மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 19(5)

இவள் எத்தனை ப்ரயத்தனம் செய்து அவனை சந்திக்க ஓடி வந்தால் அவன் எத்தனை திட்டமிட்டு இவளை தவிர்த்திருக்கிறான்?!

முழு மொத்தமாய் விலக்கி வைக்கப்பட்டது போல ஒரு உணர்வு. கடும் ஏமாற்றம். வார்த்தைக்குள் வர இயலாத தவிப்புகளும் குமுறல்களும்.

கூடவே அந்த மிருதுளா சொல்லிய வார்த்தைகளும் மனதுக்குள் ஓட, ஒரு மூச்சு அழத்தான் வருகிறது இவளுக்கு.

அது சற்று நேரம் தொடர, அவன் தூங்குவதும் அருகில் இருட்டில் இவள் அமர்ந்து அழுவதுமான இந்த நிலை சுயபட்சாபத்தை வேறு கொண்டு வந்து தருகிறது.

இவள் அம்மா அப்பாவோ இல்ல பெஸ்ட் ஃப்ரெண்டோ, இவள் இப்படி அழுதுட்டு இருக்கிறதுக்கு இதுக்குள்ள எந்திரிச்சுருக்க மாட்டாங்களா?

இவனுக்கு எவ்ளவு பிடிக்காம போய்ருந்தா இப்படி கண்டுக்காம தூங்க முடியும்? என இன்னும் எதேதோ ஓடுகிறது.

இன்று காலை அவன் அம்மா அப்பா வந்ததின் காரணமாய் அவன் சீக்கிரமே விழித்துவிட்டான், மாத்திரை வேறு போட்டிருக்கிறான் அதனால்தான் தூங்கி இருப்பான் என இவள் என்னதான் தன்னை சமாதானப் படுத்த முயன்றாலும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

இதில் அந்த மிருதுளா கூட முதல்ல நல்லாத்தான இருந்தா, இவள் பேசின ஒரு வார்த்தைய தப்பா எடுத்துக்கிட்டதாலதான அவளுக்கு இவள சுத்தமா பிடிக்காம போய்ட்டு,

அது போலதான பொதுவா எல்லோருமே! என்னதான் நம்மள பிடிக்கும்னாலும் நாம செய்தது எதாவது ஹர்ட் செய்துட்டா மனசளவில விலகிடுவாங்கதான?

அப்ப பிஜுவும் இனி அப்படித்தானா?

இனி என்றுமே பேசமாட்டானா அவன்?

பேசினா கூட கடமைக்குன்னுதான் பேசுவானா இருக்கும் என என்னென்னமோ சிந்தனை சிலுவைகள் வேறு.

வெகு நேரம் தூங்க முடியாமல் தவித்தபடி கிடந்தாள்.

எப்போது தூங்கினாளோ காலையில் கண் விழிக்கும் போது அருகில் அவன் இல்லை.

இவள அவாய்ட் பண்றதுக்காக சீக்கிரம் எழுந்து போய்ட்டான் போல.

 

இரவே அத்தனையாய் அழுதுவிட்டதால் போல இப்போது அவன் மீது கோபமும் எட்டிப் பார்க்கிறது இவளுக்கு.

இதில் இவள் குளித்து முடித்து குளியலறையை விட்டு வெளியே வரும் போது சரியாய் இவர்கள் அறைக்குள் வந்தான் அவன்.

இவளை நிமிர்ந்து கூடப் பார்க்காது அவன் திரும்பவும் வெளியே செல்ல முயல,

சட்டென வாசலின் குறுக்காக கை நீட்டி அவனுக்கு வழியை அடைத்தாள் இவள்.

இப்போது என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“ஆக இனி என்ட்ட பேசவே மாட்டீங்க?” இவள் கேட்க,

அவன் முகத்தில் பச்சை மிளகாய்த்தனம் இன்னுமாய் படர்ந்தது.

கதவை மூடி தாழிட்டு வைத்தாள் இவள். இவர்கள் பேச்சு வெளியே கேட்க கூடாதென்பது இவளுக்கு.

அவனோ இதுவும் எதோ பெருங்குற்றம் என்பது போல் இன்னுமாய் முறைத்தான்.

“என்ன பேசணும்ன்ற? மூனு வருஷம் கழிச்சு கல்யாணம்னத, இல்ல உன்னப் பார்த்துகணும் அதனால உடனே கல்யாணம்னு மாத்தினேனே, அதெல்லாம் உன்னையும் உன் வீட்டையும் ஏமாத்த நான் போட்ட ட்ராமான்னுதான நீ நினைச்ச?

அப்படில்லாம் கூட என்னால நடிக்க முடியும், நாடகமாட முடியும்னு உனக்கு நம்ப முடிஞ்சுருக்குல்ல?

அப்றம் உன்ட்ட என்ன பேசி என்ன?

அப்படி என் வீடு உன் வீடுன்னு எல்லாரையும் ஏமாத்தி என்ன செய்யப் ப்ளான் செய்தேன்னு நினைச்ச நீ? எப்படி யோசிச்சாலும் புரியல எனக்கு,

நான் உன்னை என்ன செய்துடுவேன்னு நீ நினைச்சுருந்தா வீட்டுக்கு கூட வராம இருந்துருப்ப?”

அவன் கேட்க கேட்கத்தான் விஷயம் அவனுக்கு யோசிக்க யோசிக்க என்னதாயெல்லாம் தோன்றி இருக்க முடியும் என்பதே இவளுக்குப் புரிய,

“ஐயோ அது அப்படி இல்லப்பா, காலேஜ்ல வச்சு உங்களுக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்காது, இதுல நான் அன்றில் அண்ணிக்கு ரிலடிவ்னதும் நல்லா பேசினீங்க,

அன்றில் அண்ணி நம்ம கல்யாணத்துக்கு கேட்டதும் நான் பிடிக்காத பொண்ணுனாலும் அண்ணிக்காக சரின்னு சொல்லிட்டீங்க, அதான் மூனு வருஷம்னு டைமெல்லாம் கேட்டீங்க,

அடுத்து வீட்ல உள்ள எல்லோரும் அவ்ளவு டைம் முடியாதுன்னு சொல்லவும் உடனே கல்யாணம் வச்சுக்க சரின்னு சொல்லிட்டீங்கன்னு நினச்சேன்”

இவள் அவசர அவசரமாய் விளக்கினாள்.

அவனோ முன்னிலும் முறைத்தான்.

“ஆக எப்படிப் பார்த்தாலும் நான் பொய் சொல்லி ஏமாத்திருக்கேன்னுதான நினச்சுருக்க, பொய் சொல்றவன்ட்ட பேச என்ன இருக்கு” என அதையும் இப்படியாய் முடித்த அவன்,

“போடுறது சண்டை, இதுல பகல்ல கூட ரொமான்ஸ் பண்ற மாதிரி கதவ மட்டும் பூட்டி வச்சுக்கிறது” என முறுமுறுத்தபடி சட்டென கதவை திறந்து கொண்டு போய்விட்டான்.

அடுத்த பக்கம்

Advertisements