மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 8 (2)

ஏற்கனவே பலநாட்கள் கண் விழித்து படித்ததும் முந்திய நாள் இரவின் தாமதித்த தூக்கமுமாக மறுநாள் ஆராதனா தூக்கம் கலையும் போதே ஏறத்தாழ காலை 11 மணி.

அவளது அத்தை வீட்டில் இதெல்லாம் விஷயமே கிடையாது என்பதால் அவள் அறையிலிருந்த அட்டாச் பாத்தில் பல்துலக்கி முகம் மட்டும் கழுவிக் கொண்டு,

முதல் வேலையாக மொபைலை கையில் எடுத்து பிஜு எண்ணை அழைத்தபடி தன் அறையை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

‘கிட்சனுக்குப் போய் காஃபி குடிக்கனும்’ அப்போதைய மிஷன் அதுமட்டுமே.

ஆனால் என்ன கதவைத் திறக்கவும் காதில் விழுகிறது இவளது குரலில்

“பஜ்ஜியா ஓ பிடிக்குமே… ரொம்ப பிடிக்கும்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்ற ஒரு ரிங்டோன்.

தூக்கிவாரிப் போட இவள் முழுவிழிப்புக்கு வர,

அதற்குள் சில பல சிரிப்பு சத்தம் வேறு காதில் விழுகிறது.

நிமிர்ந்த இவளது பார்வையில் படுகிறான் தரை தள வரவேற்பறையில் அமர்ந்திருந்த பிஜு.

இவள் எண்ணுக்குத்தான் இப்படி ஒரு ரிங்டோன் வைத்திருக்கிறான் அவன்.

சோஃபாவில் அமர்ந்திருந்தவன் சிறு வெட்கத்துடன் அவசர அவசரமாக தன் மொபைலை பாக்கெட்டிலிருந்து உருவி எடுத்து இவள் அழைப்பை ஏற்றான்.

கட் செய்றதுக்கு பதிலா அக்சப்ட் செய்துட்டான் போல…

அதற்குள் இவள் அவனை சுற்றிலிருந்த அனைவரும் இவள் பார்வையில் பட்டாயிற்று.

இவளது அத்தை வீட்டினர், அபித், பிஜு, பிஜுவின் பெற்றோர்…கூடவே இவளது பெற்றோரும்.

வர இன்னும் நாலு நாள் ஆகும் என்ற அம்மா அப்பா இப்பவே வந்ததுக்கு இவ நியாயப்படி எவ்ளவு சந்தோஷப்படனும்?

ஆனா இப்ப போகுதே மானம் மங்காத்தா ஆடிப் போகுதே மொமன்ட்…

இதே நேரம் அன்னிச்சையாய் அனைவரும் மேலே நின்ற இவளை நிமிர்ந்து பார்க்க…

நைட் ட்ரெஸில் கலைந்த தலை கோலமாய் நின்றிருந்த இவள் டபால் என தன் அறைக்குள் புகுந்து படீர் என தாழிட்டுக் கொண்டாள்.

அங்கு யாரோ ஏதோ சொல்ல எல்லோரின் குபீர் சிரிப்பு திரும்பவும் காதில் விழுகிறது இவளுக்கு.

இந்த பிஜு மொபைலை டிஸ்கனெக்ட் செய்யலையே அதோட விளைவு அது!

என்னதான் ரிங்க்டோனுக்கு எல்லோரும் சிரிச்சுட்டாலும் மனசுல என்ன நினச்சு வைப்பாங்களோ…?

ஒரே நாள் பழக்கத்தில் ஒருத்தி இப்படியா பேசுவான்னு நினைக்க மாட்டாங்களா?

அதுவும் இவ அம்மா அப்பா இவட்ட இன்னும் கல்யாண பேச்சையே எடுக்கலையே!

எப்படி யோசித்தாலும் இந்த ரிங்க்டோன் போல பஜ்ஜி பிடிக்கும் என்றெல்லாம் இவள் நேற்று பேசவே இல்லை… பின்ன எப்படி வந்துச்சு இந்த ரிங்டோன்…?!

இப்படி எல்லாவற்றையும் யோசித்து  இவள் தவிக்கும் போதே

“டேய் அண்ணா சும்மா ஆசைப்படுவியேன்னு இப்படி வாய்ஸ் மெசேஜ் எடிட் செய்து கொடுத்தா அதை நீ ரிங் டோனாவா வைப்ப?” என அபித் பிஜுவை கடிந்து கொள்வது இவள் மொபைல் உபயத்தில் இவள் காதில் விழுகிறது.

‘எல்லாம் இந்த அபித் வேலைதானா? அவன போடுற போடுல’ என இவள் மனம் புலம்பும் போதே…

“என்னதான் க்ளாஸ்மேட்னாலும் ஆராட்ட இப்படியா விளையாடுவ…?!”

“அவனுக்கு அண்ணியா அவன் வீட்டுக்கே வர்றான்ற சந்தோஷத்துல செய்துருப்பான்… அவள கட்டிக்க போற தன் அண்ணனுக்குதான கொடுத்ருக்கான்… இதப் போய் சொல்லிகிட்டு” என ஆளாளுக்கு அபித்தை ஏற்றும் கண்டிப்பதுமாய் பேசுவதும் இவள் காதில் விழுகிறது.

“அவ்ளவு தூரத்துல ஆரா தனியா இருக்காளேன்ற நிலமைக்கு இப்படி அவ க்ளஸ்லயே ஒரு தம்பி அவளுக்கு இருப்பதுல எனக்கு சந்தோஷம்” என இவள் அப்பா பேச்சை முடிப்பதும் சேர்த்தே இங்கு ஆராதனாவுக்கு  கேட்க…

ஹப்பா என ஒரு நிம்மதியும்… பின்ன யாரும் இவ தலைய உருட்டலையே!

வாவ்!! அபித் நீ இனி எனக்கு தம்பியா… வெரி குட்… என்ற ஒரு எண்ணமும் உண்டாகியது இவளுக்குள்.

கூடவே  இதமாகவும் ஒரு மன நிலை.

பிஜு இணைப்பை ஏற்றிருப்பதே இதே இதற்காகத்தான் இருக்கும்.

இவள் பதறாமல் இருக்க, அங்கு நடப்பதை இவள் கேட்டுக் கொள்ளட்டுமென செய்திருக்கிறான்.

அபித் அவசரமாக அந்த ரிங்டோனுக்கு விளக்கம் சொன்னதும் கூட இவளுக்கும் பிஜுவுக்காகவும்தான் இருக்கும். இப்படியெல்லாம் இவளுக்கு புரிய

ஒருமாதிரி இலகுவாகிவிட்டாள் இவள்.

மொபைலில் அழைப்பை அப்படியே கட் செய்யாமல் வைத்துவிட்டு கிளம்பத் தொடங்கினாள் இவள்.

அவசரமாய் குளித்து, சல்வாரா புடவையா என கொஞ்சமும் குழம்பாமல்… (ஹி ஹி புடவ கட்டிவிட அம்மா வேணுமே…) சற்று வேலைப்பாடுள்ள சல்வாரில் இவள் கிளம்பி முடிக்கும் போது…

ஒரு பக்கம் வெட்கம் வாட்டி வதைக்க… மறுபக்கம் கீழே போக ஆவல் அவளை அலைக்கழிக்கிறது.

அம்மா அப்பாவைப் பார்க்க ஆசை…

அதோடு பிஜு குடும்பத்தோடு வந்து இவள் பெற்றோரிடம் பேசுகிறான் என்றால் அது என்ன விஷயமாக இருக்க முடியும்? இவங்க மேரேஜ் பத்திதான இருக்கும்? அதை தெரிந்து கொள்ள ஆசை…

யாரும் கவனிக்காத நேரம் பிஜுவை கன்னா பின்னா என முறைக்க ஆசை…

பின்ன இப்படியா ரிங்க் டோன் வைப்பான் அவன்? இருக்கு அவனுக்கு இருக்கு…

அவனை ஒரு கை பார்க்கவாவது இவள் கீழே போய் ஆகணுமே…

அதோடு கொஞ்சம் அதிகமாகவே பசிக்குதே! அதுக்கும் கீழ போனாதான ஏதாவது கிடைக்கும்.

ஆனா கீழயே போய்ட்டாலும், எல்லோரும் ஹால்ல வெயிட் செய்துட்டு இருக்கப்ப எப்படி இவ சாப்ட போக?

இப்படி எல்லாம் இவளுக்குள் ஓடிக் கொண்டு இருக்கும் போது இங்கு கதவை தட்டும் சத்தம்.

‘அச்சோ… இங்கயே தேடி வந்துட்டாங்களா? யாரா இருக்கும்…’ அவசரமாய் போய் நிதானம் போல் இவள் கதவை திறக்கும் முன்

“ஹேய் அண்ணி@அத்தைப் பொண்ணு@ க்ளாஸ்மேட்@ டாக்டரம்மா நான்தான்… நோ டென்ஷன்” என்றது அபித்தின் குரல்.

அத்தனை படபடப்பும் குறைய நட்பின் குளிர் புன்னகையுடனேயே கதவைத் திறந்தாள் இவள்.

“அவசரம் இல்லாம சாப்டுட்டு வருவியாம்… உன் ஆள் உத்தரவு” என்றபடி ஒரு கப் காபியும் சில சான்ட்விச்களும் இருந்த ட்ரேயை நீட்டினான் அவன்.

தாறுமாறாய் வந்து தலையீடு செய்கிறதே  இவளுக்குள் சந்தோஷ மிரட்சி ஒன்று. அதற்குள் தடையின்றி தாழ ஆழமாய் விழுந்தாள் இவள்.

இவள் முகத்தைப் பார்க்கவும் அபித்திற்கு அது புரியும்தானே…

“யார்டா அவன்? எங்க ஹாஸ்டல்ல வந்து எங்களுக்கே உப்மா கொடுக்கவன்?” முன்பு அவள் அந்த உப்மா தினத்தில் சொன்ன தொனியிலும், அவளது குரலிலும் சொல்லி நக்கலடித்துவிட்டு நகர்ந்தான் அவன்.

அந்த நொடி அவனைப் பார்த்து இவள் முறைத்தாலும், இந்த நொடியும், இவளவனின் காதலும் இந்த அபித்தின் நட்பும் வெகு வெகுவாக சுகிக்கத்தான் செய்கிறது ஆராதனாவுக்கு.

எல்லோரும் காத்துட்டு இருக்கப்ப இவ்ளவு லேட்டா எழும்புனதும் இல்லாம… அவங்கள காக்க வச்சுகிட்டு இப்படி சாப்பிட வேற செய்தால் என்ன நினைப்பாங்க என ஒரு தயக்கம் இவளுக்குள் இருந்தாலும்,

பிஜுவே சாப்பாடு அனுப்பி இருக்கிறான் என்றால் அவன் இதெல்லாம் யோசித்திருக்க மாட்டானா? அவன் வீட்டைப் பத்தி அவனுக்குத்தானே தெரியும் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டுவிட்டே இறங்கிப் போனாள் இவள்.

அங்கு பிஜுவுக்கு அடுத்த இருக்கையில் உட்காரும் நிலை இவளுக்கு.

அடுத்த பக்கம்

Advertisements