மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 19

சுவரில் முகம் வைத்து அவன் புறம் திரும்பாமல் நின்று கொண்டு

“சத்தம் போடுவேன்”

“அம்மாவ கூப்ட்டுடுவேன்” என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தாள் இவள்.

 

“அம்மா அம்மா ராதி கூப்டுறா என்னனு கேளுங்கமா” வேற யார் இவன்தான்.

ஆனால் சத்தமாய் சொல்லாமல் குனிந்து அவள் காதருகில் கிசுகிசுத்தான்.

“அம்மாட்ட என்ன சொல்வ ராதி?” என அப்பாவி தொனியில் விசாரிக்கவும் செய்தான்.

ராதிக்கோ ஒருபக்கம் இன்னுமே படபடக்கத்தான் செய்கின்றன என்றால் மறுபக்கம் வெட்கம் கூடவே சிரிப்பும் வருகின்றது.

அடுத்து அவள் கழுத்தை நோக்கி இவன் அதரங்கள் இறங்கத் துவங்கிய நேரம்,

சட்டென இவன் புறமாய் திரும்பி நின்றாள் அவள்.

“எனக்கென்ன சோப்பு உள்ள போனா உங்களுக்குத்தான் ஸ்டொமெக் அப்செட் ஆகும்” கெத்து ப்ளெஸ் குறும்பு இரண்டுமே திரும்பி இருந்தது அவளிடம்.

கழுத்து கன்னம் என எங்கும் இன்னும் சோப் சரியாய் கழுவப் பட்டிருக்கவில்லை.

அவனுக்கு பொதுவாகவே கெமிக்கல் எதன் வாசம் கூடப் பிடிக்காது.

ஆக நிச்சயமாய் நிறுத்திக் கொள்வான் என ஒரு நம்பிக்கை. அதனால் தைரியமாகவே சீண்டினாள்.

நடக்கும் எதுவும் பிடிக்கவில்லை என்று இல்லை ராதிக்கு. வெகுவாகவே பிடித்திருக்கிறது.

ஆனால் முதல் முறையாய் அவளது சுய எல்லைதாண்டி அவன் வர இருக்கிறான். அதற்கு அவள் தன்னை விட்டுக் கொடுத்தாக வேண்டுமே, அதை எப்படிச் செய்ய எனத் தெரியாத இனம் புரியா தடுமாற்றம்.

அதை இப்படிக் கையாள,

அவனோ “தேங்க்ஸ் ஃபார் த இன்ஃபோ” என்றபடி இப்போது இவளது இதழைப் பார்த்தான்.

குளிக்கிறவங்க வாய்க்கு சோப் போடுவாங்களா என்ன?

வாயக் கொடுத்து எவ்ளவு பெரிய வம்ப இழுத்து வச்சுருக்கோம் என்பதே மனைவியானவளுக்கு அப்போதுதான் புரிகின்றது.

ஒரு நொடி பே என முழித்தாலும் அடுத்து அவனிடம் எதிர்த்து நிற்கவும் அவளுக்கு இஷ்டம் இல்லை.

கண்களை மாத்திரம் மூடிக் கொண்டாள்.

அவனோ இவள் புரிதலுக்கு எதிர்பதமாய் இவளது இமையில்தான் இதழ் சேர்த்தான்.

இவள் மெல்ல விழி மலர்த்திப் பார்க்க,

“முதல் முதல்ல செய்றத பூட்ட உடச்சிட்டு வந்து செய்தேன்னு ட்ராக் ரெக்கார்ட் வேண்டாம்” என்றவன்,

“வம்பிழுத்தல்ல அதான் நாமும் கொஞ்சம் வச்சு செய்வோம்னு நினச்சேன், இதுக்கே பயந்துட்டு பாப்பா” என்றபடி விலகிக் கொள்ள,

முழு மொத்தமாய் அவனின் அதர முற்றுகையை எதிர்பார்த்திருந்தவள், ஒரு நொடி என்ன செய்வதெனத் தெரியாமல் பேந்த விழித்தாள்.

சற்றும் அவள் எதிர்பாரா இந்த நேரம், சரியாய் அவளின் இதழில் இறங்கினான் அவன்.

அவனாய் விலகும் வரை அந்த ஆழ்ந்த அருகாமையை ஆசித்தே அனுமதித்தவள், அடுத்து வைத்தாள் இரண்டு அடி.

செல்லமாகத்தான்.

“இந்த ட்ராக் ரெக்கார்ட்தான் எனக்குப் பிடிச்சுருக்குன்னு சொன்ன உன் மைன்ட் வாய்ஸ் காதுல கேட்டுச்சு” அவள் கொடுத்ததை சிரித்தபடியே வாங்கிக் கொண்டு இவன் விளக்கம் சொல்ல,

“போடா” என இவள் அவன் மார் மீதே அடைக்கலப்பட்டாள்.

இரு நொடி இதமான அழகிய அமைதி நிலவியது அங்கு.

அடுத்த பக்கம்

Advertisements