மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 3 (2)

ஆராதனா அவளது பெற்றோருக்கு ஒரே பெண்……

அவளது தந்தை சத்யமூர்த்தி ஆர்மியில் ல்யூட்டினன்ட் ஜெனரல்…. இப்போதைக்கு கொல்கத்தாவில் போஸ்ட்டிங்….

அத்தனை பெரிய பதவி என்பதால் எப்போதும் குடும்பத்தை கூட வைத்துக் கொள்ள அனுமதி உண்டு அவருக்கு…..

அந்த வகையில்  பிறந்ததிலிருந்தே நாட்டின் பல பாகங்களில் வளர்ந்தவள் ஆராதனா…..ஆனால் வருடம் ஒரு முறை விடுமுறை என்றால் அவள் வந்து நிற்க அவளுக்கு உறவு என இருக்கும் ஒரே இடம்  இந்த அத்தை வீடுதான்….

அதிலும் அத்தை பிள்ளைகளான தபி அக்காவும் ஆதிக் அண்ணாவும்தான் இவளுக்கு அம்மா அப்பாவிற்கு அடுத்த குடும்பம்.

இதில் ஆதிக் அண்ணாவின் திருமணம் சற்று எதிர்பாராத நேரத்தில் அமைந்துவிட…… அதே நேரம் இவளுக்கு செமஸ்டர் என்பதால் கலந்து கொள்ளமுடியவில்லை…..

அடுத்தும் படிப்பு இறுக்கிப் பிடிக்க…ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போது அண்ணாவின் மனைவி அன்றிலின் வளைகாப்பிற்காக இவள் ஆசை ஆசையாக கிளம்பி இருக்கிறாள்.

இவளது அம்மா அப்பாவும் அங்கு வந்து இவளுடன் கலந்து கொள்வதாக திட்டம்.

சென்னை ஏர்போட்டில் இறங்கும் போது முழு உற்சாகத்தில் இருந்தாள் ஆராதனா….

இவளை ரிசீவ் செய்ய வந்திருந்த ஆதிக் சற்று தூரத்திலேயே கண்ணில் படவும் டேய்ய்ய்ய் அண்ணா…என கத்திக் கொண்டுதான்  ஓடினாள்…..

லக்கேஜ் ட்ராலியை அவன் கையில் கொடுத்துவிட்டு….. அவன் தோளைப் பிடித்து தொங்காத குறையாக அவனோடு  அவர்களது கார் அருகில் வரை சென்றவள்….  “கீய தா நான்தான் ட்ரைவ் பண்ணுவேன்…”என அடாவடியாய் தன் அண்ணனின் கையிலிருந்த கீயை பிடுங்கிக் கொண்டு கதவை திறக்க….

திடுதிப் என காரின் ட்ரைவர் இருக்கையில் இருந்து இறங்குகிறான் அபித்…..

”ஹேய்ய்ய்ய் அத்தப் பொண்ணு…. நான்தான் ட்ரைவ் பண்ணுவேன்” என கெத்தாக சொன்னபடி….… பூட்டி இருந்த காரிலிருந்து ஆளை எதிர்பார்த்திருப்பாளாமா  இவள்?

ஒரு கணம் “இயே…யி” என பதறிப் போய் துள்ளியவள்……அடுத்த நிமிடம் அது அபித் என புரியவும் பே என்ற முழியோடும் நம்ப மாட்டா  மகா ஆச்சர்யத்தோடும்….கூடவே வெடித்துக் கிளம்பும் பெரும் உவகையோடும் தன் அண்ணனைப் பார்த்தாள்….

ஆதிக் முகத்திலும் ஆமோதிப்பான புன்னகையைக் காணவும்…. தேன் கொண்ட ஆட்டம் பாம் ஒன்று திக்கெங்கும் வெடித்து சிதறுகிறது சின்னவள் எல்லையெங்கும்…..

அபித் வெறும் நட்பாய் மட்டுமாய் இல்லாமல் உறவாய் இருப்பதில் அத்தனை அத்தனை ஆனந்தம் இவளுக்கு…. அது அபித்தை பற்றியது மட்டும்தானாமா? பிஜுவின் முகம் மன வெளியில் எட்டிப் பார்க்கிறதே…..

‘அத்தைப் பொண்ணாமே நான் உனக்கு….. இருக்கு உன்ன கவனிச்சுகிறேன்…’ மனதிற்குள் பிஜுவிடம் சூளுரைத்தாள்….. ‘அவனும் வந்திருப்பானோ?’ ஆவலாய் தனக்குள்ளே பரபரக்கவும் செய்தாள்…..

இதற்குள் “நேத்து வரை அடையாளம் தெரியாத அத்தைப் பொண்ணுக்கு…..”  என்றபடி அபித் ஒரு பொக்கேயை நீட்ட…..அதை படு பாந்தமாய் வாங்கிக் கொண்டவள்….

சற்றும் அவன் எதிர்பாரா அடுத்த கணத்தில் திடுதிப்பென அவன் இறங்கி இருந்த ட்ரைவர் இருக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்…

“எது எப்டினாலும் சாரதீயம் எனக்குத்தான் அப்பனே” என்றபடி….

அடுத்தென்ன சிரிப்பும் சீண்டலும் கும்மாளமுமாய் கார் பயணம் ஆதிக்கின் வீடை நோக்கி…

ஆதிக்கின் மனைவி அன்றிலின் மாமா மக்களாம் அபித்தும் பிஜுவும்…..

இவளைப் போலவே ஆதிக் அன்றில் திருமணத்தின் போது அபித்துக்கும்தானே பரீட்சை….ஆக இவளும் அவனும் திருமணத்துக்கு செல்லாததால் ஒருவர்க்கொருவர் உறவென்று தெரியவில்லை போல….

நேற்றுதான் அபித் முதன்முறையாக ஆதிக்கைப் பார்ப்பதேயாம்…..

பையன் நேத்து நைட்டே அடிச்சு பிடிச்சு ஓடி வந்துருக்கான்….. அப்போது அறிமுகத்தில் இப்படி இந்த மெடிகல் காலேஜில் படிக்கிறேன் என இவன் சொல்ல…என் தங்கையும் அங்கதான இருக்கா என ஆதிக்  சொல்ல….. இதோ இந்த கார் பயணத்தில் வந்து நிற்கிறது அது…..

காதுகளை அபித்துக்கும் தன் அண்ணாவுக்கும் கொடுத்திருந்தாலும் வீடை நோக்கி நெருங்க நெருங்க மனம் டம் டம் என ஆனந்த  அடி அடித்த  வண்ணம் அந்த பிஜுவைத்தான் எதிர்பார்க்கிறது இவளுக்கு….

“பிஜு அண்ணாவும் உன்ன மாதிரிதான் முறைய மாத்திக் கூப்டுவான்…..ஆதிக் அண்ணாவ மச்சான்னு சொல்லிட்டு இருப்பான்….” அபித் பேச்சுவாக்கில் சொல்வதை கவனியாதது போல் கருத்தில் பதித்தவள்

‘இதுக்கு என்ன அர்த்தம்….. இனியாவது ரிலடிவ்ஸ்னு ஈசியா பேசுவான் அந்த பிஜுன்னு நினச்சுக்கலாமா? கேஷுவலா இவன் அண்ணன பத்தி இவட்ட சொல்றானே….’  என சிந்தனா வசப்பட்டாள்.

எது எப்படியோ அடி முடியற்ற ஒரு நிம்மதி நதி இவள் அடிமனவெளிகள் அலையடிப்பின்றி அவிழ்ந்து கொண்டிருக்கிறது….

அந்த பிஜுவாக பேசவில்லை என்றாலும் உறவு தந்த உரிமை இருக்கிறது……. நேரடியாய் போய் ‘உங்கள ஹர்ட் பண்ண நான் நினச்சதே இல்லை’னு…… மனம் விட்டுப் பேசி விடுவாள் இவள்….. இனி இந்த அவஸ்தை இருக்காது…

இதை எண்ணும் போது இவளுக்குள் ஏற்படும் கட்டவிழ்ந்த காற்று நிலைதான் இத்தனை நாள் இந்த விஷயம் இவளை எத்தனையாய் அழுத்திக் கொண்டிருக்கிறது என்றே புரிவிக்கின்றது….

‘இப்போதும் அபித் மட்டும்தான் இங்கு ஏர்போர்ட் வந்திருக்கிறான்….அந்த பிஜு இவள கண்டுகலை’ என அறிவு அறிக்கை கொடுத்தாலும்….

“ஹாய் அத்தான்….நான் உங்க அத்தப் பொண்ணு” என்றபடி இவள் போய் பிஜு முன் நிற்பதாகவும் அதில் அவனுக்கு புரையேறுவதாகவும் கற்பனை செய்கிறாள் என்றால்….இவளுக்கோ  நிஜத்தில் சின்னதாய் எட்டிப் பார்க்கிறது கண்ணில் துளி…

அவ்ளவா அவன் விஷயத்தில் நான் டிஸ்டர்ப் ஆகுறேன்??

எது எப்படியோ இவள் வீட்டுக்கு செல்லும் போது அவன் அங்கு இல்லை….

தொடரும்…

மன்னவன் பேரை சொல்லி….மல்லிகை சூடிக் கொண்டேன்….4

Advertisements