “அது ஜஸ்ட் வென்ட் அவ்ட் செய்றதுடா” என கெஞ்சலையா?

அங்கு தொடங்கி அன்று இரவு அவன் கைக்குள் போய் இவள் சுருண்டது வரை எத்தனை கோபம் அதைவிட எத்தனை கொஞ்சல்ஸ், ஏன் மறுநாள் குளியலறையில் வந்து என்னமாய் வம்பு செய்து வைத்தான்.

ஸோ சீக்கிரம் சேர்ந்துப்போம்தான்.

ஆனா அந்த சீக்கிரம் எப்படா வரும்?

இந்த நினைவுகள் தந்த ஒரு நிலையிலேயே அன்றைய நாளைக் கடந்தவள், மாலை ஷிப்ட் முடிந்து வெளியே வரும் நேரம் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.

பூவாளி சாரல்கள் கொடி கொடியாய் கோடி கொட்டியது பெண்ணாள் வெண்பனி உள்ளம்பால்.

சிலீரும் கலீருமாய் அவள்.

ஆம் பிஜு பெருமகனார் இவளது ஸ்கூட்டி அருகில் நின்றிருந்தார்.

காத்திருக்கிறான் இவளுக்காக.

பூ வாசத்தோடு புரியா ஒரு புயல் இவளுக்குள் கடைந்தெழும்ப,

அதில் புது ரோஜா நிலைக்கு பெண் மனம் பிறப்பெடுக்க

அங்கு இட்ட இடம் தொட்ட பதம் எங்கும் பன்னீர் கசியல்களாய் காதல்ச் சாரம்.

‘டேய் பிஜு பையா உன்னை இன்னைக்கு பிச்சு பிச்சு பஜ்ஜி போடலையோ, நாம கல்யாணம் செய்ததுக்கே அர்த்தம் இல்லைடா’ மனம் துள்ளத் துள்ள அவனை நோக்கி நடந்தாள்.

அவனோ இதுவரைக்கும் இவள் வர வேண்டிய வழியையேப் பார்த்தபடி நின்றிருந்தவன், இவள் வருகையைக் காணவும் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.

மணி ஏழுதான் ஆகி இருந்தது.

அவனது அப்பா போகச் சொன்னதுக்காகக் கூட அவன் வந்திருக்கலாம் என்று ஓடுகிறது இவளுள் ஒரு நினைவு.

இல்லை பொதுவாய் இரவில் எப்போதுமே கார்தானே இவளுக்கு, ஆக தனியாய் வருவாளே எனதான் வந்திருப்பான்.

இவளால் அவனது உண்மை மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

பன்னீர் பதத்தில் பாலாடிக் கொண்டிருந்த மனதோடே வண்டியை நோக்கி நடந்தாள் ராதி.

அவனோ இன்னுமே அதிகவனமாய் இவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

‘பேசாமலே லவ் பண்றதுன்னு முடிவு செய்துருக்கியா பஜ்ஜி பையா? அதையும்தான் பார்ப்போம்’ என்றபடி இவள் வந்த வழியே திரும்ப,

“ராதி” என அழுத்தமாக வந்து விழுந்தது அவனது அழைப்பு.

இவள் அதுதான் சாக்கென அசையாமல் நின்றாள். அவன் புறம் இன்னும் திரும்பவில்லை.

“ப்ச் அம்மாவுக்கும் உனக்கும் akward argument எதுவும் ஆகிடக் கூடாதேன்னுதான் உன்னை அங்க இருந்து போகச் சொன்னேன், மத்தபடி உன்னை விட்டுக் கொடுக்கிற மாதிரி எண்ணமே கிடையாது” என்றான் முதல் விளக்கமாய்.

“ஸ்டில் ஹர்ட் செய்துருந்தேன்னா சாரி” அவனது தனித்தன்மையை காண்பித்தான். ஆனால் இன்னும் உர்தான்.

“ஆனா இப்படி தொட்டதுக்கெல்லாம் நீ வீட்டுக்கு வர மாட்டேன்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல” இப்போது கடித்து துப்பப்பட்டது அவன் வார்த்தைகள்.

அவன் எதற்காக விழுந்தடித்து ஓடி வந்திருக்கிறான் என்பது இவளுக்குப் புரிந்து போனது.

இன்று அவன் அம்மா முன்பு அதட்டினானே அதுவும், அவன் அம்மா குழந்தை விஷயத்தை இவளிடம் பேசியதும் இவளுக்கு வெகு வேதனையாக இருக்கும் என தோன்றி இருக்கிறது அவனுக்கு.

அது தாங்காமல்தான் வந்து நிற்கிறான்.

இந்தப் புரிதலில் இவள் மனம் இன்னுமே மென்பட்டுப் போக,

ஆனால் அதற்கு முந்திய அவனது இவள் மீதான கோபம் இன்னும் ஆறி இருக்கவில்லை என்பதும் தெரிகிறதுதானே,

இவள் என்ன செய்தாலும் வீட்டுக்கு வர மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பதாகவே அவனுக்குப் படுகிறதே!

ஆக இவள் நல்லதை சொல்லப் போனாலும் காலை போல் மீண்டும் சீறுவான் என்பதும் தோன்ற, அதனால் எதையும் வாயாடாமல் இருப்பதே நலம் என்ற நிதானத்தில்,

மௌனமாகவே போய் இவள் ஸ்கூட்டியை எடுக்க,

எதுவுமே சொல்லாமல் வண்டியில் ஏறிக் கொண்டான் அவனும்.

முன்பு போல் இவளைப் பிடித்தும் கொள்ளவில்லை.

இவள் மீது சற்றும் பட்டுவிடாமல் பிரிவினை காத்தே அமர்ந்திருந்தான்.

‘சின்னப்புள்ள கோபத்துல இருக்குba’ மனதுக்குள் கமென்டடித்தபடி வண்டியை செலுத்த துவங்கினாள் மனைவி.

அடுத்த பக்கம்

Advertisements