மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final

பிஜு மருத்துவமனையை அடையும் போது ராதி கதவுகள் மூடி இருந்த ஐ சி யூ பிரிவில் இருந்தாள்.

தான் வந்திருப்பதாகவும், அவசரம் எதுவும் தனக்கு இல்லை, வர முடியும் போது அவள் வந்தால் போதும் என்றும் அவள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு,

அதன் அருகில் உள்ள தாழ்வாரத்தில் காத்திருக்கத் துவங்கினான்.

அவள் கையில் மொபைலை வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்க மாட்டாள் என அவனுக்கும் தெரியும்தானே. பார்க்கும் போது செய்தி தெரிந்து கொள்ளட்டும் என்பது அவனுக்கு.

சற்று நேரம் செல்ல ஒரு miss u வையும் அவள் வார்த்தைகளான feel like hugging யூவையும் கூட அனுப்பி வைத்தான்.

இவனை வந்து பார்க்கும் சூழல் அவளுக்கு இல்லை என்றாலும், சில நொடி ப்ரேக்கில் மொபைலை அவள் பார்த்தாலே கூட அவள் மனம் இவன் வகையில் சந்தோஷ சாந்திக்கு வந்துவிடும்தானே!

இப்போது இவன் கண் முன்பாக அவசர அவசரமாய் இன்னொரு பெண்ணை ஐ சி யூவிற்கு கொண்டு சென்றார்கள்.

என்ன விஷயம் என்று புரியாவிட்டாலும் கல்லூரி மாணவி போல் இருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவும் இவனுக்கு மனம் பிசைந்தது.

இதே நேரம் ஐசியூ கதவைத் திறந்து கொண்டு அவசரமாக வெளியே வந்தனர் இரு மருத்துவர்கள். அதில் ஒன்று அபித்.

அவன் பிஜுவைப் பார்க்கவும் இவனிடம் ஓடி வந்தவன் “என்னண்ணா? என்னாச்சு? இந்நேரம் இங்க என்ன?” என தவிப்பாய் விசாரிக்க,

யாருக்கும் விபத்தோ, அதனால் வந்திருக்கிறானோ என தோன்றும்தானே அவனுக்கு,

“டேய் சும்மாதான்டா, ப்ரேக் டைம் எதாவது வந்தா அவளப் பார்க்கலாம்னு நினச்சேன், யு கேரி ஆன்” என பிஜு மறைந்திருக்கும் புன்னகையோடே பதில் கொடுக்க,

அதில் மறையாமல் காதல் வெளிப்படும் தானே!

“ஷப்பா ஹஸ்பண்ட் ரோல் ரொம்ப கஷ்டம் போலேயே சாமி” என இவனை வாரியபடியே ஓடினான் அபித்.

அங்கு ஐ சி  யூ உள்ளே பரபரவென வேலை நடந்து கொண்டிருந்தது.

ஒரு தனியார் மருத்துவமனையில் உதாரணமாய் 200 நோயாளிகளை தங்க வைத்துதான் பார்க்க வசதி இருக்கிறது என்றால் 201வது நோயாளி அனுமதி கோரி வரும் போதே இடம் இல்லை வேறு மருத்துவமனை பாருங்கள் என அனுப்பி விடுவர்.

ஆனால் அரசு மருத்துவமனைகளில் அப்படி மறுப்பதற்கில்லை. வருகிற அனைவருக்கும் வைத்தியம் செய்தே ஆக வேண்டும்.

ஆக  படுக்கையிலிருந்து மருத்துவ உபகரணங்களிலிருந்து செவிலிகள் மருத்துவர்கள் வரை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இப்போதும் இந்த நீள ஐ சி யூவிலும் பல பல படுக்கைகளில் மிக ஆபத்தான நிலையில் நோயாளிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க,

ட்ரிப்ஸ் ஏற்றத் தேவையான சலைன் ஸ்டான்ட் ( ட்ரிப்ஸ்/குளிக்கோஸ் ஏத்றதுன்னு சொல்லி அந்த பாட்டிலை தொங்க விடுவாங்களே அந்த ஸ்டண்டு மக்களே) தட்டுப்பாடு.

பொதுவாய் இப்படி சூழ்நிலைகளில் குடும்ப உறுப்பினர் யாரையாவது சலைன் பாட்டிலை பிடித்துக் கொண்டு பக்கத்தில் நிற்க வைத்துதான் சூழலை சமாளிப்பது.

இதில் அந்த சிறுமிக்கு கழுத்து கை என இரண்டு இடத்தில் ஐ வி லைன் போட்டு ஆன்டிபயாடிக் மற்றும் சலைன் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

சற்று நேரத்துக்கு ஒரு முறை ரத்தம் அதன் வழியாய் எடுத்து அதையும் ஆராய்ந்து கொண்டேதான் வைத்தியம் செய்ய முடியும்.

அதோடு சிறு நீரும் குறிப்பிட்ட இடைவெளியில் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்

ஆனால் அந்தப் பெண்ணுக்கு துணையாக அவள் தந்தை மட்டும் வந்திருக்க, இத்தனை செய் முறைகளை அவரை அருகில் நிறுத்திக் கொண்டு செய்வதென்பது மன வகையில் வெகு கஷ்டமல்லவா?

அதோடு முழு இரவும் தாங்கி போல் நின்றபடி அவரே சமாளிக்க முடியும் என்றும் இல்லை.

ஆக சற்று சாதாரணமான நேரங்களில் அவரை பாட்டிலை பிடித்துக் கொண்டு நிற்க வைப்பதும், சாம்பிள் கலெக்க்ஷன் இன்ன பிற நேரங்களில் அவரை வெளியே அனுப்பிவிட்டு ராதி கிடைத்த செவிலியுடன் மருத்துவ ப்ரொசீர்களை செய்தால் என்றால் பொற்கொடி அந்த சலைன் பாட்டிலை பிடித்தபடி நின்றாள்.

அரை மணி நேரம் அசையாமல் கையை தூக்கிக் கொண்டு நிற்பதே எத்தனை பேரால் முடியும்? ஆக அடுத்து ஒவ்வொருவாக இவர்கள் மருத்துவ மாணவ கூட்டமே ஒருவர் மாற்றி ஒருவர் கை வலிக்கும் வரை சலைன் பாட்டிலை தூக்கிப் பிடிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த பக்கம்

Advertisements