மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final (8)

முழு மொத்த அறையும் சரம் சரமாய் அடர் மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டு, அங்கிருந்த படுக்கையில் பட்டு வேஷ்டி சகிதமாய் அவளவன்.

இவள் சர்ப்ரைஸ் கொடுப்பதாக அவனிடம் சொல்லாமல் வந்து தன் கை சாவியால் வீட்டை திறந்து புழங்கி இருக்கிறாள் என்றால் அவன் அதற்கு முன்பே இங்கு அதுவும் இந்த ஏற்பாடு செய்து கொண்டிருந்திருக்கிறான்.

‘அச்சோ’’ ரொம்பவுமே சொதப்பிவிட்டது இவளுக்குப் புரிந்தது.

இவள் உள்ளே நுழையவும் ஒரு முறை விழி நிமிர்த்திப் பார்த்துவிட்டு அவன் பார்வையை தவிர்க்க,

அவன் பார்த்த திசையில் பர்த்தால் அங்கு இவளுக்காக புடவை முதல் என்னதெல்லாமோ வாங்கி வைத்திருந்தான். பார்த்ததும் கண்ணில் படும் அளவு அதிக பூச்சரங்களும்தான்.

அதில் போதுமான அளவு எடுத்து தலையில் சூடிக் கொண்டு, மெல்லமாய் அவன் அருகில் அமர்ந்தாள்.

“சாரி”

அவன் தரையைப் பார்த்தான்.

இப்போது அவன் முன்  இவள் தரையில் முழந்தாளிட்டுக் கொள்ள, அவன் முகம் இவன் முகத்துக்கு நேராக வந்துதானே ஆகும்.

“ப்ச் எந்திரி ராதி” அவனுக்கு இவள் மன்னிப்புக்காய் இப்படி நிற்பதாய் தோன்றிவிட்டது போலும்.

“ஹ ஹா பாஸ் சாரில்லாம் ஒரு டைம்க்கு மேல திரும்பி கேட்க மாட்டேன், இது நான் என் சிந்தாமணிய சைட் அடிக்கிற ஸ்டைல்” இவள் சொல்ல,

முறைக்க முயன்றாலும் அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வரும்தானே!

“நீங்க பெரிய பிஸினஸ் மேன் உங்க ரேஞ்சுக்கு ரூம டெக்கரேட் செய்துருக்கீங்க” ஒரு முறை ரூமை சுத்தி கண்ணை சுழல விட்டவள்,

“நான் சாதாரண ஸ்டூடண்ட், அதான் என்  ரேஞ்ச்க்கு நானும் அரேஞ்ச் செய்தேன், இது என் பஜ்ஜி பையன் ஆசையா  எடுத்துக் கொடுத்த சாரி, அதுக்காகத்தான் கட்டினேன்”

அவளுமே இன்று இதே திட்டத்தில்தான் இருந்தாள் என்பதை அவனுக்கு இப்படியாய் தெரியப் படுத்தினாள்.

அந்த நேரத்தில் அவள் பூ கேட்க இவன் அதை கண்டு கொள்ளாமல் விட்டதும், பழைய நிகழ்வின் பின் விளைவோ என இயற்கையாக தோன்றி இருக்கும்,

இவன் புரிந்து கொண்டது போல் இவனது அன்பை அவள் நம்பவில்லை என்பதல்ல விஷயம் அவனுக்கும் புரிய,

“இப்ப சொல்லுங்க நான் இதே சாரில இருக்கட்டுமா, இல்ல அதை கட்டணுமா?” என அவன் வங்கி வைத்திருந்த புது புடவையை கண்ணால் காண்பித்தபடி இவள் எழுந்து கொண்டதுதான் தெரியும்,

அடுத்த நொடி அவளை இடையோடு பற்றி இழுத்து தன் மீது போட்டிருந்தான் அவன்.

“புடவைய கட்றதுக்கு பேராடி ஃபர்ஸ்ட் நைட்?” என்ற அவனது அந்த வகைக் கேள்வியில், அதுவரை இருந்த அத்தனையும் மறைய, வெட்கம் பூசிப் போய் இவள் அவனுக்குள் சுருள,

துவங்கியது தாம்பத்ய சுக யுத்தம்.

“அது நான் ப்ளான் செய்த ரூம், இது நீ ஆசைப்பட்ட ரூம்ல, ஸோ இந்த செஷன் இங்க” என காலையில் மீண்டும் அடுத்த அறையிலும் அது தொடர்ந்து முடிந்த போது,

அவன் தாடையை இடித்தபடி அவன் மார் மீது தலைவைத்து அவன் இரு கைகளுக்குள்ளுமாயும் பொதியப்பட்டுக் கிடந்தவளிடம்,

“உயிரவிட அதிகமா உன்ன பிடிச்சுருக்கு ராதிமா” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

“எனக்கும்” என வருகிறது இவளின் பதில்.

“ஆனாலும் சட்டுன்னு சண்டை போட்டுக்கிறோம்” அவன் சொல்லிக் கொள்ள,

“அது இல்லப்பா, அடுத்த நிமிஷம் சேர்ந்துக்கிறோம், அதுதான் விஷயம், எனக்கென்னமோ எந்த ரிலேஷன்ஷிப்லயும் இது பாசிபிள் இல்லைனுதான் தோணுது” என முடித்தாள் அவள்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு

“Happy wedding anniversaryடா தம்பி, எப்பவும் சந்தோஷமா இருக்கணும் நீங்க ரெண்டு பேரும்” மொபைலில் வாழ்த்திய அம்மாவிடம்,

“ரொம்ப ரொம்ப தேங்ஸ்மா, இன்னைக்கு வராம எஸ்கேப் ஆனது போல அதன்யா பிறந்தநாளுக்கு வராம இருந்துடாதீங்க, என்னை பிச்சு பிச்சு எடுத்துடுவாங்க அம்மாவும் பொண்ணும்,

நான் ஏற்கனவே அப்பாவுக்கும் உங்களுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டேன் ஞாபகம் இருக்கட்டும்” என பாச ப்ளாக்மெய்ல் செய்து கொண்டிருந்தான் பிஜு.

“அதெல்லாம் இன்னைக்கு நீயும் ஆராவுமா enjoy பண்ணுங்க, அதனிக் குட்டி பெர்த்டேக்கு நீ கூப்டலன்னாலும் நான் வருவேன், நீ சொல்லவே வேண்டாம்” அன்பு அம்மாவின் பதில்.

“என்னைய சொல்ற, நீயே ஏன்டா இன்னும் வீட்டுக்குப் போகல, டின்னர்க்கு வெளிய போறோம் அத்தைனு ஆரா சொன்னாளே! கல்யாண நாள் அதுவுமா அவள அப்செட் ஆக்கிடாதடா, சீக்கிரம் கிளம்பு” அம்மா தொடர,

“அதெல்லாம் ராதி இதுக்கெல்லாம் அப்செட் ஆக மாட்டாமா, லேட் ஆகிட்டுல்ல, இனி வீட்ல சாப்டுக்கலாம்னா சரின்னு சொல்லிடுவா” இவன் சொல்ல,

“என்ன நீ? வெளிய போறது மட்டுமா விஷயம்? இதுக்குன்னு சமைக்கிறவங்கள வேற டின்னர் சமைக்க வேண்டாம்னு சொல்லி அனுப்பி இருப்பாளே, இப்ப ஹாஸ்பிட்டலும் போய்ட்டு வந்து அதனியையும் பார்த்துகிட்டு சமைக்கவும் செய்யணும்னா, ரொம்ப எரிச்சலா இருக்கும்டா, ஒழுங்கா அவள வெளிய கூட்டிட்டுப் போகப் பாரு” நடைமுறையை சொன்னார் அவனது அம்மா.

எப்போதும் மருமகள் என்றால் கொஞ்சம் கூடுதல் சலுகைதான் அம்மாவுக்கு.

“மூனு நாள் லீவு கிடச்சாலும், பிள்ளய தூக்கிக்கிட்டு உன்னையும் இழுத்துகிட்டு நேர இங்கதான் வரணும்னு ஆசையா வர்றாளே, அப்படி தோணுற மாதிரி நானும் இருக்கணும் தம்பி,

இன்னைக்கு அதனிய ஒத்தக் குட்டின்னு நாம எப்படி பார்த்துக்கிறோம், அப்படித்தான ஆராவ அவ வீட்ல பார்த்து பார்த்து வளத்துருப்பாங்க, அதான் செல்லமாதான் வச்சுப்பேன்” என அம்மாவிடம் இருந்து ஒரு விளக்கம் வரும்.

இப்படி ஆரா இவன் அம்மாவிடம் ஓடி ஓடி போவதும், இவன் அம்மா அவளிடம் இழைவதும், இது எல்லாமே இவனுக்குப் பிடிக்கும் என்பதால் எதையும் பேசுவதில்லை கவனித்துக் கொள்வதோடு சரி.

“ஹ ஹா அம்மா வேணும்னா கால் பண்ணிப் பாருங்க, இப்பவே தோசை ஊத்தி அதனிக்கு ஊட்டி இருப்பா, கூட கொஞ்சம் நூடுல்ஸ் உப்மா பாப்கான்னு அவளுக்கு தெரிஞ்சத ரெடி பண்ணி வச்சுருப்பா”

“என்னடா இது பயங்கர மெனுவா இருக்கு?”

“ஏன் மீ? உப்மா எங்க ரெண்டு பேருக்குமே ஸ்பெஷல், அதாலதான் எங்களுக்கு கல்யாணமே ஆச்சுன்னா உங்களுக்குப் புரியாதுல அதான் கேட்காதீங்க, நூடுல்ஸ் அவளுக்கு பிடிச்ச ஒன்னு, ஸ்னாக்ஸுக்கு பாப்கான், நான் போய் காஃபி போட்டுப்பேன், என் காஃபி அவளுக்குப் பிடிக்கும்”

“என்னமோடா சந்தோஷமா இருங்க, ஆனா சீக்கிரம் வீட்டுக்குப் போ”

“ஓகே மீ, பை” அம்மாவின் இணைப்பை துண்டிக்க, இவன் முகத்தில் புன்னகை.

அடுத்த பக்கம்

Advertisements