மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 6 (3)

 

த்தனை நாள் தூக்கமின்றி படித்த களைப்பு…..இந்நேரத்து இசை…..கூடவே லைட் ஸ்விடச் எது ஏன தேட பிடிக்காமல் அப்படியே விட்ட அந்த நீல வெளிச்சம்……

இன்ஸ்டென்டாய் தூங்கி இருக்கிறாள் இவள்….

இதெல்லாம் சரிதான்…அதற்காக அவன் ரூம்லயா போய் தூங்கித் தொலைவ….அவன் என்ன நினைப்பான்….?

அதவிட வேற யார் பார்த்திருந்தாலும்தான் என்ன நினைப்பாங்க…? அலறி அடித்தபடி எழுந்தவள்….

பூட்டாமல் மூடி வைத்திருந்த கதவைக் காணவும்  ‘கண்டிப்பா வந்து பார்த்துட்டு..ரூம சாத்தி வேற வச்சுட்டு போய்ருக்கானே’ என  இன்னுமாய் வெட்கமும் நோகலுமாய் நலிந்தாள்.

‘ப்ரோப்ஸ் செய்ய கூட்டி வந்தா குப்புற படுத்து தூங்கிட்டான்னு லைஃப் டைம்க்கும் ஓட்டுவானோ….?’

தித்திப்பாய் ஒரு சரவெடியும் அவள் சாந்தியற்ற மனதில் சத்தம்  போட்டு சுக சுகமாய் துடிக்கும்படியாய் ஒரு சேதாரம் செய்வித்தது…

வேக வேகமாய் அறையை விட்டு வெளியே வந்தாள்….

இருட்டிவிட்டதை சில ஜன்னல்கள் காட்டிக் கொடுக்க….. வெகு வெகுவாய் பயந்து போனாள் இவள்….

சில நிமிட நேரம் தூங்குவதென்பது வேறு,….. இப்போது வரை அப்படித்தான் நினைத்திருந்தாள்…. ஆனால் உண்மையில் இவள் மணிக் கணக்காய் தூங்கி இருக்கிறாள் போலும்….

சாயந்தரம் ஒரு மூனு மணி போல இங்க வந்தவளாச்சே…. இவ்ளவு நேரம்ன்றப்ப பெரியவங்க  வரைக்கும் இவள தேடி இருப்பாங்கதான…. இங்க வந்து தூங்குறது தெரிஞ்சா  அவங்கல்லாம் இவள என்னதுன்னு நினைப்பாங்க இப்ப?

படு அவமானமாய் உணர்ந்தாள்…

‘இந்த பிஜுதான் எழுப்பலைனாலும் இவ அண்ணாவாது எழுப்பி இருக்கலாம்…’  அழக் கூட வருகிறது…

அவசர அவசரமாய் மாடி இறங்க படிகளைப் பார்த்து இவ ஓட “இது எனக்குப் பிடிக்கல…சுத்தமா பிடிக்கல” என பிஜு அடக்கப்பட்ட அடிக் குரலில் சீறிக் கொண்டிருப்பது இவள் காதில் விழுகிறது….

இருந்த மனநிலையில் என்ன ஏதென கவனிக்கவெல்லாம் அவளுக்கு சுத்தமாய் தோன்றவே இல்லை….இன்னுமாய் இவள் ஓட….

இவள் ஓடிய திசையிலேயே அந்த அறை இருந்திருக்கும் போல….அவன் சத்தம் இன்னும் தெளிவாய் கேட்கிறது…

“நினைக்கவே எனக்கு சுத்தமா பிடிக்கல…. ஆனாலும் உன் நிம்மதிக்காக மட்டும் சொல்றேன்…”  உறுமிய அவன் குரலில் இருந்த வலியும் வேதனையும் இவளை இப்போது தாக்க இவள் வேகம் அதாக தடை பட்டுப் போனது….

அவன் குரல் வந்த அறையை நோக்கி மெல்ல நடக்க துவங்கினாள்….  “என்னைக்கு உனக்காக எத செய்து கொடுக்காம போய்ருக்கேன்…. அதுவும் இப்டி கோலத்துல நின்னுட்டு நீ கேட்ட பிறகு…..” பிஜுயின் குரல் பிசிறியது….

அந்த  குறிப்பிட்ட அறையின் கதவு ஓரளவு திறந்து கிடக்க….. அதன் வழியாய் அன்றில் காணக் கிடைக்கிறாள் ஆராதனாவுக்கு….கண்ணீரும் சன்ன முறுவலுமாய் அவள்…. பிஜுவின் முதுகுதான் இவளுக்கு கிடைக்கிறது…

“கண்டிப்பா செய்றேன்” வலியின் மொத்த உருவமாய் வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.

“டேய் யாரோ வர்ற சத்தம் கேட்குது….. ஆராவான்னு பாரு…” அன்றிலுக்கு கதவுப் புற இவள் அசைவுகள் கவனத்தில் பட்டிருக்கும் போல்…..கேட்டாள்.

அதனால் அவசர அவசரமாய்  வாசலை நோக்கி வந்த பிஜு…. பட்டென முழுதுமாய்  கதவைத் திறந்து  கொண்டு பார்த்தவன்…

ஆராதனாவைக் காணவும்  அப்படி ஒரு கேள்வியைக் கேட்டான்….

“நாம மேரேஜ் செய்துப்பமா ராதி?”

“ உன் கூடவே இருக்கனும் போல இருக்கு”

தொடரும்…

மன்னவன் பேரைச் சொல்லி… மல்லிகை சூடிக் கொண்டேன்… 7

Advertisements