மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 19 (6)

அடைத்துக் கொண்டு அழுகையும் வருகிறது, சுர் சுர்ரென கோபமும் வருகிறது ஆராதனாவுக்கு.

நான் தப்பா நினைச்சது மட்டும்தான் இவனுக்கு கண்ணுக்குத் தெரியுது, இவன் எந்த விளக்கமும் சொல்லாமலே புரிஞ்சுகிட்டு வந்து நான் கெஞ்சிகிட்டு இருக்கது கண்ல தெரியுதான்னு பாரு.

எரிச்சலும் சுயபட்சதாபமும் எடைக்கு எடையாய் ஏறிக் கொண்டது.

கண்டிப்பா இவனுக்கு என்னை சுத்தமாவே பிடிக்காம போய்ட்டு.

மனம் மாறி மாறி முள் வைத்துக் குத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுடச் சுட பொங்கி வரும் விழி நீரை துடைத்து துடைத்துவிட்டபடி விறு விறுவென கிளம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

அப்போது கதவை மெல்லமாய் தட்டிவிட்டு உள்ளே வந்தது இவளது மாமியார். கையில் சின்ன சின்ன பெட்டிகளோடு வந்தார்.

அவர் பார்க்கும் முன்னும் முகத்தைத் துடைத்து ஒருவாறு தன்னை சமனப் படுத்திக் கொண்டாள் இவள்.

அவரோ கையிலிருந்த பெட்டியே கவனமாய் வந்தவர்,

“திடுதிப்னு கிளம்பினோம்லம்மா அதான் கடைக்கெல்லாம் எதுவும் போக முடியல, இது ரத்தி மைசூர் போனப்ப பார்த்தாளாம் உனக்கு நல்லாருக்கும்னு வாங்கினா போல” என ஐம்பொன் கொலுசிருந்த பெட்டி ஒன்றை ஆராதனாவிடம் கொடுத்தார்.

ரத்தி பிஜுவின் அக்கா.

“இது நானும் மாமாவும் போன மாசம் கொச்சின் போய்ருந்தோம், அப்ப வாங்கினேன், எனாமல்ல ஜெய்ப்பூர் வர்க்காம், ஸ்க்ரூ டைப்னதும் எப்ப வேணாலும் போட்டுக்கலாம்னு ரொம்ப பிடிச்சுது”

கையிலிருந்த இன்னொரு பெட்டியை திறந்து அவர் காண்பித்தது இரண்டு தங்க வளையல்களை.

உண்மையிலேயே தனித்தன்மையும் வெகு அழகுமாய் கண்ணைப் பறித்தது அது.

“வளைகாப்பு வர்றப்ப கொடுக்கணும்னு நினச்சேன், சரி அதுக்கு இன்னும் நல்லதா அமையும், இத இப்ப போட்டுக்கோ” சொல்லியபடி அவர் வளையல்களை எடுக்க,

அவர் எதைப் பேசப் போகிறார் என மருமகளுக்கு மொத்தமாகவே புரிந்தது.

மற்ற நேரம் எப்படியோ, இப்போது இருக்கும் இந்த மனநிலையில் இவளுக்கு இந்த வகைப் பேச்சு இன்னுமே கொடுமையாக இருக்கிறது.

அவன் இவட்ட நின்னு பேசக் கூட தயாரா இல்லை, இதில் குழந்தையாம்.

ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.

தொடரும்…

Advertisements

9 comments

  1. Valakam pola pinitel ka…biju s feelings are well expressed bijuuuu solo sweet …and aradhana oda point uhme rite than.. As usual super

  2. Semma semma Ji … narration super… Aarava partha pavamaga irukku… Bijju paavam ponnu romba azhavidathe…

Leave a Reply