மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 9 (4)

ஈரம் சொட்டும் முடியோடு அடுத்து இவள் வெளியே செல்லும் போது இளநியும் சின்ன கவருமாக அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவன்.

“இளநி, யோகர்ட் ரெண்டும் இருக்கு… தலை முடி நல்லா காஞ்ச பிறகு ரெண்டுல எதாவது ஒன்னு சாப்டு, உனக்கு வேற எது வேணும்னாலும் சொல்லு” சொல்லியபடி கையிலிருந்தவைகளை கொண்டு வந்து மேஜை மீது வைத்தான்.

பதிலேதும் சொல்லாமல் இப்போதும் அவனையே பார்த்திருந்தாள் இவள்.

“அப்போ பார்க்காமலே கொன்னதுக்கு இப்ப பார்த்தே பரிகாரம் செய்துடலாம்னு நினச்சுட்ட போல”

சிறு சிரிப்புடன் வந்த பிஜுவின் அந்த வார்த்தைகளை ஒரு வகையில் இந்நேரம் இவள் எதிர்பார்த்தாள் என்றே சொல்லலாம்.

இவளிடம் தனிமையில் விஷயத்தை பேச வந்திருக்கிறான் என புரிகிறதுதானே.

“மூனு வருஷம் கழிச்சு வர வேண்டியவங்க இப்ப ஏன் வந்தீங்க?” எரிச்சலுறாமல்தான் கேட்பதாக எண்ணினாள்.

“அதென்ன என் மேரேஜ் டேட்ட என்ட்ட கேட்காம நீங்க மட்டுமா முடிவு செய்துப்பீங்க?” சிடுசிடுக்காமல்தான் கேட்பதாக நினைத்தாள்.

இப்போது இவளை ஒரு பார்வை பார்த்த அவனோ… ட்ரெசிங் டேபிளைப் போய் குடைந்து ஹேர் ட்ரெயரை எடுத்து வந்து ப்ளக்கில் மாட்டினான்.

“நான் பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன்… நீங்க பாட்டுக்கு…” இன்னுமாய் இப்போது குமுற தொடங்கிய இவள்…

இன்னுமே முகத்தின் இலகுத்தன்மை மாறாமல் அவன் இவளையே பார்த்துக் கொண்டு நிற்பதை காணவும்… அவனது அந்த அன்புசெறி அசராப் பார்வையில் அதற்கு மேல் எகிறக் கூட முடியாமல் பேச்சை நிறுத்தினாள்.

‘இப்படி பார்த்தா என்ன அர்த்தமாம்? டேய் உனக்கு ஐ லவ் யூதான் சொல்லத் தெரியாதுன்னா சண்டை போடவும் தெரியல…’ அவளது கோப மேகத்தின் மீது சந்தோஷ வர்ணம் படரத் துவங்குகிறதே.

“நீங்கதான் மேடம் நேத்து நைட் பேசுறப்ப பி ஜி முடிக்கிற வரைக்கும் மேரேஜ்னு ஒன்னு லைஃப்ல கிடையாதுன்னு சொன்னீங்க” அவன் சொல்ல…

அவன் சொன்ன வகையிலேயே அது உண்மையாய் மட்டும்தான் இருக்க முடியும் என புரிந்ததால் ஒரு பே முழியோடு நேற்றைய அவனுடனான பேச்சை ரீவைன்ட் செய்ய முயன்றாள் இவள்.

நேற்று பிஜு இவளிடம் பழகத் தொடங்கும்வரை இவளது எண்ணம் அப்படித்தானே இருந்தது.

இருந்த உற்சாகத்தில், கலகலவென எதை எதையோ பேசிக் கொண்டிருந்ததில் ‘முன்னால அப்படி நினச்சேன்… இப்ப அப்படி எதுவும் யோசிக்கல’ என்றெல்லாம் சொல்லாமல், இதை எதோ ஒரு பேச்சின் இடையில் குறிப்பிட்டது நியாபகம் வருகிறது.

இதை வைத்து இவள் மன விருப்பம் இது என நினைத்து, யாரும் இவளை அதற்கு எதிராகக் கட்டாயப் படுத்தகூடாதென, எல்லோர் முன்பாக அப்படி சொல்லி வைத்திருக்கிறான் என இப்போது அவன் எதுவும் சொல்லாமலே புரிகின்றது.

இவளுக்காகத்தான் பேசினானாமா?!!!

சற்றே கீழாய் குனிந்து பரிதாபமாய் அவள் முழித்த முழியிலேயே அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டதென அவனுக்கும் தெரிகிறதுதானே.

“எனக்கு இந்த இயர் உன் கோர்ஸ் முடியவும் நம்ம மேரேஜ் இருக்கனும்ன்றதுதான் ஒரிஜினல் தாட்” சொல்லியபடி இப்போது இவளருகில் வந்தவன்,

“ஆனா எனக்கு இப்ப ஒன்னு தோணுது… எப்படியும் உனக்கு படிப்பு முடிய குறஞ்சது மூனு வருஷம் இருக்கு.. அதில் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு மேரேஜ் செய்துக்கிறதுக்கும், இப்ப மேரேஜ் செய்துக்கிறதுக்கும் என்ன வகையில் வித்யாசமாகிடப் போகுது?” என்றான்.

“மேரேஜோட எந்தப் பொறுப்பையும் இப்ப நீ எடுத்துக்க வேண்டாம்… ஜஸ்ட் இப்ப ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் போய்ட்டு வர்ற மாதிரி… இனி நம்ம ஃப்ளாட்ல இருந்து போய்ட்டு வா…

ஹவ்ஸ் சர்ஜன் பீரியட்ல சாப்ட தூங்க கூட டைம் கிடைக்காதுன்னு அபித் சொன்னான்… நமக்குன்னு எந்த டைமும் கிடைக்கலன்னா கூட உன்னை பிக்கப் அன்ட் ட்ராப் செய்ற டைமாவது நாம கூட இருப்பமே…

எல்லாத்துக்கும் மேல  உனக்கோ எனக்கோ எதோ சின்ன ப்ரச்சனை, இன்னைக்குப் போல ஹெல்த் இஷ்யூஸ்னா பக்கத்துல இருந்து பார்த்துக்கிறதுக்காகவாவது மேரேஜ் வேணும்தானே… இல்லன்னா நீ ஹாஸ்டல்ல இருப்ப… நான் உள்ள வந்து பார்க்க கூட முடியாது…”

என தொடர்ந்தவனின் கண் அதில் குமிழ்ந்தும் எழுந்தும் வரும் பாச வகை உணர்வுகள், ஆவல், உடனிருக்க விரும்பும் ஒரு தாகம், தவிப்பு என எல்லாவற்றிலும் இடைவிடாது பயணித்துக் கொண்டிருந்தவளிடம்

“இப்பவே மேரேஜ் செய்துப்பமா ராதிமா?” எனக் கேட்டான் அவன்.

அவளது பெற்றோரை நினைத்து அழுந்திப் போய் கிடக்கும் மனநிலைக்கும், இவனிடம் உணரும் அதீத அன்யோன்யத்திற்கும், அவனோடு எப்போதும் இருக்கப் போவதாக எழும் சுகோன்னத நினைவுக்கும்..

அவன் கேள்வியே போல் ஒரு வருஷத்தில் என்ன வித்யாசம் வந்துடப் போகுது என இவளுக்கும் தோன்றியதற்கும்…

அவன் இப்போது மனக் கண்ணில் விரித்த இவர்களது எதிர்காலம் பற்றிய காட்சியின் சுகந்தத்திற்கும், திருமண திக்கிலேயே இவள் மனமும் சாய…

ஆராதனா முழு மனதாகவே சம்மதம் சொல்லி இருந்தாள்.

அடுத்தென்ன இவளது அப்பாவின் விடுமுறை முடியும்முன் திருமணம் என மூன்றாம் வாரத்தில் ஒரு நாள் வெகு விமரிசையாய் முடிந்திருந்தது இவர்களது மணவிழா.

அன்றைய இரவில் பிஜுவின் கடற்கரை வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கின்றனர் தம்பதியர் இருவரும்.

வீசி அடித்த காற்று ரிஷப்செனுக்கென இவள் அணிந்திருந்த மென் ஆரஞ்சு வர்ண புடவையை தன்னோடு கொண்டு சென்றுவிடுவேன் என விடாது விளையாடிக் கொண்டிருக்க… அதை தடுக்க இருகைகளாலும் புடவையை சமாளிக்க முயன்றபடி,

கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியும் கரு நிற கடலை பார்த்தபடி இவள். இவளுக்கு பக்கவாட்டில் அவன்.

ஒரு கணம் அவன் தோள் வரை பார்வையை செலுத்தியவள் மீண்டும் கடலிலே சென்று தன் பார்வையை நிறுத்த…

இப்போது இவளுக்கு பின்னால் வந்து நின்றவன்… புடவையின் மென்மை இவள் இடைப் பகுதியில் புரியும் வண்ணம் அதன் மீது கை வைத்து வளைத்துக் கொண்டான்.

புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவன் மனைவி.

தொடரும்..

மன்னவன் பேரைச் சொல்லி … மல்லிகை சூடிக் கொண்டேன் 10

Advertisements