மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 2 (2)

இவள் அதிர்ந்து முழிக்கும் முன்பாக கூட சட்டென வருகிறது அபித்தின் வார்த்தைகள்…

“அது என் அண்ணா….இங்க மெஸ்ல ஒன்னும் இல்லைனதும் நமக்காக அவனுக்கு தெரிஞ்ச கடையில இருந்து  சமான் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கான்…. அதுவும் பந்த் டைம்ல கார்ல அங்க இங்க அலைய முடியாதுன்னு பைக்ல அத்தன டைம் அலஞ்சாச்சு இதுக்குள்ள….”

அதிலிருந்த கோபம் இவளுக்கு புரியாமலில்லை…..அதோடு இவளது ஆதிக் அண்ணாவல்லாம் இப்ப இந்த அபித்தோட அண்ணனை இவ சொன்னது போல யாராவது இப்படி சொல்லி இருந்தாங்கன்னா….இவள் இதுக்கும் மேலயும் ஹார்ஷா ரியாக்ட் செய்திருப்பான்னும் தெரியும்….

இருந்தாலும் இவள் நிச்சயமாக இந்த அர்த்தத்தில்  சொல்லவில்லை..….இதை கேட்கவும் மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாகவும் இருக்கிறது….

“சாரி அபித்…. I didn’t mean this” என்றபடி கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீரை கட்டுப் படுத்தியபடி வெளியே வந்துவிட்டாள் இவள்….

இவளோடு இவள் கூட்டமும் பின்னாலே வருகின்றது….

“சீரியஸா எடுக்காதடி…நீ விளையாட்டா சொன்னன்னு அபித்க்கு தெரியாதுல்ல….பப்ளிக்ல தன் அண்ணன ‘டா’ போட்டு பேசிட்டியேன்னு இருக்கும் அவனுக்கு…. அபித்ட நான் பேசுறேன்….அவனே வந்து சாரி கேட்பான் பாரு…. புரிஞ்சுப்பான்” பொற்கொடி இவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு வர…

அதற்குள் இவ்வளவு நேரத்துக்குள் அபித் இவளிடமாய் வந்திருந்தான்…

“ஹேய் ஹேய் சாரி…வெரி சாரி…..நீ விளையாட்டுக்கு பேசுறன்னு எனக்கு அந்த நேரம் யோசிக்க தெரியல…. நிச்சயமா தப்பா பேசிட்டேன்…  ப்ளீஸ் ப்ளீஸ் என்னால நீ சாப்டமா போனன்னா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும்…. ப்ளீஸ் மனசுல வச்சுக்காத…. தயவு செய்து விஷயத்தை பெருசா யோசிக்காத…. ப்ளீஸ்பா….“ வழியை அடைத்தபடி வந்து நின்று கெஞ்சினான்….

அவன் கண்ணிலிருந்த தவிப்பும் நட்பும் இவளுக்கு புரியாமலில்லை…. அதோடு அவன் இடத்தில் இவளை வைத்து யோசித்து முடித்திருந்ததாலோ என்னமோ அவனுடைய இந்த செயல் மிக மிக உயர்வாக பட்டது இவளுக்கு…

ஆதிக் அண்ணாவ எவன்டா அதுன்னு யாராச்சும் கேட்டு இவ போய் அவ்ளவு ஈசியா அந்த நபர்ட்ட சாரி கேட்ருவாளாமா என்ன?

ஆக அபித்திடம் இதற்கு மேலும் மறுத்துக் கொண்டு போக இவளுக்கு முடியாது…..

‘இட்ஸ் ஓகே அபித்…..நோ ப்ராப்ஸ்” இழுத்து வைத்து புன்னகைக்க முயன்றாள்…

“ப்ளீஸ் இங்கயே வெயிட் பண்ணு…ஜஸ்ட் டென் மினிட்ஸ் உப்மா ரெடி ஆகிடும்…பர்ஸ்ட் பேட்ச்லயே  சாப்ப்டுடு… ப்ளீஸ் வெயிட்…. போய்டாத…” இவளிடம் கெஞ்சியவன்….

“ஏய் கொடி கொஞ்சம் நிறுத்தி வைங்கப்பா உங்க கட்சி தலைவிய” என பொற்கொடியிடம் வேறு கேட்க…

இவளுக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டதென்றால்…..கூடவே இதற்கு மேல் உப்மா பிடிக்காது என்று உண்மை காரணம் சொன்னால் கூட, அது ஏதோ இவள் இன்னும் கோபத்தில் முறுக்குவது போல்தான் தோன்றும் என்பது புரிய….

அங்கு மரத்திற்கு அருகில் அமைத்திருந்த சிமிண்ட் பெஞ்சில் சென்று உட்கார்ந்துவிட்டாள் இவள்…

அதாவது காத்திருக்கிறாளாம் அபித் சொன்னது போல்…

அபித்தும் சொன்னது போல் அடுத்து உப்மா ரெடி ஆகவும்  முதல் வேலையாக இவள் முன்னால் வந்து நின்றான்…

“ஹே ப்ளீஸ் எல்லோரும் வாங்கப்பா” என…

பரிமாறும் போதும் ஸ்பெஷல் கவனிப்புதான்…. ஆனா என்ன கவனிச்சு என்ன….? உப்மா உப்மா தானே….

கடைசி கனவு போலயே உப்மாவ சாப்ட்டுதான் ஆகனுமா இவ!!!

ஒவ்வொரு ஸ்பூன் உப்மா வாயில் வைப்பதும்….தண்ணீர் குடித்து அதை முழுங்கி வைப்பதுமாய்  இவள் போராடிக் கொண்டிருக்கும் போது ஏதேச்சையாய் இவள் திரும்பிப்பார்க்க….. சமயலறை சுவரோரம் அபித்துடைய அந்த அண்ணன் நின்று இவளை ஒருவிதமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவள் பார்ப்பதை உணரவும் அவன் இயல்பு போல் கிட்செனுக்குள்  சென்றுவிட்டான்.

‘சோ திட்டம் போட்டு என்னை உப்மா சாப்ட வச்சு பழிவாங்கிட்டு…..அதைப் பார்த்து வேற சந்தோஷப்படுறான் அந்த முகமூடி திருடன்…’  மனதிற்குள் முனங்கிக் கொண்டாள் இவள்.

சாப்பாடு முடியவும்  அந்த கூடத்தின் பின் புறமாக இருந்த தட்டு கழுவும் இடத்திற்கு சென்று தட்டை வைத்துவிட்டு வர வேண்டும்…. அப்படி செல்லும் போது பக்கவாட்டில் இருக்கும் சமயலறை வாசலை கடக்க நேரிடும்….

பேருக்கு சாப்பிட்ட ஆராதனா முதல் ஆளாய்  சென்றவள் அந்நேரம் இயல்பாய் சமயலறைக்குள் பார்க்க….. ஜூனியர் சீனியர் என  சில பல தலைகள்.

அதில் இந்த அபித்தின் அண்ணன்….சட்டையின் ஸ்லீவை  மடக்கிவிட்டுக் கொண்டு….. ஏறத்தாழ அவன் உயர இரும்புக் கரண்டியைக்  கொண்டு…. தரையில் அடுப்பில் இருந்த ஒரு பெரிய அண்டாவில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தான்.

இவளை அவன் கவனித்ததாக தெரியவில்லை….இன்னொரு ஸ்டூடண்ட் யாரிடமோ என்னமோ பேசி  சின்னதாய் சிரித்தபடி வேலையில் ஈடுபட்டிருந்தான் அவன்….

அளவுக்கு மீறி அவனை இன்சல்ட் செய்துட்டோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி இருந்தாலும் அத்தனை நேரமும் அவன் மீது  எரிச்சலும் குறையாமல் இருக்க, பின்ன இவளுக்கு பிடிக்காதுன்னு  உப்மா செய்ய வச்சுட்டானே…..

இப்போதோ ஏனோ சின்னதாய் இந்த காட்சி  ஆராதனாவுக்குப் பிடிக்கிறது…..பந்தா இல்லாம ஃப்ரெண்ட்லியா யார் யார்ட்ட பழகினாலும் இவளுக்கு பிடிக்கும்….

அதே நேரம் இவளுக்கு எதிர்ப்படுகிறான் அபித்….

அனிச்சையாய் இவள் பார்வையின் திசையைப் பார்த்த அவன் முகத்தில் சின்னதாய் ஒருவித புன்னகையோ? சட்டென இவளுக்குள் ஒரு தர்மசங்கடம்….என்ன நினைக்கிறான் இந்த அபித்? அவன் அண்ணன சைட் அடிக்கிறேன்னா?

“உங்க அண்ணா என்ன கேட்டரிங் படிச்சுருக்காங்களா?” சூழ்நிலையை இலகுவாக்க…..இப்படி யோசிச்சுதான் பார்த்தேன் என்பது போல் இவள் கேட்டு வைக்க…

“அவன் பி இ முடிச்சுட்டு  ஷோ ரூம்ஸ்ல, ஆஃபீஸ் பில்டிங்கஸ்,  மால்ஸ்ல  யூஸ் செய்வமே glass work… அதை கான்ட்ராக்ட் எடுத்து செய்து கொடுத்துட்டு இருக்கான்…. ”  என பதில் வந்தது அபித்திடமிருந்து…

இவளோ உண்மையில் அசந்து போனாள் என்றுதான் சொல்ல வேண்டும்…. அவளைப் பொறுத்தவரை பிசினஸ் மக்கள் என்றாலே கொஞ்சம் கெத்து பார்ட்டீஃஸ் அதாவது எல்லாவற்றிலும் ப்ரஸ்டீஜ்  பார்ப்பார்கள்.

இவ ஆதிக் அண்ணாவைத் தவிர யாரும் லாபம் இல்லாமல் எதையும் செய்யாதவர்கள்…  அதுவும் இப்படி சும்மாவெல்லாம் யாருக்காகவும் சமயலறையில் சென்று நின்றுவிடாதவர்கள்….

இந்த முறை அவளையும் அறியாமல் ஒரு அதீத  ரசனையோடு அந்த அவனின் புறம் சென்று வந்தன இவள் கண்கள்…

ஆனால் அடுத்த கணமே தன் தடுமாற்றம் குறித்து சற்றாய் ஆடியும் போனாள் ஆராதனா…என்னதிது….இவளுக்கு இப்படில்லாம் தோணுது…..?

அதோடு அபித்  வேறு எதிரில் நிற்கிறான்….. என்ன நினைப்பான்?

இதற்கு மேல் இங்கு நின்றால் இவளுக்கு நல்லதில்லை என்ற புரிதலில்….அந்த அபித்திடம் நட்பாய் மண்டையை ஆட்டி விடை பெற்றாள்….

சென்று கைகழுவிவிட்டு திரும்பி வரும்போது சும்மா வந்திருக்க வேண்டும்….. ஆனால் மனம் என்று இருக்கிறதே மனம்….. அது அற்புதமாய் அதி புத்திசாலித்தனமாய் கேள்வி கேட்டு வைக்கிறது….

‘நிஜமாவே அவன் ஃப்ரெண்ட்லியா பழகுறானா? அவன் சிரிக்கிறதுல எதாவது ஃபேவர்க்காக சிரிக்கிறது போல நடிப்பு எதுவும் இல்லைனு உனக்கு தெரியுமா?”

‘இதெல்லாம் கண்டுபிடிக்கனும்…..’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

‘அதுக்காக இது தப்பில்ல….’ என்ற  காரணத்தோடு மெல்ல சமயலறைக்குள் நுழைந்தாள்…

‘மக்கள் வந்து போற வழியில நின்னு பார்த்தா வம்பா போய்டும்… கேட்டா ஹெல்ப் பண்ண வந்தேன்னு சொல்லிக்கலாம்….மேம் எல்லாம் இருக்காங்களே….’ தன் திட்டத்தை முழுமையாக்கிக் கொண்டவள்

ஓரு ஓரமாய் அடுக்கி இருந்த தட்டுகளை எடுத்து அடுத்த இடத்தில் அடுக்க ஆரம்பித்தாள்…… கை அதாக வேலையை செய்ய  முதலில் அவனிடம் போவதும் வருவதுமாக இருந்த  இவள் கண்களோ  ஒரு கட்டத்தில் முழு மொத்தமாக அவன் மீதே நிற்கின்றது.

“அண்ணா பேரு பிஜு…. எனக்கு பெரியப்பா சன்…. பெரியப்பா ஃபேமிலி எல்லோரும் சென்னையிலதான் இருக்காங்க….. இவன் மட்டும் இந்த பக்க பிசினஸை கவனிச்சுட்டு இங்க இருக்கான்…..”

அபித் குரல் இவளுக்கு வெகு அருகில் கேட்ட பின்தான்  தான் எத்தனை தூரம் மாட்டி இருக்கிறோம் என்பதே இவளுக்கு புரிகிறது….

கண்ணை இறுக மூடியபடி ஒரு கையை நெற்றியில் வைத்தபடி நின்றுவிட்டாள் இவள்….  மானம் போச்சு…!!!

தொடரும்….

மன்னவன் பேரைச் சொல்லி… மல்லிகை சூடிக் கொண்டேன் 3

Advertisements