மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 7 (3)

ராதியைப் பொறுத்தவரை பிஜு அன்றிலிடம் பேசிய விதம் இன்னுமே மனதில் இருக்கிறது…ரொம்பவுமே வலித்த மனதின் குரல் அது….

ஆக அதனால்தான் அந்த நேரத்தில் அவள் அதைப் பற்றி எதுவும் கிளறாமல்…. இனிமையான விஷயங்களை மாத்திரமாக பேசியது….

இவளது ஆதிக் அண்ணாவிற்கு இத் திருமணத்தில் விருப்பம் இருக்கிறது என்பதே பிஜுவை நம்ப இவளுக்கு போதுமானது என்பதால் பிஜுவின் ப்ரபோசலை எளிதாய் ஏற்றுக் கொண்டாள்….

ஆனால் அதற்காக பிஜுவிடம் அது என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் இவளுக்கு முடியாது….

ஆக அவன் ரிலாக்‌ஸாக இருக்கும் இந்த நேரத்தில் விசாரித்தாள்.

இந்த நொடி அவன் இப்படி ஒரு கேள்வியை எதிர்பர்க்கவில்லை என்பதை அவன் கண்கள் காட்டிக் கொடுத்தாலும்….. மறுப்பேதும் சொல்லாமல் விஷயத்தை சொல்லத் தொடங்கினான் அவன்…

அவனுக்கு தெரிந்தவரை சிறு வயதிலிருந்து காரோ பைக்கோ அது தலை தெறிக்கும் வேகத்தில் சென்றால்தான் அன்றிலுக்கு பிடிக்குமாம்….

ஆனால் இன்று அவளே 40கிலோமீட்டர் ஸ்பீட்ல போகனும் எனவும் இவனுக்கு படு ஆச்சர்யமாம்….

அதைப் போய் அவளிடம் விசாரிக்கப் போயிருக்கிறான்…. அவளோ

“இப்பல்லாம் சாவப் பார்த்தா ரொம்ப பயமா இருக்குதுடா…முன்னால என்ன மிஞ்சினா செத்துதான போவோம்னு ஒரு தைரியம் இருக்கும்……

இப்பல்லாம் பாப்பாக்காக நான் கண்டிப்பா உயிரோட இருந்தாகனுமேன்னு இருக்கு….. நான் இல்லைனா யாரு பார்த்துப்பா பாப்பாவ?

ஆதிக் ரொம்ப கேரிங்தான்….அவங்க ரொம்பவே நல்லா பார்த்துப்பாங்கதான்….ஆனா எல்லா நேரமும் அவங்க பாப்பா கூட இருக்க முடியாதே….எப்படியும் பாப்பாக்காகவாவது ரெண்டாவது மேரேஜ் எல்லோரும் சேர்ந்து செய்து வச்சுடுவாங்க….

அந்தப் பொண்ணு என் குழந்தைய கஷ்டபடுத்தினா என்ன செய்ய? அப்படில்லாம் என்னால நினைச்சுப் பார்க்கவே முடியலையே….

இதுல திடீர் திடீர்னு நானும் ஆதிக்குமே ஆக்சிடென்ட்ல இறந்துட்டா பாப்பா மட்டும் பிழச்சுட்டா என்ன ஆகும் அப்படின்னுல்லாம் பேனிக் ஆகுது…..

அம்மா பெரியம்மால்லாம் அப்படி ஒன்னும் என் பிள்ளைய விட்டுட மாட்டாங்கன்னாலும்…. அவங்களும் வயசானவங்க எவ்ளவு நாள் பார்க்க முடியும்னு எல்லாம் தோனுது…..

அதான் ஆதிக்கை நான் காரை வேகமா ஓட்ட விடுறதே இல்ல இப்பல்லாம்….

ஸ்டில் எங்களுக்கு எதாவது ஆச்சுதுன்னா நீதான்டா எங்க பாப்பாவ நான் பார்க்கிற மாதிரி பார்த்துக்கனும்…..நீ இருக்கன்னு நினச்சா மட்டும்தான் எனக்கு நிம்மதியே வருது… பார்த்துப்பதானா? பார்த்துப்பேன்னு உன் வாயல நீ சொல்லு…” என்ற வகையில் எதேதோ பேசி இருப்பாள் போல….

“அவபாட்டுக்கு லூசு மாதிரி பேசிகிட்டே போறா ராதி…எனக்கு அவ சொல்ற ஒவ்வொன்னும் சீன் சீனா கண்ணுக்குள்ள தெரியுது…உயிரே போய்ட்டு…..” என்றவன்

“விபரம் தெரிஞ்ச காலத்துல இருந்து அவ அழுதா கூட எனக்கு மனசு கேட்காது….. இதுல அவ இல்லாத உலகத்தில் அவ குழந்தைய நான் பார்த்துகனும்னு எல்லாம் யோசிக்கிறப்ப எப்படி இருக்குது தெரியுமா…?”  என்றுவிட்டு  சற்று இடைவெளிவிட்டவன்

“ரொம்ப லோன்லியா இருந்துது…..உன் கூடவே இருக்கனும்னு ரொம்பவும் பட்டுது…..அதான் அந்த வேகத்தில் வந்து அப்டி பேசிட்டேன்” என்றான்…

அதுவரைக்கும் அவளுக்கு இருந்தது காதலோ இல்லையோ எனும் வண்ணம் அவனிடம் தலைகுப்புற ராதி விழுந்தது இங்குதான்….

பொதுவாக கர்பகாலத்தில் பெண்களின் மனம் எதை எதையோ எண்ணுவதும் குழம்புவதும் தவிப்பதும் இயல்பு….

உடலில் ஏற்படும் வகை வகையான ஹார்மோன் மாற்றங்கள் கூட இதற்கு காரணமாக இருக்கும்….. ஆக அன்றிலின் பேச்சு வெகு சாதாரணம் என்பது இவளது மருத்துவ அறிவுக்கு புரிகின்றது…..

அதே நேரம் விபரம் தெரிந்த காலத்திலிருந்து இவனுடன் ஒட்டி பிறக்காத ரெட்டை போல் வளர்ந்துவிட்ட அன்றில் இவனிடம் இப்படி சொன்னால்  அவன் மனம் படும் பாடும் இவளுக்கு புரிகின்றதுதான்….

ஆனால் அவளை அள்ளிச் சாய்த்தது அத்தனை வேதனையில் அவன் இவளைத் தேடிய விஷயம்.

வலிக்கின்ற குழந்தை தன் அம்மாவைத் தேடுவது போல்….மனதில் முதல் உறவாய் இவளை வைத்திருக்கிறான் அவன்…

“ஐ லவ் யூ அழுமூஞ்சிப் பாப்பா” என்று வருகிறது இவளது வாயில்…

“ஹேய் “ என்றபடி இவள் முகத்தை திரும்பிப் பார்த்தான் அவன்…

“ ஐ லவ் யூ குட்டிசெல்லம்….. ஐ லவ் யூ ஆட்டுக்குட்டின்னு ஆயிரம் ஐ லவ் யூ சொல்லித்தான்  தினமும்  என் அம்மாவும் அப்பாவும் என்ன கொஞ்சுவாங்க…. அதனால எனக்கு ஐ லவ் யூல்லாம் செயற்கையா தோனாது….   நிறைய நீங்க கேட்டாக வேண்டி இருக்கும்….”

இவளது அடுத்த வார்த்தைகள் இப்படி இருந்தன..

அன்றிலைப் பற்றி பேசியதில் மீண்டுமாய் சற்று உணர்ச்சிப் பிடிக்குள் சென்றிருந்தவன் முகத்தில் இதற்குள் ஒரு இலகுத் தன்மை வந்துவிட்டது….

பின் அன்றிலின் மனநிலை அதற்கான காரணம் இப்படி சூழலில் இவன் என்ன வகையில் பேச வேண்டும் என்றெல்லாம் இவள் விளக்க…

வெகுவாகவே அவன் இயல்புக்கு வந்துவிட்டாலும்….

”ஆனாலும் டெலிவரின்றது ரொம்பவும் டெரிபிள்தான்”  என்று மட்டும் சொல்லிக் கொண்டான்…

“ஆனாலும் எல்லா லேடீசும் கோத்ரு செய்துடுவாங்கப்பா….” என்றபடி கிளம்புவதற்காக எழுந்து கொண்டாள் இவள்…

மருத்துவ மாணவியாக அவளுக்கு அப்படித்தான் ஆறுதல் சொல்ல வருகின்றது…

“ம்…எல்லோருக்கும்தான் ஒரு நாள் சாவு வருது….அதுக்காக அதை யாராவது சாதரணம்னு எடுத்துக்கிறாங்களா… அப்றம் இது  மட்டும் எல்லோருக்கும் நடக்கின்றதால சாதாரணம்னு சொன்னா எப்படி?” என்றான் அவன்…

திரும்பவுமாக அவனுக்குள் மீளா வகையில் விழுந்தாள் இவள்…

பொதுவா இது ரூடா அலட்சியமா இருக்ற அப்பாவாகப் போகும் ஆண்களைப் பார்த்து இவள் சொல்லும் டயலாக் இது…. எந்த ஒரு ஆணும் இப்படிச் சொல்லி இதுவரை இவள் கேட்டது இல்லை….

“உன்ன எனக்கு ரொம்பவும் பிடிக்குதே பஜ்ஜி பையா” தனக்குள் சொல்லிக் கொண்டாள்…

ஆனால் எப்போது வரைக்காம்??

தொடரும்…

மன்னவன் பேரை சொல்லி… மல்லிகை சூடிக் கொண்டேன்… 8

Advertisements