மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(6)

படிக்கிற பொண்ணு மனச கலச்ச, மண்டைய உடைப்பேன் என அவன் மனசாட்சி சவ்ண்ட் விட்டது, அதற்காகவே அவன் அவளிடம் பேசக் கூட முயலாமல் அமைதி காத்தது,

“லவ் மேரேஜுக்கெல்லாம் நாம ரெண்டு பேருமே செட் ஆக மாட்டோம்னு பட்டுது, அதான் உன் படிப்பு முடியவும் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்கிற அளவுக்கு வழி பண்ணிக்கணும்னு உங்க அப்பாவ டிடக்டிவ் எல்லாம் வச்சு தேடினோம்” .

“அடப்பாவமே, அப்பாக்கு இப்ப வந்த ட்ரான்ஸ்ஃபர் ஒன்னும் நீங்க செய்த சதி இல்லையே”

“என் ப்ளான்னு சொல்லிக்க ஆசைதான், ஆனா என்ன செய்ய? எங்க டிடக்டிவால உங்க அப்பா பேரைத் தவிர ஊரக் கூட கண்டு பிடிக்க முடியலையே, ஜஸ்ட் மிஸ்”

“ஹலோ இது பேரு ஜஸ்ட் மிஸ் இல்ல, டோட்டல் வேஸ்ட், ஒரு டொக்கு டிடெக்டிவ செட் பண்ணி இருக்கேள், இதுல ஆர்மிய கவுக்க அண்டர்கிரவ்ண்ட்ல ப்ளான் போட்டோம்னு பில்டப் வேற”

“ஹேய் உங்க அப்பா போஸ்டுக்கு அவங்கள ட்ரேஸ் செய்ய முடியாத அளவுக்கு இவ்ளவு செஞ்சு வச்சுருப்பாங்கன்னு யாருக்குத் தெரியும். சரி மாமனாருக்கு கிடச்சது அவ்ளவுதான், ஃபைனல் இயர் ஆகிப் போச்சு, இனி அம்பி மோட்ல இருந்து பொண்ணுட்ட ரெமோவா ஆகிடலாம்னு பார்த்தேன்”

“ஐய நீங்கல்லாம் எப்பவும் அம்பி போல எல்லாம் இல்ல”

“தேங்க் யூ தேங்க் யூ”

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, நான் இப்படித்தான் சொல்ல முடியும் பாஸ்”

“அடப்பாவி, அப்போ நான் காக்கா போலவா இருக்கேன்?”

“அப்படின்னு சொல்லிட முடியுமா என்ன? காக்கா கறுப்பா அழகா இருக்குமே”

“ஏய் எந்திரி, எந்திரி நீன்னு சொல்றேன், படுத்ருக்கது என் மேல, காக்கா அழகா இருக்காம்”

“நீங்க கலரா அழகா இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன் பாஸ், அதுக்குள்ளயும் கோபத்த பாரு. காக்கா கூட போட்டி போட்டுகிட்டு”

இப்போது அவனை மீறி சிரிப்பான்தானே!

“கொஞ்சமா ஹர்ஷத் சோப்ரா சாயல்ல ரொம்பவுமே க்யூட் மக்களே நீங்க” அவனை செல்லமாய் சின்னதாய் கிள்ளி இவள் கொஞ்ச,

“இப்படித்தான் கம்பேர் பண்ணுவாங்களா ஹஸ்பண்ட”

“சரி பிடிக்கலைனா விடுங்க, அவன் உங்கள மாதிரி இருக்கான்னு சொல்லிக்கிறேன், இப்ப விஷயத்துக்கு வாங்க, அப்றம் நம் லவ் ஸ்டோரில அடுத்த சீன் என்ன?”

“பிறகென்ன அபித்தும் நானுமா அடுத்த இயருக்கு லவ் ப்ரொபோசல் ஆக்க்ஷன் ப்ளான் போட்டுகிட்டே ப்ளைட் பிடிச்சு சென்னை போனா,

தெய்வமே தந்தியே ஒரு ஷாக், தலை விரி கோலமா ஆதிக் மச்சான் கூட அப்படி ஒரு ஃபோட்டோ, அனி வீட்டு பழைய ஆல்பத்த அப்போதான் பார்த்தேன்”

“ஹ ஹா முடியப் பார்த்தும் ஓடிப் போகாத மூத்தோர் சங்கமா நீங்க?”

“ப்ச், நிஜமா நல்ல முடி ராதி உனக்கு இப்பதான் கொட்டிப் போச்சு”

“சார் முடியப் பார்த்துதான் லவ் பண்ணேன்னு தத்து பித்துன்னு எதாவது தத்துவம் சொல்லிடாதீங்க”

“அப்ப உண்மைய சொல்லக் கூடாதுன்னு சொல்றியா ரைட்டு”

“ஐயையோ, இது என்ன கொடுமை?”

“நிஜமா ராதிமா, முதல் நாள் என்னை திருடன்னு திட்டிட்டு சண்டை முடிஞ்சு கிளம்பினியே, அப்ப நீ திரும்புனப்ப உன் முடி கண்ல பட்டுச்சு, அது ரொம்ப பிடிச்சுது, அப்பவே முடிவு செய்துட்டேன், இன்னொரு டைம் இந்த முடியப் பர்த்தோம்னா, இதுதான் நம்ம ஆளுன்னு, அது போலவே காலேஜ்ல முதல்ல உன்ன பின்னால இருந்துதானே பார்த்தேன், வாவ் நம்ம முடின்னு நான் அங்கயே சரண்டர்” அவன் தீவிரமாய்  விளக்க,

இங்கு இவள் கொதிநிலையில்.

“போயும் போயும் முடியப் பார்த்து ஒரு கல்யாணமா? ஒரு கதைல ஹீரோ இப்படியேதான் சொல்வான். எனக்குப் போய் அவன நாலு இழுப்பு இழுக்கலாம் போல இருந்துச்சு, கடைசில எனக்கேவா? மம்மீ”

“போங்க இனிமே என்னை லவ் பண்ணி மேரேஜ் செய்தேன்னு சொல்லுங்க அப்றம் இருக்கு”

“ஐயோ வெளிய தெரிஞ்சா ஓட்டியே ஓட்டை போட்டுடுவாங்களே”

“ஹ ஹா லூசு, அந்த கதைய அப்படி நீ கமன்ட் அடிச்ச தகவல் காதுக்கு கிடச்சுது, அதான் சும்மா சொல்லிப் பார்த்தேன்”

உர்ர்ர்ர்ர்ர்ர்

“யார் இதெல்லாம் சொன்னது? அபித்தா?”

“யெஸ் யெஸ்”

“இருக்கு அவனுக்கு”

“நன்றாக கவனிக்கவும்”

“எப்ப இருந்து இது? உப்மா சண்டைல அவன என்ட்ட பேசக் கூட விடலை நீங்க? இதை யோசிச்சா இப்ப நீங்க சொன்ன முழு கதைக்குமே லாஜிக் இடிக்குதே!’

”நீயும் உன் லாஜிக்கும், நீ என்ன தீவிரமா சைட் அடிச்சுகிட்டு இருந்தப்ப ரெட் ஹேண்டா அவன்ட்ட  மாட்டிகிட்டு செமயா முழிச்ச,

சரின்னு அவன அங்க இருந்து கூப்ட்டு உன்ன சின்னதா ரெஸ்க்யூ செய்தேன், அதுக்கு பேரு பேசவிடலையாமா?

வருஷம் முழுக்க அடுத்து அவன்தான உனக்கு பாடிகர்ட், என் முன்னாலதான பேசிட்டு வருவீங்க, நான் எதாவது சொன்னனா அப்பல்லாம்”

“அச்சச்சோ கோபமாப்பா?”

“கொஞ்சமா ஆமா”

“சரி சரி கொஞ்சமாதான? அப்ப நீங்களே அத வச்சுகோங்க, இப்ப எனக்கு மீதியச் சொல்லுங்க”

“அடப்பாவி, என் கோபத்துக்கு இவ்ளவுதான் மரியாதையா?”

“ஹி ஹி  ஆமாம்தான். எப்படியும் இந்த நிமிஷம் அடிச்சுகிட்டா அடுத்த நிமிஷம் சேர்ந்துப்போம்னு தெரிஞ்சிட்டு”

“ரொம்ப முன்னேற்றம்”

“சரி இப்ப நம்ம கதைய சொல்லுங்க”

“அப்புறமென்ன? அனி உன் போட்டாவ காமிச்சு, இவளும் ஆதிக்கும் நானும் நீயும் போலடா, எனக்கென்னமோ ஆராக்கும் உனக்கும் ரொம்பவே ஒத்துப் போகும்னு தோணுது, உனக்கு வேற யாரும் மனசுல இல்லைனா இந்த ப்ரொபோசல சீரியஸா கன்சிடர் செய்னு சொன்னா, அடுத்து நடந்ததுதான் உனக்குத் தெரியுமே”

இப்படி எத்தனையோ பேசி, சில நேரம் எதையும் பேசாமல் மௌனமாய் கரைந்தும் அழகாய் வளர்ந்து கொண்டிருந்தது அவர்கள் திருமண வாழ்வு.

அடுத்த பக்கம்

Advertisements