மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 4 (2)

விருந்தினர் அமர வரிசை வரிசையாய் போட்டு வைத்திருந்த அலங்கார சோஃபாக்களில் சுவரோரமாய் கிடந்த ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டாள்.

‘ஆமா இவனுக்கு என்னதான் ஆச்சு?’ சொந்தம்னதும் இப்டியா ஒருத்தன் பல்டி அடிப்பான்?’ யோசிக்க தலைப் பட்டாள்…

அவள் வரவும் அப்படியே கடகவென பின்னால் வர கூடாது என்று நினைத்தானோ…. சில நிமிடங்களுக்குப் பின்

“ப்ரவீன் மதுரை சைட்ல நம்ம ஸ்டாஃப் யாரும் இல்லன்னு க்ளையன்ட் சொல்லிட்டு இருக்காங்க….என்னன்னு கவனிங்க”  என மொபைலில்  யாரிடமோ பேசியபடி   வந்த அந்த பிஜு,

இவளுக்கு அடுத்து அந்த சோஃபாவில் வெகு சாதாரணமாய் அமர்ந்து கொண்டான்….

சுவரோரம் இவள் இருக்க….. இரண்டு பேர் மாத்திரம் அமர முடிந்த அந்த சோஃபாவில்  அடுத்து அமர்ந்த அவன் தன் கால் மீது கால் போட்டுக் கொள்ள…..

வரிசைகளில் அமைக்க பட்டிருக்கும் இருக்கைகள் அல்லவா…? இனி அவன் வழிவிட்டால்  ஒழிய இவள் எழுந்து கூட  போக முடியாத நிலை…

‘டேய்ய்ய்ய் என்ன கொஞ்சம் பம்முனா ஓவரா போறியா…?’ என மனதுக்குள் உறுமியபடி இவள் அவனைப் பார்த்தால்…..அவனோ முழு கவனத்தையும் மொபைலிலும்….. கண்களை விழா மேடையிலுமாய் வைத்திருந்தான்…..

அதாவது அமர்ந்திருந்த வகையால் மட்டுமல்ல அவன் பார்வை கவனம் என எதாலும் இவளை தொடவில்லை…..

முழு கண்ணிய  வகையில்தான் நடந்து கொண்டிருக்கிறான்….. இன்னும் அந்த ப்ரவீன்ட்ட என்னமோ ஆஃபீஸ் விஷயம்தான் பேசிக் கொண்டிருக்கிறான்…..

இவளுக்கும் ஆண் என்பவன் பெண்ணிற்கு அடுத்த இருக்கையில் அமரக் கூடாதென்ற நினைப்பெல்லாம் கிடையாதுதான்….. ஆனால் இவனை அப்படி அசட்டை செய்ய முடியவில்லையே….

கொஞ்சம் முன்னால வரைக்கும் எப்படி விரோதி லுக் கொடுத்துட்டு இருந்தவன் இவன்?

வழிவிடச் சொல்லி எழுந்து போய்விடலாமா என இவள் நினைத்த நேரம்….அங்கு மேடைக்கு அன்றிலை அழைத்து வந்தார்கள்…

“ஃபங்ஷன் ஆரம்பிக்குது…..இனி கொஞ்ச நேரம் யார் காலையும் அட்டென் செய்ய மாட்டேன்….பார்த்துக்கோங்க” என்றபடி மொபலை ஸ்விட்ச் ஆஃப் செய்தான் அவன்….

அதோடு  கேமிராவில் நிகழ்வுகளை பதியவும் தொடங்கினான்.

இந்நிலையில் அவனைப் போய் எப்படி எழும்ப சொல்லவாம்? அதான் அவன் எதுவும் தொந்தரவும் செய்யலையே…… ஆராதனாவும் எதுவும் சொல்லாமல் அமர்ந்து கொண்டாள்…

இவள் தீவிரமாக விழா விஷயங்களை கவனிக்க தொடங்க…. ஏதோ ஒரு நேரத்தில் இயல்பாய் வருகிறது பிஜுவின்  வார்த்தைகள்…

“அனிய பார்க்கவே நல்லா இருக்குதுல்ல ராதி…” அவனது அந்த குரலும் அதிலிருந்த  அன்றில் மீதான தாய்மையான ஒரு ரசனையும்…. இவள் மீதோ ஹார்மோன்கள்  களம் காணா இயல்பான வகை அன்யோன்யமும்…. இவளை சட்டென தள்ளி தாக்க….

ப்ரமிப்பாகவே தனக்கடுத்திருந்தவனை திரும்பிப் பார்த்தாள்….

பிஜுவின் கண்கள் கவனம் என எல்லாம் இப்போதும் கூட மேடையில்தான்…..

“அனி குட்டியா இருந்தப்ப அம்மா அவள இடுப்புல தூக்கி வச்சி சாப்பாடு ஊட்டினதெல்லாம் ஞாபகம் இருக்கு…..அதுக்குள்ள அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பா வரப் போது…”

அவன் வார்த்தைகளைப் போல அவன் முகபாவமும் கடந்த காலத்தில் எங்கோ தேன் பூரிப்பில் லயித்திருந்தது…..

இதில் எதையும் விரும்பாதிருக்க இவளுக்கு முடியாதிருந்தது….

“இந்த பங்ஷன் வைக்கிறது முதல்ல அனிக்கு பிடிக்கல….. எதுக்கு இது தேவை இல்லாம ஷோன்ற மாதிரி நினைப்பு அவளுக்கு….. அவ வேண்டான்னதும் மச்சானுக்கும் இத வைக்க இஷ்டம் இல்ல….அப்றம் இது சேஃப் டெலிவரிக்கான ப்ரேயர்…. ரெண்டு மூனு பேரா சேர்ந்து ப்ரே பண்ணா கண்டிப்பா பதில் கொடுப்பேன்னு கடவுளே சொல்லி இருக்கார்னுலாம் சொல்லிதான் சம்மதிக்க வச்சோம்…. ஆனா இப்ப பார்த்தா எல்லார விட அவதான் எக்சைட்டடா இருக்கிறா….”

அவன் மனதுக்கு தோன்றுவதை எல்லாம் அப்படியே இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என ஆராதனாவுக்கு புரியாமலில்லை…

ஆனால் எடுத்த உடன் டாப் கியரில் எகிறும் இந்த அன்யோன்யம் இவளுக்கு புத்தம் புதிது….. இதை இவள் ஆராய ஆரம்பித்த நொடி

“ஹேய் பங்ஷன் வைக்கனும்னு நினைக்கவும் வச்சுட்டோம்…..இது எதுவும் அனிக்கு ஸ்ட்ரெயின் ஆகுமா?” என இப்போதுதான் இதை யோசிப்பவனாக அவசரமாய் இவள் புறம் திரும்பியவன்…

அதுவரைக்கும் அவனை கவனித்திருந்தாலும் வாய் திறந்து அவனோடெல்லாம் பேசும் எந்த வகை நிலையிலும் இல்லாதிருந்த இவள்…..

இவளது படிப்பு சம்பந்தப்பட்ட கேள்வி என்பதாலும்….அதுவும் அனி அண்ணிக்காக எனும் போது…..

“நோ நோ….அதெல்லாம் பயப்பட ஒன்னுமில்ல….. எதுவும் ஸ்ட்ரெய்ன் செய்யாம ரெஸ்ட் எடுத்துகிட்டாங்கன்னா போதும்….. ஆக்சுவலி அவங்க எமோஷனலி சந்தோஷமா இருக்கிறதுதான் மத்த எல்லாத்த விட முக்கியம்…. பிசிகல் வர்க்க விட எமோஷனல் ஹர்ட்தான் ப்ரெக்னன்சிய….. குட்டி பாப்பாவல்லாம் அதிகமா அஃபெக்ட் செய்யும்…..” என பேசிவிட…….

சின்னதாய் சில மில்லிமீட்டர் அளவேயான ஒரு நிறைவின் சிரிப்பை இவள் மீதாய் சிந்தவிட்டு மீண்டுமாய்  மேடை நோக்கி கேமிராவுடன் திரும்பிக் கொண்டான்…..

முன்பெல்லாம் அவனைப் பார்க்கும் போது வந்து போவது ஒரு வித பதட்டமும் சில் வகை தடுமாற்றங்களுமே இவளுக்கு….

ஆனால் இப்போது இவனின் இத்தனை அருகில் ஏதிது இப்படி உயிர்வரையாய் பாயும் அமைதி என்றிருக்கிறது இவளுக்கு…

காரணமற்ற கணத்த பாதுகாப்பைத்தான் உணர்ந்தாள்….

இதை இவள் நினைத்த நொடி… முந்திய நொடி வரையிலான நிலையில், கல்லெறிந்து கலைத்தது அவனது இந்த கேள்வி…

“உனக்கு இந்த பங்க்ஷன் வைக்கிறதெல்லாம் பிடிக்குமா ராதி?”

அவன் குரலில் இவ்வார்த்தைகள் காதில் விழவும் திக்கென ஒரு பயவகை பதட்டம் பரவிப் படர்கிறது அவளது ஏதோ ஒரு எல்லையில்…

சுள் என ஒரு வகை கோபமும் வருகிறது…

இத்தனைக்கும் இவள் முகம் பார்த்தெல்லாம் அவன் கேட்டிருக்கவில்லை…. ஆனால் இதற்குள் இவள் கோபத்தை உணர்ந்தவனாய் கேள்வியாய் இவளைப் பார்த்து திரும்பினான் அவன்…

ஆனால் அதற்குள் அவன் கேள்வியின் பொருள் சரியாகவே புரிந்து விட்டது இவளுக்கு…..

இவளுக்கு வளைகாப்பு நடத்துவதைப் பற்றி பேசுகிறானோ  என முதலில் புரிந்து  கோபத்தை தூண்டிய அவன் வார்த்தைகள்…….பொதுவாக இப்படி விழாக்கள் இவளுக்கு பிடிக்குமா என விசாரிக்கிறான் என்ற புரிதலை அடுத்து தர…

கோபமெல்லாம் இல்லை  என்பதை உணர்த்திவிக்கும் ஒரு தேவையையும் அது உண்டாக்க….. பின்ன கோபத்துக்கு காரணம் ‘எனக்கு என் வளகாப்பு நியாபகம் வந்துட்டு’ன்னு இவன்ட்ட சொல்லவா முடியும்…?’

“ஓ பிடிக்குமே….. இப்படி பங்ஷன் வீட்ல எலுமிச்சை சாதம் புளிசாதம் கோக்கனட் ரைஸ்னு நிறைய வெரைட்டி ரைஸ் பொங்கல்லாம் தருவாங்கல்ல….அதனால எனக்கு செம இஷ்டமாங்கும்…. ” என்றாள் இவளது சுபாவ கலகலப்புடனே…

அதுதான் ஆரம்பமாக இருக்கலாம்…அடுத்து அவர்களது உரையாடல் இயல்பான கலகலப்பில் தங்கு தடை இன்றி தொடர்ந்தது….

அடுத்தென்ன அன்றைய விழா இனிதே நிறைவு பெற…. அன்றிலை அவளது அம்மா வீட்டுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்….

அன்றிலோடு ஆதிக் தவிர ஆராதனா மட்டும்தான் இவர்கள் சார்பாக கிளம்பியது….. பொதுவாக மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் செல்வதெல்லாம் கிடையாது…

ஆனால் ஆதிக் வர வேண்டும் என அன்றில் விரும்ப….

“அனி அம்மா வீட்ட நீ பார்த்தது இல்லைதான….அதோட அடுத்த வீடுதான் எங்க வீடும்….. வந்துட்டு வா…இங்க தனியா இருந்து என்ன செய்யப் போற….” என்ற பிஜுவின் அழைப்பிலும்…..மற்றவர்களும் கிட்ட தட்ட இதையே சொல்லவும் இவளும் கிளம்பிவிட்டாள்….

அடுத்து நடந்தது அவள் முற்றிலும் எதிர்பாராதது….

தொடரும்…

மன்னவன் பேரைச் சொல்லி….மல்லிகை சூடிக் கொண்டேன்…. 5

Advertisements