மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(5)

பின் எதோ கண்டு பிடித்தவன் போல்,

“அது அன்றில் மேரேஜ் டைம்ல சும்மா கிண்டலா என் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருக்கப்ப, எனக்குன்னு வர்றவா இப்ப காலேஜ்ல படிச்சுட்டு இருப்பான்னு சொல்லிட்டு…தெய்வமே அது மெடிகல் காலேஜா மட்டுமா இருக்க கூடாதுன்னு விளையாட்டா சொன்னேன்.

பொதுவா நம்ம வீட்லலாம் பொண்ணு படிச்சு முடிக்கவும் மேரேஜ் செய்வாங்கள்ல, அப்ப எனக்கு வரப் போறவ BSC படிச்சிட்டு இருந்தா மூனு வருஷத்தில் கோர்ஸ் முடியவும் உடனே கல்யாணம் செய்து வச்சுடுவாங்க,

MBBS படிச்சா அது முடியவே ஆறு வருஷம் ஆகுமே, அவ்ளவு நாள் நான்ல தனியா இருக்கணும்னு அப்படி சொல்லிக்கிறது.

அடுத்து சும்மா அதுவே ஒரு கிண்டல் போல ஆகிட்டு.

எதுனாலும் எங்க வீட்டு பட்டாளம் எல்லாம் பாரு பாரு உன் ஆளு மெடிகல் காலேஜ்தான்னும், நான் அதெல்லாம் இல்லைனும் சொல்றது.

அதை ரவியும் கேட்ருப்பானா இருக்கும்.

நம்ம மேரேஜ்க்கு பிறகு அவன் ஆஃபீஸ் வந்தப்ப இதை வச்சு கிண்டலா ஏதோ கேட்க, நான் அவன்ட்ட பேச்ச வளக்க இஷ்டப்படாம ஆமா அப்படித்தான்றாப்ல சொல்லிட்டு போய்ருபேன்.

இதை தவிர எனக்கு ரவிக்கும் நீ சொல்ற விஷயத்துக்கும் எந்த லிங்கும் தெரியல” என விளக்கினான்.

அவன் வகையில் இது முக்கியத்துவமான பேச்சு என்பது சொல்லிய வகையில் தெரிந்தது.

இதிலேயே ராதிக்குத்தான் எல்லாமே புரிந்தே போயிற்றே!

அவள் போய் அவளவன் கயை தோளோடு பிடித்தபடி மெல்லமாய் சாய்ந்து கொள்ள,

“இதுலதான் அவ்ளவு அப்செட் ஆகிட்டியா நீ? விளையாட்டுக்குப் பேசுறதுக்கும் சீரியஸா பேசுறதுக்குமா ராதி உனக்கு வித்யாசம் தெரியாது? இது தவிரவும் வேற எதவும் நடந்துச்சோ?” என அவனின் அடுத்த கேள்வியில் எல்லாத்தையுமே சொல்லி இருந்தாள் இவள்.

அன்று ரவியிடம் இவன் பேசியதும் உள்ளிருந்த இவனது தனி அறைக்கு ஏதோ வேலை விஷயமாக இவன் சென்றிருந்தான் என்பதும் புரிய வந்தது. அதனால்தான் ரவி பேசியதே இவனுக்குத் தெரியவில்லை.

விளக்கங்கள் முடியும் போது, “ப்ளீஸ்பா இன்னும் இன்னும் கிளறி, இந்த நேரத்து நிம்மதியும் நமக்குத்தான் போகும், அந்தாள்ட்டல்லாம் போய் எதையும் பேச வேணாம்” என தன்னவனை கெஞ்சியும் கொண்டிருந்தாள்.

இன்று இந்த ரவி விஷயத்தை இப்படியே விட்டாலும் என்றாவது அவனுக்கு பிஜுவிடம் நிச்சயம் பாட்டு உண்டு என ராதிக்குமே தெரிந்தாலும், இப்போது அந்தப் பிரச்சனையை கிளற அவளுக்குத் துளியும் விருப்பம் இல்லை

:”எனக்கு இப்பவே வீட்டுக்குப் போகணும், உங்க மேல கையப் போட்டு நிம்மதியா தூங்கணும் போல இருக்கு, நல்லா தூங்கி நாலஞ்சு நாளாகிட்டு” ஏக்கமாய் அவள் சொல்ல, இதற்குப் பின் என்னதை செய்வானாம் அவளவன்.

“உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்” பரிதாபமான முக பாவத்தில் அவள் சொல்லும் போது நடக்கத் துவங்கி இருந்தான். அவளோடுதான்.

“முஞ்சிய உர்ருன்னு வச்சுகிட்டு என்ன சுத்த சுத்த விட்டீங்க”

“அபவ் ஆல், நம்ம மேரேஜ் அரேஞ்ச்ட் மேரேஜ்னு என்னையவே ஏமாத்தி இருக்கீங்க” சலுகை வந்திருந்தது அவள் குரலில்.

“ப்ளான் பண்ணி, திட்டம் போட்டு, ஸ்கீம் செய்து மேரேஜ் செய்தீங்கன்ணு சொல்லவே இல்ல”

“6 வருஷம்லாம் வெயிட் பண்ண மாட்டேன்னு அப்பவே சொல்லிட்டு, இப்ப இன்னும் வெயிட் பண்றீங்களே, தப்பில்ல”

அவள் பேசப் பேச அடுத்து அவர்கள் வெகு நேரம் அங்கு இல்லை.

வீட்டிற்கு கிளம்பியாகிவிட்டது.

காலை ஆறு மணி.

அவன் காயத்தை பாதிக்கா வண்ணம் படுக்கையில் சற்றாய் சரிந்து அமர்ந்திருந்தவன் வெற்று மார்பில் கன்னம் பதித்து இவள்.

வீட்டிற்கு வந்தது என்னமோ தூங்கப் போகிறேன் என்பதுதான்.

குளித்து உடை மாற்றிவிட்டு அவன் மீது சரிந்தவள்தான்,

அவளைப் பார்த்த முதல் நாளிலேயே அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அடுத்தும் அவளையே கல்லூரியில் பார்த்தது, அவளைப் பிடித்துப் போனது,

அந்த உப்மா விஷயத்தில் அபித் இவளிடம் சிடுசிடுத்தது. அதற்கு அபித்தை சமாளிக்கவென பிஜு பேசப் போனது. அதில் அபித் பிஜுவிற்கு ஆரா மேல் இருக்கும் விருப்பத்தை கண்டு கொண்டது,

அதனாலேயே அவன் உடனடியாக வந்து இவளை சமாதானப் படுத்த முயன்றது. இவளுக்கும் பிஜு மீது சற்று ஈடுபாடு இருக்கிறது என்ற எண்ணம் வந்தது,

அவளைப் பார்ப்பதற்காகவே கல்லூரிக்கு வரத் துவங்கியது,

அடுத்த பக்கம்

Advertisements