மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 21 (2)

ஆராதனாவோ அருகிலிருந்த காக்ஷ்மெட்டிக் செக்க்ஷனில் நின்றிருந்தவள் அங்கு எதையோ வாங்கப் போவது போல் பார்த்துக் கொண்டு நின்றாலும், அவள் மனம் எல்லாம் அவன் புறம்தான்.

இதில் காதில் விழுகிறது “ஏய் லூசு அண்ணி தனியா இங்க என்ன பண்ற?” என்ற பாசக் குரல்.

பொற்கொடி!!

“அது” என இவள் ஆரம்பிக்கும் போதே,

“ஹேய் ஹே லிஃப்ட் வந்துட்டு, வாங்க வாங்க” என பொற்கொடி கூட வந்திருந்த இவள் நட்புகளின் சின்ன கோஷ்டி இவளையும் பொற்கொடியோடே இழுத்துக் கொண்டு அருகில் இருந்த லிஃப்டிற்குள் நுழைய,

“ஏய் வி… விடுங்க” என இவள் சொல்லி முடிக்கும் முன் லிஃப்ட் கிளம்பியே இருந்தது.

“அவங்க வந்துருக்காங்க மாடு” இவள் பொற்கொடியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் தளம் சென்று சேர்ந்திருந்தது லிஃப்ட்.

“அச்சச்சோ கரடி வேலைய தனியா பார்க்காம கூட்டமா வேற பார்த்துட்டமா? சரி பிரவாயில்ல என்ன தினமுமா செய்றோம், இங்க எங்க கூட இருக்கன்னு அண்ணாட்ட சொல்லிடு, வந்துடுவாங்கல்ல” என இவளையும் தங்களோடு இழுத்துக் கொண்டு போனது கூட்டம்.

சற்று யோசனையோடே ராதி பிஜுவை அழைத்தாள். அவளுக்கு அவன் கோபம் போய்விட்டதென தெரியாதே!

பிஜுவின் எண் அந்த நேரம் பிசியாக இருக்க,

கையில் மொபைலை பிடித்தபடியே ராதி அரை மனதாக இவள் நட்புகளின் சல்வார் தேடலில் கலந்து கொண்டாள்.

இதில் எதேச்சையாய் அவள் மொபைல் ஸ்க்ரீன் சேவரில் இருந்த புகைப்படத்தை கவனித்த இவள் நட்பு ஒருவள்,

“வாவ் ஆரா, இந்த ஸ்னாப் அமேசிங், இந்த காக்ரா கலர் காம்போல சல்வார் கிடைச்சா சூப்பரா இருக்கும்” என்க,

அடுத்த நிமிடம் மொபைல் பொற்கொடி கைக்குப் போய். சேல்ஸ் கேர்ள் பார்வைக்கும் போயிருந்தது.

“இந்த கலர் காம்பினேஷன்ல சல்வார்ஸ் காமிங்க” என்றபடி.

அது பிஜுவும் ராதியுமாக நிற்கும் படம்.

அன்றில் வளைகாப்பு அன்று எதோ ஒரு நேரம் இவர்கள் இருவருமாக நின்று பேசிய போது எடுக்கப்பட்டிருந்தது அது.

இவளுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

அந்த புகைப் படத்தைப் பார்க்கவும், அந்த சேர்ல்ஸ் கேள் “சாந்திக்கா, இங்க பாருங்க” என பக்கத்து சேர்ல்ஸ் கேளை அழைக்க,

அடுத்து அங்கிருந்த அத்தனை விற்பனைப் பெண்களும் வந்து ஃபோட்டோவைப் பார்ப்பதும் அடுத்து ராதியைப் பார்ப்பதுமாய் அவர்களுக்குள் சின்ன சின்ன சிரிப்போடே பேசிக் கொள்ள,

அவர்கள் அந்த உடையை பற்றி மட்டுமல்லாமல் வேறு எதையோவும் பேசுகிறார்கள் என ராதி அன்ட் கோவுக்குப் புரிய,

“ஏன் என்ன ஆச்சு?” என இவர்கள் நாலைந்து முறை கேட்கவும்,

“இல்ல இந்த சார் இங்கதான் வந்து இந்த ட்ரெஸ் எடுத்தாங்க” என அவர்கள் சொல்ல,

“வாவ்வ்வ் ஆரா சொல்லவே இல்ல” என இவளது மக்கள் கோரஸ் பாட,

ராதிதான் அழுத்தம் திருத்தமாக இதை அரேஞ்ச்ட் மேரேஜ் என்று சொல்லி வைத்திருக்கிறாளே!

இதில் திருமணத்திற்கு முன்னே பிஜு இவர்கள் கல்லூரிக்கு வந்து வந்து செல்லும் நபர். அவன் இங்கு வந்து ராதிக்கு உடை எடுத்தான் எனில் நட்புகளுக்கு இது என்னதாய் தோன்றும்?

அடுத்த பக்கம்

Advertisements