மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 21(4)

இது birth defect எனப்படும் பிறவியில் வரும் குறைபாடு.

எத்தனை சீக்கிரம் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் உதிரப் போக்குக்கு வழி செய்யப் படுகிறதோ அந்த அளவுக்கு நலம்.

இது மிக மிக அரிதான குறைபாடு, ஆக ஒரு மருத்துவர் தன் வாழ்நாளில் ஒரு முறை Cryptomenorrhea கேஸை சந்திப்பது கூட அபூர்வம்.

ஆக வயிறு வலி என ஒரு சிறுமி வரும் போது, சட்டென யாருக்கும் அது இத்தகைய குறைபாடாய் இருக்குமோ என சிந்திக்கத் தோன்றிடாது.

ஆக வெகு  தாமதமாகவே அச் சிறுமியின் இந்தக் குறைபாடு கண்டறியப் பட்டிருக்கிறது.

ராதி அன் கோ மருத்துவமனையை அடையும் போது அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை ஆரம்பமாகியது.

அது திருப்தியான வகையில் நிறைவேறிவிட்டாலும், அதற்குள் சிறுமிக்கு ரத்தம் விஷமாகி, மிக ஆபத்தான நிலை வந்திருந்தது.

உண்மையில் அச் சிறுமியின் புறம் இது ஜீவ மரணப் போராட்டம்.

போராட்டம் அவளுக்கு மட்டுமா போராடிய மருத்துவக் குழுவுக்கும்தானே!

நேரம் தவறாமல் மருந்து செலுத்தவும், ரத்த பரிசோதனைகள், பிற சோதனைகள் என பர பரத்துக் கொண்டிருந்தது களம்.

நேரம் கடந்து கொண்டிருந்தது.

பிஜு தன்னவளுக்காய் ஆசை ஆசையாய் பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டிருக்க, அந்நிலையில் கலக்கம் மறைத்த முகத்துடன் துரித பாவத்தில் வந்து நிற்கிறாள் அவன் மனைவி.

சற்றும் தனிமை கிடைக்கா வண்ணம், அவள் தோழியரும் சூழ்ந்து நிற்க, இந்த மருத்துவமனை நிலையை சொல்லிவிட்டு, அதே அவசரத்தில் கிளம்பியும் போய்விட்டாள் அவள்.

அந்த நிலையில் இவன் தன் மன நிலையை காதல்புறத்தை என்னவென்று காண்பித்துக் கொள்ள முடியும் அவளிடம்? ஆக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“டென்ஷனாகாம போய்ட்டு வா, எல்லாம் நல்லாத்தான் நடக்கும்” என மட்டும் சொல்லி அனுப்பி இருந்தான்.

ஆனால் அடுத்து அவன் வாங்கியவைகளுக்கு பில் போட்டுக் கொண்டு வெளியே வரும் போதே ராதியை மருத்துவமனையில் போய் பார்க்கவென முடிவு செய்துவிட்டான்.

இரண்டு நாளாய் இவன் அவளிடம் முகம் கொடுக்காமல் இருந்ததில் எத்தனையாய் வெறுமை உணர்வு. அதில் அவளருகிலேயே இருக்க ஒரு வேட்கை இவனை இப்போது கொன்று தின்று கொண்டிருக்கிறதே!

முப்பொழுதும் அவளை தன் மூச்சுக் காற்றுக்குள் முடிந்து கொள்ள ஆசை என்ன வெறியே இருக்கிறது.

அது முடியாது எனினும் உன் மீது வருத்தம் எதுவும் இல்லை என இப்போது அவளிடம் இவன் காட்டிவிட முடியும்தான்.

அதை செய்யாதவரை சற்று முன் வரை இவன் மனம் வறண்டு கிடந்தது போல்தானே அவளுக்கும் மனம் அலைபுற்று பிறண்டு  கொண்டு இருக்கும்.

அத்தனை நேரம் அவளை ஏன் தவிக்கவிட வேண்டும்?

கிளம்பிவிட்டான்.

தொடரும்…

Advertisements

9 comments

 1. Bajji… porikkiradhukku munnadiye ponnu adangittu pole.. podhadhukku bubble wrapper, diary milk ellam vere vaangittu porraru. words ellam azhagu sis.. waiting for next episode

 2. Sema update mam. The words you have used to describe their love ❤ is simply superb mam. These are new to me and makes me to love our mother tongue more and more. Wow what an amazing writing mam.Enna oru love Biju and Radhi have on each other mam. Waiting eagerly for your next update mam.

 3. Ayyo bajji paya u r so sweet,hmm ana unaku romance than set Ava matenuthu,pavam!ipidi manju manju love pannitu athan Ava kitte solla kooda ila,ipovum ala asathra gift vanganum nu bubble rap vanguriye da paya una enna than panna?

 4. சொக்கி போய்விட்டேன் ஜி…. ஒ மை கடவுளே…. தமிழ் உங்களிடம் துள்ளி விளையாடுகிறது.. அதில் நாங்கள் சிக்கி சின்னா பின்னா ஆவது உறுதி…
  இந்த காதலை நீங்க வர்ணிக்கும் போது இன்னும். அழகாக ஆழமாக புரிகிறது …
  பஜ்ஜி உன் புரிதலும், காதலும் ப்பப்பா என்னை அப்படியே இறக்கை இல்லாமல். பறக்க வைக்கிறது…
  ஆரா உன் இதயத்தில் தேன் மழை சாரலா தெரியவில்லை என் மனதில் தேனில் ஊரிய பலா போல இருக்கு…

  Anna you are amazing 💖💕 love your way of writing and expressing love….
  படிக்க படிக்க ஆனந்தம்…

Leave a Reply to Devi Cancel reply