மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 19 (2)

“சரி இப்ப சொல்லு நேத்து வரைக்கும் அப்படி என்ன கோபம்? அப்றம் அது எப்படி சரியாச்சுது?” வெகு வெகு சாதாரணமாகவே விசாரித்தான் பிஜு இப்போது.

அவள் இருந்த நிலையில் அவன் கேள்வியைப் புரிந்து நடப்புக்கு வர சில நொடிகள் பிடித்தன பெண்ணிற்கு.

“அது” என எப்படி எதிலிருந்து துவங்க என யோசித்தவள்,

“அன்றில் அண்ணி என்ன சொன்னாங்க? அத வச்சு நீங்க எப்படி என்னை மேரேஜ் செய்ய முடிவு செய்தீங்கன்னு குழப்பமா இருந்தது” என அங்கிருந்து துவங்க,

அவன் முகத்தில் முடிச்சு விழுகிறதோ? ஆனாலும் சின்ன சிரிப்புடனேயே,

“அவ என்ன சொன்னதில் உன்னை மேரேஜ் செய்ய முடிவு செய்திருப்பேன்னு நீ இப்ப கண்டு பிடிச்ச?” எனக் கேட்டான்.

இவளிடம் இதற்கு பதில் இருக்கிறதாமா என்ன?

“அது எதாவது ஒரு பாசிடிவ் ரீசன் உங்கட்ட இருக்கும்னு இப்ப தெரியும்” என விடை கொடுத்தாள்.

அது என்ன காரணம் என அவன் இப்போது சொல்வான் என எதிர்பார்போடு அவனைப் பார்த்திருக்கவும் செய்தாள்.

“சரி பொண்ணு கொஞ்சம் ரொம்பவே ராங்கினாலும், அவ அம்மாப்பாவுக்கு ஒரே பொண்ணு, இத்தன வருஷம் அவ அப்பா சேர்த்தது, இனி சேர்க்கப் போறதுன்னு அத்தனையும் நமக்குத்தான்னு ஒரு ஐடியா வந்துச்சா, அதான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன்”

அவன் கண்களை உருட்டி கிண்டலாக சொல்லிக் கொண்டு போக,

ஒரு அடி வைத்தாள் அவனுக்கு.

இவ்வளவு தீவிரமா இவள் பதில் எதிர்பார்த்துகிட்டு இருக்கிறப்ப, இவனுக்கு விளையாட்டு கேட்குதாமா?

“சரி அப்ப இப்படி வச்சுக்கலாம், பொண்ணப் பார்க்கவும் பிஜுப் பையன் ப்ளாட், எப்படியும் இந்த ஃபிகர கரெக்ட் பண்றோம்னு ஒரே ப்ளானிங், ப்ளாட்டிங், சதியிங். கட்டம் கட்டி ஆர்மிகாரர் பொண்ண தூக்கிட்டான்ல”

அவன் அடுத்த விதமாய் சீண்ட,

இப்போதும் “ஹும் போங்கப்பா, விளையாடினது போதும், உண்மைய சொல்லுங்க” என்ற சிணுங்கலுடன் அருமை மனைவியின் கையால் அடி ஒன்று கிடைத்தது.

“என்ன சொல்ல சொல்ற? ஆரா நம்ம சொந்தக்காரப் பொண்ணு, சின்ன வயசில் இருந்து ஆதிக்கு தெரியும் அவளப் பத்தி,

ரொம்ப கட்டுப்பெட்டின்னும் இல்லாம, சோசியலைசிங்ன்ற பேர்ல பப் பார்டின்னும் சுத்தாம நம்ம வீட்டு வேவ் லெந்ன்த்ல இருக்ற கலகல டைப்.

உனக்கு நம்ம வீட்டுக்குன்னு எல்லோருக்கும் அவ கூட ஒத்துப் போகும், அதனால உன் உப்பு பெறாத உப்மா சண்டைய மறந்துட்டு கல்யாணம் செய்துக்கோன்னு அனி சொன்னா,

ஆமா என்ன இருந்தாலும் தெரிஞ்ச பொண்ண மேரேஜ் செய்றது பெட்டர்னு நானும் உன்னை மேரேஜ் செய்துகிட்டேன் அப்படின்னு சொல்லனுமா?”

சின்னச் சிரிப்புடன்தான் அவன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாலும்,

ராதிக்கு சட்டென ஒன்று புரிந்தது.

இப்படி ஒரு பதிலைத் தவிர அவன் வேறு எதைச் சொன்னாலும் நம்பும் நிலையில் அவள் இல்லை.

அடுத்த பக்கம்

Advertisements