மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 6 (2)

பிஜுவின் வீடு அன்றில் வீட்டிற்கு அடுத்த வீடு….

இவர்கள் அங்கு நுழைந்த போது வீட்டில் பிஜுவின் அக்கா மட்டும் அவரது குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தார்….

இவளைப் பார்க்கவும் அவர் வாய் நிறைய வரவேற்றாலும் தூக்கத்திற்காக சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தை அதற்கு மேல் எதையும் அனுமதிக்காத நிலையில்…

உரையாடல் சின்னதாகவே முடிந்து போக…..வீட்டைக் காமிக்கிறேன் என கூட்டிப் போன பிஜு

“இது அப்பா ரூம்…. இது  பொதுவா நாங்க படிக்க ஹோம் வொர்க் செய்யன்னு சின்னதுல இருந்து யூஸ் செய்ற ரூம்…..” என ஒவ்வொரு அறையையும் வாசலிலே நின்றவண்ணம் காண்பித்து…..

இவ்வாறு தரை தளத்தை ஒரு சுற்றிவிட்டு மாடிக்கு கூட்டிப் போனான்…

இவளுக்குள் என்னவெல்லாமோ ஏக வேகமாய் ஓடத் துவங்கியது….  அதில்

“இது என் ரூம் ராதி” என்றபடி  அந்த ரூமைத் திறக்கவும் அப்படியே நின்று போனாள் அவள்….

இருந்த அத்தனை பட்டாசு பரபரப்பையும் அடித்துப் போடும் அத்தனை ரம்யம் அங்கு ஆளுகை செய்து கொண்டு இருந்தது….

கதவைத் திறக்கவும் காதில் வந்து விழுகிறது மெல்லிய குழல் இசை…..

புல்லாங்குழல் என்பது ஆராதனாவுக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான ஒன்று…. தேடி அலைந்து குழல் இசை சிடிக்களை வாங்கிக் கேட்பது அவளது வழக்கம்…..

அதை கிண்டல் செய்ற ஃப்ரெண்ட்ஸ் கூட அவளுக்கு உண்டு…. ஆனால் அதைக் கேட்டு ரசிக்கும் ஒரு நபர் கூட அவள் வட்டத்தில் இதுவரைக்கும் இல்லை…

இதில் அவனோ “எனக்கு ஃப்ளூட் மியூசிக்னா ரொம்ப இஷ்டம்….சோ  ரூமுக்குள்ள வரவும் அதா ஆன் ஆகிற மாதிரி செய்து வச்சேன்….” என இயல்பாய் சொல்ல எப்படி இருக்கிறதாம் இவளுக்கு…?

கண்ணை உறுத்தாத மெல்லிய நீல ஒளியும் அறைக்குள் சிந்திக் கொண்டிருந்தது திறந்த கதவின் வழியே காணக் கிடைக்கிறது இவளுக்கு….

இன்னுமே அது இவள் இதயத்திற்கு ஏக இன்ப இடிகளை இதமாய் சிந்திச்  சேர்த்தது அது…..

ஏனெனில் கடும் இருட்டிற்குள் தூங்குவதைவிட இந்த நீல ஒளி விளக்குகள் அவளுக்கு எப்போதும் ப்ரியம்…. இவனுக்கும் அதுதான் வழக்கமா?? என இப்போது ஓடுகிறதே ஒரு நினைவு….

இப்போது அடுத்த ப்ரளயம்….. அவனது அறைக்குள் போய் அவனது மற்ற ரசனைகளை அறிந்து வர ஒரு ஆவல் உந்தி தள்ளுகிறது இவளுக்குள்…..

அதேநேரம் ‘ஐயோ எப்டி உன்னால இப்டில்லாம் யோசிக்க முடியுது’ என்றும் குதித்து தெறிக்கிறது அதே மனம்…

சரியாய்  அந்த நொடி சம்பந்தமில்லாமல் சிணுங்கித் தொலைக்கிறது அவனது மொபைல்….. கையில் எடுத்துப் பார்த்தவன் முகம் இவளிடம் கெஞ்சலாய் யாசித்தது மன்னிப்பை….

“கொஞ்சம் வெயிட் பண்ணேன்…ப்ளீஸ் இப்ப வந்துடுறேன்…” இப்படி கேட்பவனிடம் இவள் என்ன சொல்லிவிடப் போகிறாளாம்?

சின்னதாய் தலையாட்டினாள்…

“நின்னுட்டே இருக்காத….. உள்ள நிறைய சிடி கலெக்க்ஷன் வச்சுருக்கேன்….உனக்கு பிடிச்ச எதையாவது கேளு….இந்த கால் முடிய கொஞ்சம் டைம் எடுக்கும்” என்றுவிட்டு போய்விட்டான் அவன்…

இவளோ சற்று நேரம் வாசலிலே சற்று நேரம் நின்றிருந்தவள்… ‘அவன் கூட உள்ள ரூம்குள்ள போறதுதான கஷ்டமா இருக்கும்…. இப்ப போய் பார்க்கலாமே….அவன் வரவும் வெளிய வந்துடலாம்’ என முடிவெடுத்து உள்ளே நுழைந்தாள்…

இவளுக்கு மிகப் பிடித்த குழலிசை ஒன்று கரைந்து கொண்டிருக்க அதனோடு சேர்ந்து தானும் கரைந்தபடி அறையை சுற்றி வந்தவள்….

‘அவன்  வர்ற சத்தம் வெளிய கேட்கவும் போய்டலாம்…. இந்த ம்யூசிக் அலாதியா இருக்கே…’ என்ற எண்ணத்தோடு அறைக்குள்  கிடந்த திவானில் ஒரு கட்டத்தில் உட்கார்ந்து கொண்டாள்….

அடுத்து அவளுக்கு விழிப்பு வரும் போது அந்த திவானில் முழுதாய் படுத்தபடி முற்றிய தூக்கத்தில் தான் தொலைந்திருப்பதே அப்போதுதான் புரிகின்றது அவளுக்கு…

தெய்வமே என்ன செய்து வச்சுருக்கேன் நான்????

அடுத்த பக்கம்

Advertisements