மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final (7)

இரு மாதத்திற்குப் பின்

கருத்தடை பற்றிய அவள் புறங்களை அவள் பிஜுவிடம் பேசி அவனும் இவள் வகை கையாளுதலே சரி என முடிவுக்கு வந்திருந்தாலும், அவன் உடல் நிலை முற்றிலுமே சரியாகிவிட்ட பின்பு வரும் இந்த நாளிலிருந்து இவர்கள் தாம்பத்யத்தை துவங்கலாம் என இவள் சொல்லி இருக்கவில்லை.

அதே பழைய காரணம். வீட்டுக்கு வர முடியாம போய்ட்டா என்ன செய்ய?

போன முறை செய்த அரேஞ்ச்மென்ட் சொதப்பலின் விளைவாய் இவள் எதையும் பெரிதாய் செய்யவும் எண்ணவில்லை.

அவனிடம் சொல்லாமல் வீட்டுக்கு வந்தவள், அவன் வாங்கிக் கொடுத்த புடவையை உடுத்தி தயாராகிக் கொண்டாள்.

தலையில் வைக்க பூ அவன் வாங்கி வந்தால் நன்றாக இருக்கும்.

யோசித்தால் என்னதான் அவன் முன்பை விடவுமே வெகுவாய் அன்யோன்யமாகி இருந்தாலும், இப்போதுவரை பூ மட்டும் வாங்கித் தந்திருக்கவே இல்லை.

‘ஓ அன்னைக்கு பூவ தூரப் போட்டத அவன் இன்னும் மனசுல வச்சுருக்கானோ?’ கொஞ்சமாய் மனம் முனுக்கென்றது.

‘சாரின்னு சொல்லி சேர்ந்துகிட்ட பிறகு, அதுவும் அத்தனையும் காரண காரியத்தோட அவனுக்குத் தெரிஞ்ச பின்னும் இன்னும் மன்னிக்கலையா அவன்,

வலியில அவன் பிகேவ் செய்தத இவ ஈஸியா அக்செப்ட் செய்த போல அவனும் இந்த பூ விஷயத்தை எடுத்திருக்கணும் இல்லையா?’

அவனை அழைத்தாள்.

இரண்டு மூன்று முறை அழைப்பை தவறவிட்ட பின்பே ஏற்றான்.

“என்னமா? கொஞ்சம் பிஸியா இருக்கேன்டா, வேலை முடியவும் நானே கூப்டுறேன்” இணைப்பை துண்டிப்பதே அவன் நோக்கமாக இருந்தது.

“ஹேய் ஹேய் வச்சுடாதீங்க, பெருசா எதுவும் இல்ல, வர்றப்ப பூ வாங்கிட்டு வாங்க, அவ்ளவுதான்”

சரி இல்லை என எதையும் சொல்லாமல் இணைப்பை துண்டித்திருந்தான்.

இவள் சொல்லும் முன்னே கூட அவன் கட் செய்திருக்கலாம்தான்.

இருந்தாலும் உற்சாகம் வற்றிப் போனது.

அப்ப அந்த பூ விஷயத்தை இவன் மன்னிக்கல போல!

மனம் சுணங்க இவள் படுக்கையில் உட்கார்ந்திருக்க, சற்று நேரம் கழித்து இவள் மொபைல் சிணுங்கியது.

அவன்தான்.

“ஹேய் வாலு, ஒரு ஹெல்ப் வேணுமே” துள்ளலாய் அவன் ஆரம்பிக்க,

“ம் சொல்லுங்க” என வருகிறது இவள் பதில்.

“வீட்ல எனக்கு ஒன்னு நீ பார்த்து சொல்லணும், அடுத்த ரூம்ல உள்ள போய்…” என அவன் தொடர,

“உம்” என்றபடி இவள் எழ,

“என்னாச்சு?” என இவள் குரலின் மாற்றத்தை இப்போதுதான் உணர்ந்தவன் கேட்டான்.

“ப்ச் ஒன்னுமில்ல, உங்களுக்கு என்ன வேணும், அதச் சொல்லுங்க?”

“என்ன வேணுமா? நீதான் வால்குட்டி வேணும்”

“ஆமா, சொல்றது மட்டும் இப்படி சொல்லிக்கோங்க”

“ஏய் என்னாச்சுன்னு முதல்லயே கேட்டேன்”

“பின்ன என்ன? இன்னும் நான் பூவ எறிஞ்ச விஷயத்த நீங்க மன்னிக்கல என்ன?”

“நான் மன்னிக்கலன்னு யார் சொன்னா?”

“அப்றம் ஏன் இன்னைக்கு வரை பூ வாங்கி தரவே இல்ல, இப்பவும் கேட்டதும் ஒன்னுமே சொல்லாம கால கட் பண்ணிட்டீங்க”

“காலேஜுக்கு பூ வச்சுட்டு போக ரூல் இல்லைன்ற, கண்ட நேரம் திரும்பி வர்ற, அப்ப என்ன பூ வைக்கப் போறன்னு வாங்குனது இல்ல, அவ்ளவுதான் விஷயம்,

மத்தபடி உனக்கு பிடிக்கும்னு சாக்லெட்ல இருந்து உன் பபிள் ரேப்பர் வரை குட்டிப் பாப்பாக்கு செய்ற போல செய்றது எல்லாம் மன்னிக்காம மனசுல கோபமா இருக்கவங்க செய்ற வேலையாடி?

இன்னைக்கு நீ பூ கேட்டதே எனக்குத் தெரியாது” சொன்னவன் காலை கட் செய்துவிட,

‘அச்சச்சோ அவசரப் பட்டு அபூர்வ சிந்தாமணிய அப்செட் ஆக்கிட்டேன் போலயே’ என நிலைமையை உணர்ந்த ராதி,

‘சரி எப்படியும் பஜ்ஜிப் பையன் கோபம் பத்து நிமிஷம் மேல் இப்பல்லாம் தாங்குறது இல்ல’ என்ற உண்மையை அனுபவமாய் அறிந்திருந்ததால்,

‘ஆமா உன் கோபம் மட்டும் ஒன்டே நின்னு பௌலிங் பண்ணிடுதாங்கும், இப்ப கூட பௌல் பண்ணதும் நீ ஃபர்ஸ்ட் அவ்ட் ஆனதும் நீ’ என இடித்த மனசாட்சியை

‘ஹி ஹி யூ ஆர் ரைட்’ என சமாளித்தபடி இவள் மொபைலில் அவனை அழைத்துக் கொண்டே அடுத்த அறைக் கதவை திறந்தால்… அங்கிருந்துதானே எதையோ பார்த்து சொல்லச் சொன்னான்?

வாட்?????

அடுத்த பக்கம்

Advertisements