அங்கு ஆராதனா வீட்டில், அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆமாம்மா அவங்களுக்கு இன்னைக்குன்னு பார்த்து அந்த துபை க்ளையன்ட் வந்து ஆஃபீஸ்ல உட்காந்துட்டார்”
“….”
“ம் வந்துடுவாங்க, எப்படியும் 10.30க்குள்ள கண்டிப்பா வீட்ல இருப்பாங்க”
“….”
“அதெல்லாம் நானே உப்மா நூடுல்ஸுன்னு”
“…”
“இதுல என்னமா இருக்கு இன்னைக்கு இல்லைனா நாளைக்கு நல்ல ப்ரியாணியா சமைக்க சொல்லிடுறேன் உங்க மாப்ளைக்கு ஓகேவா?”
“….”
“அதனிக் குட்டி தூங்கப் போயாச்சு”
பிஜு இப்போது அலுவலகத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தான். அபித்தான் அழைத்தது.
“என்னடா தம்புடு, இப்பதான் டைம் கிடச்சுதா பேச?”
“….”
“நன்றி நன்றி”
“…”
“அது இன்னைக்கு போக முடியாம போய்ட்டுடா, இந்த வீக் என்ட்ல ப்ளான் போடணும்”
“..”
“ஏன்ட்டா இதையே கேட்கீங்க எல்லோரும், அதெல்லாம் ராதி புரிஞ்சுப்பா”
“….”
“என்னது? குற்றாலமா? நோ நோ, நான் வரல”
“….”
“நைட் அருவியப் பார்க்க நல்லாதான் இருக்கும், எனக்கும் பிடிக்கும், ஆனா வேண்டாம்”
“….”
“டின்னர்ல புரிஞ்சுப்பானா அதுக்காக இதுலயுமா? இங்க வீட்ல டின்னாகிப் போய்டும்”
“….”
“அவளையே கூட்டிட்டு வரதுனாலும் இன்னைக்கு வேண்டாம், நாளைக்குனா கூட ஓகே”
“…”
“பத்ரமா போய்ட்டு வாங்கடா, பை”
பிஜு கார் வீட்டுக்குள் நுழையும் போதே போர்டிகோவில் நின்ற அவன் மனைவி கண்ணில் தட்டுப் பட்டாள்.
வழக்கமான நைட் ட்ரெஸிலும் இல்லை அவள், அதற்காக கொண்ட்டாடத்தை குறிக்கும் படோபட உடையும் இல்லை.
பாசிபச்சை நிற முழு நீள ஸ்கர்ட், அதற்கு கழுத்தில் சிவப்பும் பச்சையுமாய் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்த க்ரீம் நிற டாப்ஸ் என இவன் நினைத்தது போல கேஷுவல் வேரில் இருந்தாள்.
காரைவிட்டு இவன் இறங்கியதும் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு காதுக்குள் முனங்கினாள்
“ஐ லவ் யூ பிஜு பையா, வெரி வெரி ஹேப்பி வெட்டிங் அனிவர்சரி, உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் செய்தேன்”
சொல்லிக் கொண்டிருந்தவளை ஒற்றைக் கையால் வளைத்து அதாலேயே அவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.
அவள் கன்னத்திலும் அவள் இதழிலும் அவனுக்குத் தோன்றியதை செய்து வைத்தான்.
அவளது மிஸ் செய்தேன் என்பதன் அர்த்தம் அவர்கள் திருடன் சண்டையிலிருந்து நேற்று நடந்த ரொமான்ஸ் வரை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள் என்பது இவனுக்கு இப்போது புரியும்.
“நம்ம லட்டு குட்டிய எங்க?” இவன் பிள்ளையை விசாரிக்க,
“அத்தைட்ட அத்தனை கதை சொல்லிட்டு தூங்கப் போயிருக்கா” என அடுத்து மகள் இன்று செய்த காரியங்களில் அவள் அறிந்த எல்லாவற்றையும் இவனிடம் ஒப்பித்தாள்.
இதற்குள் இவனும் உடை மாற்றி ரெஃப்ரெஷ் செய்து, போய் தூங்கும் குழந்தையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர,
அடுத்து அவர்களுக்கான சாப்பாடு.
டிவிக்கு எதிராக கிடந்த சோஃபாவின் அருகில் தரையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்தாள் அவள்.
இவன் போய் சோஃபாவில் சாய்ந்து தரையில் அமர, அவ்வளவுதான் வந்து அவன் மேல் இடிக்காத குறையாக வந்து உட்கார்ந்து கொண்டாள் அவள். ஒரு முயல்குட்டிப் போல்.
இந்த கணங்கள் இவர்கள் இருவருக்கும் ஏனோ எப்போதும் பிடிக்கும். சற்று நேரம் பேச்சும் அதோடு சாப்பாடுமாய் கழிய,
“ஹேய் மேட்ச் ஆரம்பிச்சுருக்கும்” என்றபடி அவள் டிவியை ஆன் செய்ய,
வெளி நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு ஆதரவு அளிப்பதில் உற்சாகமாய் கடந்தது அடுத்த காலங்கள்.
“ஏட்டி இந்த ஷாட்ல்லாம் பார்க்கலைனா அப்றம் க்ரிக்கெட் பார்ப்பதுல என்ன கிடைக்கும்” ஒரு கட்டத்தில் இவன் சொல்லிக் கொண்டிருக்க,
அவன் வெற்று மார்பிற்குள் முகத்தை இடித்தபடி, இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்தியபடி அமர்ந்திருந்தவள், ஆக்க்ஷன் ரீப்லேவை திரும்பிப் பார்த்தாள்.
“போங்க நீங்க என்ன இருந்தாலும் இது அவங்க சிக்ஸ்,”
“அதனால என்ன சூப்பர் ஷாட்”
“இப்படியே போனா தோத்துடும்பா”
“நெக்ஸ்ட் மேட்ச்ல ஜெயிச்சுட்டுப் போகுது”
“நீங்க பேட் பாய்” சொன்ன அவனுக்கு வாயில் ஒரு தட்டு, அடிக்கிறாளாம்.
“ஹலோ தோத்துப் போய்டும்னு சொன்னது நீ, நெக்ஸ்ட் மேட்ச்லயாவது ஜெயிப்போம்னு சொன்னதுதான் நன். ஒழுங்கா பின்ச் பண்ணி சாரி கேட்ரு”
அவன் சொல்ல, பழிப்பம் காட்டினாலும்,
பின் அடுத்த நொடி அவன இதழ்களை உரிமையாய் சுவைக்கவும் செய்தாள்.
“பிரவாயில்ல பின்ச் செய்து சாரி கேட்கிறது எப்படின்னு இப்பத்தான் தெளிவா தெரியுது உனக்கு”
மேட்ச் முடிந்து நிலா முற்றம் பார்த்து, அதன் பின் அன்றைய இரவும் சங்கமத்தில் முடிய, அடுத்து வந்த கணங்களில்,
“ரொம்பவும் அழகான six இயர்ஸ்ல ராதி” என அவன் மார்பில் சுருண்டிருந்தவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.
வார்த்தை என எதுவும் சொல்லாமல் அவனுக்குள் இன்னுமாய் முண்டினாள் அவள்.
அதன் பொருளும் இருவருக்கும் புரிந்தேதான் இருந்தது.
முற்றும்
கதையோடு பயணித்து கமென்ட் லைக் அனைத்தும் கொடுத்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
superb story . bajji payan & aradhana so sweet
ஒரு ஹீரோ ஹீரோயின் கல்யாணம் பண்றாங்க சில பல எபிசொட்க்கு பிறகு புரிஞ்சு தெரிஞ்சு ஒன்னு சேரனும். இப்படி ஒரு அவுட் லேயர்ல நெறய கதை தொடர்கதை இருக்கலாம், அனா அந்த சில பல எபிசொட்ல என்னலாம் பேசலாம்னு முடிவு பண்றதுல தான், டைம் பாஸ் கதைல இருந்து ஒரு கதை டைம் இன்வெஸ்ட்மெண்ட் கதையா மாறி இருக்கு.
ராதி பிஜு கல்யாணம் முன்னாடியே அன்றில் pregnancy ஹார்மோன் இஸ்ஸுஸ்ல ஆரம்பிச்சு கதை முழுக்க நெறய டீடெயில்ஸ் அதுவும் polymenorrhea, Oligomenorrhea ல ஸ்டடி எல்லாம் பண்ணப்போ கூட நான் தேடி படிக்காத Cryptomenorrhea வ ஒரு கதைல படிக்க வெச்சுடீங்க.
அதுவும் இது அத்தனையும் தலை முடி கொட்டாம இருக்க தாமிரபரணி தண்ணி கொண்டுவரும் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் அண்ட் ஊடல் நடுவுல, பிஜு யோசிக்கறது ஆரா யோசிக்கறதுன்னு ரெண்டு பக்கமும் வாதாடும் தேர்ந்த வக்கீல் மாதிரியான கதை ஓட்டம் சூப்பர்.
இதெல்லாம் சொல்லணும் அதுக்கு ஒரு கதை வேணும்னு தான் நான் கதையே எழுத ஆரம்பிப்பேன், அதெல்லாம் கதையா வந்து இருக்கான்னு தெரியாது ஆனா நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போய் இருக்கேன்.
அப்படி சொல்லவேண்டி விஷயமும் எக்கச்சக்கமா இருந்து அதை அழகான கதையாவும் குடுக்க முடிய சிலரால் முடியும், அப்படியான கதைகளை படிக்கிறது நாம பண்ற இன்வெஸ்ட்மெண்ட்னு நான் நம்பறேன், அது போக புனைவுகளா பதியப்படற விஷயங்களை வெகுஜன மக்களை போய் சேருதுன்னு நம்பறேன். அதனாலேயே லேட் நைட் ஒர்க்கிங், புதுசா ஒரு நோய் ன்னு நெறய விஷயங்களை வெகுஜன மக்களுக்கு கொண்டு போய் சேர்த்த மல்லிகை எனக்கு இன்னும் புடிக்குது.
Very Nice story