மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 7 (2)

பார்வையில் படுகிறது  பப்ளிக்காய் பால்காய்த்துக் கொண்டிருந்த பருவ நிலா….

அழகாய் அமைக்கப்பட்டிருக்கிறது  அதன் கீழ் அங்கு ஒரு விருந்து மேஜை….

“வீட்லதான் ரூம்குள்ள  என் கூட வர யோசிச்சியே அதான் இங்க அரேஞ்ச் செய்தேன்” என ஒரு விளக்கம் பிஜுவிடமிருந்து…

அச்சோ ஆ ஊ என எந்த அலட்டலுமின்றி அமைதியாய் போய் சாப்பிட உட்கார்ந்தாள் இவள்…

சில டிஃபன் வகைகள் இருந்தாலும் பலவித கலந்த சாத வகைகள்தான் ப்ரதானமாய் இருந்தது…..

இரவிலும் இவளுக்கு சாதம் சாப்பிட பிடிக்கும்தான் ஆனால் அதெல்லாம் இவன்ட்ட யாருப்பா சொன்னாங்க?

“நீதான கலந்த சாதம் பிடிக்கும்னு சொன்ன…. நம்ம சைடெல்லாம் வளைகாப்புக்கு இப்படி கலந்த சாதம்னு ஒரு கான்செப்ட் இருக்றதே தெரியாது….வெஜிடேரியன் மீல்ஸ், நான்வெஜ் ப்ரியாணி இதுதான் இந்த மாதிரி ஃபங்க்ஷனுக்கெல்லாம் செய்வாங்க…

அதான் நைட்டுக்காவது உனக்கு பிடிச்ச மதிரி அரேஞ்ச் செய்யலாம்னு அபித்த அனுப்பி வச்சேன்….” இவள் வாய்விட்டு கேட்காத கேள்விக்கு விடை சொல்லிக் கொண்டே இவளுக்கும் அவனுக்குமாய் பரிமாறினான்…

“உப்மாவுக்கு ப்ராயச்சித்தம் போல…..” டபக்கென வந்து விழுந்தன இவள் வாயிலிருந்து வார்த்தைகள்….

“ஹேய் அது… உனக்கு பிடிக்காதுன்றதுக்காக செய்யலைப்பா…. அவ்ளவு பேருக்கு அந்நேரம் வேற எது செய்றதும் நிஜமாவே கஷ்டம்……அதான் உப்மா சஜஸ்ட் செய்தேன்….உனக்கு மட்டும் தனியா எதாவது கொண்டு வந்து கொடுக்க ஆசைதான்….ஆனா மொத்திடமாட்ட நீ…? அதான்… “ என தன் பக்கத்தை டிஃபென்ட் செய்தவன்

“ஸ்டில் தப்புன்னா சாரி”  என சட்டென சரண்டர் ஆனான்…

அதற்கு மேல் இவளாவது சீரியஸாக எதையாவது பேசுவதாவது….

“ஹ ஹா…உங்க சாரி செம லேட்ஜி…நான் உங்கள அதுக்கு எப்பவோ ரிவஞ்ச் எடுத்தாச்சு” என்றபடி கையிலிருந்த தன் மொபைலில் எதையோ ப்ரவ்ஸ் செய்து அதை வாசிக்க கொடுத்தாள்….

“நான் எழுதிகிட்டு இருக்க சீரீஸ்ல அன்னைக்கு  இப்படி ஒரு சீன் எழுதினேனே…. முந்தின எப்பிலலாம் ஹீரோ பேர் ஜீவான்றதால அதை மாத்த முடியல….. ஆனா இந்த ஜீவா நீங்கதான்” என ஒரு அறிமுகமும் கொடுத்தாள்.

வாசிக்க தொடங்கினான் பிஜு..

‘ஷெட்டில் நுழைந்த சுஹா, அங்கு மயங்கி கிடந்த ஜீவாவைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தாள். வேகமாக சென்று ஒரு பாட்டிலில் நீரை கொண்டு வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை எழுப்பினாள்.

அவன் மெல்ல கண் விழிக்க, “என்ன ஜீவா என்னாச்சு? எப்படி மயங்குனீங்க?”  என்று கேட்க,

“தெரில சுஹா, கொஞ்ச நேரமாவே ஒரு மாதிரி இருந்துச்சு. வண்டிய நிறுத்திட்டு வரவும்  மயக்கம் வந்துச்சு…”

” அட, நேத்து நைட் சண்டை போட்டதுல  சாப்பிடாம போனீங்களே.. அதனால இருக்குமோ? “

” இல்லையே சுஹா.. ” என்று இழுத்தவன்..

” நேத்து நடு ராத்திரில ரொம்ப பசிச்சுதுனு உனக்கு தெரியாம வந்து, ஹாட்- பாக்ஸ்ல இருந்த உப்புமாவா சாப்டனே .. ”

சிக்குன திருடன் லூக்-உடன் சொன்னான் அவன்.

இப்போது புரிந்தது சுஹாவிற்கு..

சாப்பிடாமல் இருந்ததால் அல்ல, அவள் செய்த உப்புமாவை சாப்பிட்டதால் வந்த மயக்கம் இது என்று..

ஆம். அவன் கோவித்து கொண்டு எழ, அவளும் சமையல்காரர் செய்து வைத்ததை கொட்டி விட்டு சாப்பிடாமல் சென்றுவிட்டாள்.

ஆனால், கொஞ்ச நேரத்தில் பசி எடுக்க, வந்து பார்த்தால், கிச்சன் பளிச் பளிச்…

ஆபத்துக்கு பாவமில்லை என்று..

” பத்து நிமிஷத்துல உப்புமா தயார் ” என்ற FB போஸ்ட்-ஐ பார்த்து சிறிய விஷபரிட்சையில் இறங்கினாள் சுஹா..

ஒரு மாதிரி உப்புமா போல வந்தாலும், அவள் செய்ததை அவளாலே சாப்பிட முடியாமல்தான் அங்கேயே வைத்துவிட்டு அவள் சென்றது. 

பாவம், that -இல், this  எலி சிக்கும் என்பது அவள் எதிர்பாராத ட்விஸ்ட்.

முகத்தை பாவமாக வைத்தபடி..

“சாரி ஜீவா, அது நான் செய்த உப்புமா.. ” என்று விழிக்க..

“அடிபாவி, அநியாயமா என்னை கொல்ல பார்த்துட்டியேடி.. “

எவ்வளவு முயன்றும் முடியாமல், விழுந்து விழுந்து சிரித்தான் ஜீவா.

“உனக்கு இருக்குறது culinary skills இல்ல.. ‘கொல்ல’னரி Skills” என்று அவன் வெறுப்பேற்ற..

சீரியசாக முறைத்தாள் சுஹா.

வாசித்து முடிக்கும் முன்னே கண்ணில் நீர் வர வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான் பிஜு….

தன்னைக் கட்டுப்படுத்த அவனுக்கு வெகு நேரம் தேவைப் பட்டது….

அவனோடு சேர்ந்து சிரித்தாலும் அவன் சிரிப்பதைத்தான் வெகுவாக பார்த்திருந்தாள் ராதி.

ஒரு வழியாக சிரிப்படங்க….

”என்னமோ இது எனக்கு பனிஷ்மென்ட் மாதிரி இல்லையே….. உன் கொல்லனரி ஸ்கில்லத்தான் ரொம்ப ஓட்டினது போல இருக்கு…” என கமென்ட் கொடுத்தான்.

“அது ஓட்னது இல்லைங்க…உண்மை…அதுலதான் தானா வந்து மாட்றீங்க சர்ஜி நீங்க” இவளது கவ்ண்டரில் மீண்டுமாய் சிரித்தவன்…

“பைதவே உன்னோட இந்த கதை எழுதுற டேலண்ட் பத்தி இப்ப வரை எனக்கு தெரியாது….ரொம்ப நல்லாவே எழுதுற…” என பாராட்டினான்.

“கதைல உங்கள இப்படி வச்சு செஞ்சுடுவேன்னு தெரிஞ்சும் அப்ரிஷியேட் செய்றீங்க பாருங்க…. ஆனாலும் நீங்க ரொம்ப நல்ல நல்லவங்க” இப்படியாய் அவன் பாராட்டை ஏற்றாள் இவள்..

அடுத்தும் அவள் கதைகளில் அவள் ஹீரோவை வச்சு செஞ்ச சில காமடி சீன்களை அவனுக்கு சொல்ல……. இப்படி சிரிக்க சிரிக்கவே அந்த சாப்பாட்டு வேளை முடிவடைந்தது….

அதன்பின் அலை தொட்ட ஈர மணலின் முடிவில்  சென்று அமர்ந்தாள் இவள்….. மெல்லிய கொண்டல் காற்று சின்னதாய் இவள் முடி கலைத்தது…..

“ரொமன்ஸ் செய்யலாம்னு வந்தா சிரிக்க வச்சே கொல்லப் பார்த்துட்டியே” என்றபடி அடுத்து வந்து அமர்ந்தான் பிஜு…

இவள் பதில் ஏதும் சொல்லவில்லை….கையிலிருந்த மொபைலில் ஒரு புல்லாங்குழல் இசையை வழியவிட்டாள்…

“வாவ்…” எனத் தொடங்கி இவன் என்ன சொல்ல வந்தானோ…?

“இப்ப சொல்லுங்க அன்றில் அண்ணிட்ட அப்படி என்ன விஷயம் சீரியசா பேசிட்டு இருந்தீங்க அதுவும் அவ்ளவு எமோஷனாகிறபடி?” கேட்டபடி அவன் கண்களைப் பார்த்தாள்.

அடுத்த பக்கம்

Advertisements