மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18 (3)

இந்தப் புதிய புரிதலில் வெகுவாகவே நொந்து போனாள் ராதி.

தேவை இல்லாமல் இவளையும் வருத்தி அவனையும் அல்லவா நோக வைத்திருக்கிறாள்?

மனம் பாகாய் உருகி தேனாய் தன்னவன் பால் கசிய, இருந்த சூழலில் அதை எதையும் வெளிக் காட்ட முடியாதே, அவள் அருகிலிருந்த அவன் கை மீது சென்று மெல்ல தன் கையை வைத்துக் கொண்டாள்.

சட்டென இவள் புறம் திரும்பிப் பார்த்த அவன் பார்வையில் அழகாய் ஒரு மலர்ச்சி. பார்வை அதுவாக என்ன என்கிறது.

என்ன சொல்ல முடியும் இவள்? உன்ன ஹக் பண்ணனும் போல இருக்குதுன்னா?

பெரியவர்கள் நிமித்தம் அவன் மீதிருந்த பார்வையை எடுத்துக் கொண்டாலும், தன் விரல் நுனியால் அவன் கையில் ஐ லவ் யூ என இவள் கோலமிட,

தன் பெற்றோரோடு பேச்சை தொடர்ந்து கொண்டிருந்த அவன் முகத்தில் தெறிக்கும் காதல் குறும்பும், உற்சவ ரசனையும், அதை அடக்கும் அவன் முயற்சியும் ஓரக் கண்ணில் இவளுக்கு காணக் கிடைக்கிறது.

இப்போது ‘சாரி’ என இவள் எழுத,

ஒரு கணம் அவனை மீறி என்னவென்பது போல் திரும்பிப் பார்த்தான் அவன். அவளையும் மீறி கெஞ்சியது இவள் முகம். எத்தனையாய் படுத்தி இருக்கிறாள்? உணர்ந்தே இறைஞ்சினாள்.

அரை நொடி விழியால் மறுத்தவன்,

‘பின்ச் மீ தட் வில் டூ’ என இவள் கையில் எழுத, அதன் பொருள் புரியவில்லை எனினும், அவன் முகத்தில் இருந்த குறும்பு இது எதோ வில்லங்கம் என்பதை சரியாய் புரிய வைக்க,

அடுத்து இவள் அவனிடம் வம்பிழுக்காவிட்டால் எப்படி?

‘ஹக் மீ’

‘ஃபீல் லைக் கிஸ்ஸிங் யு’

என அவன் முகத்தை ரசித்து ரசித்து வம்பிழுத்தாள், எத்தனை நேரம் தாங்குவான் அவன்? மற்றவர்களிடம் பேசும் பேச்சில் கவனம் சிதறும்தானே அவனுக்கு,

“ஏய் போய் கிளம்பு, நேரமாகுது பாரு” என இவளைத் துரத்திவிட்டான்.

தங்களது அறைக்குள் வந்து கிளம்பத் துவங்கினாள் ராதி.

கடந்த மூன்று நாட்கள் இவள் அனுபவித்த வதைக்கு,

இன்று பெண்ணிவள் மனம் மேகங்களில் மிதந்து, மழைகளுக்கு உடையாகி, வான வீதியில் மல்லிகை மணமாய், மின்னல் கம்பிகளில் சுகம் அள்ளும் நோவுடன் ஊஞ்சல் ஆடும் ஒரு நிலையில் சஞ்சாரிக்கிறது.

குளித்துக் கொண்டிருந்தாள் இவள்.

“ஏய் கதவ திறடி” வேற யாரு? இவளவன்தான். குளியலறைக் கதவை தட்டினான். வம்பு செய்யும் அத்தனை திட்டமும் அவன் குரலில் இருக்கிறது.

“ஆஹான் திறந்துட்டுதான் வேற வேலை” இவள்தான்.

“நீயா திறந்தா பிழச்சிப் போன்னு விட்டுடுவேன்”

“இல்லனாலும் அப்படித்தான் பாஸ் மனச தேத்திக்கணும், நினச்சாலும் உங்களால திறக்க முடியாது”

பூட்டி இருந்த தாழை இவள் இன்னுமொருமுறை பரிசோதித்துக் கொண்டாள்.

துபையிலிருந்து வாங்கிய ஸ்டீல் தாழ். அசையாமல் அம்சமாய் நின்றது.

“சரி திறக்க முடியாதுன்னே வச்சுக்கோ, கதவத் திற”

“அடப் பாவமே, இதுக்கெல்லாம் சரின்னு சொல்லி திறப்பேன்னு நம்புறீங்களா என்ன?”

“ஓய் நீதான் என்னல்லாமோ வேணும்னு கேட்ட”

“ஆமா, அது கண்டிப்பா வேணும், ஆனா ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சு” சிரிக்க சிரிக்க அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவள் அப்போதுதான் எதேச்சையாய் கவனித்தாள்.

கதவின் தாழின் மையத்திலிருந்த ஃஸ்க்ரூ சர் என சுற்றிக் கொண்டிருந்தது. இவளிடம் கெஞ்சுவது போல் கெஞ்சிக் கொண்டு அவன் பூட்டை கழற்றிக் கொண்டிருக்கிறான்.

“நூஊஒஓஓஓ”

“சீட்டர்”

“ஃப்ராட்”

“கைய அசைக்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்”

சொல்ல முடிந்ததெல்லாம் சொல்லியபடி அறையின் ஒரு ஓரத்தில் உடை மாற்றுவதற்கென அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குப் போய்

மாமியார் வந்திருக்கும் மரியாதையில் உடுத்தவென வைத்திருந்த புடவையை எடுத்து தாறுமாறாய் மேலே சுற்றிக் கொண்டவள்,

அதிலும் திருப்தி வராமல் அறையின் அப்பகுதியை மற்ற பகுதியைவிட்டு பிரிக்கவென இருந்த டர்புலின் திரையையும் இழுத்து தன் மேல் சுற்றிக் கொண்ட போது உள்ளே வந்திருந்தான் அவன்.

சுவரில் முகம் வைத்து அவன் புறம் திரும்பாமல் நின்று கொண்டு

“சத்தம் போடுவேன்”

“அம்மாவ கூப்ட்டுடுவேன்” என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தாள் இவள்.

தொடரும்…

 

என்னடா இது அப்ரப்டா எப்பி நிக்குது அப்படின்னு யோசிச்சீங்கன்னா என்னைப் போலவே யோசிக்கீங்கன்னு அர்த்தம். வழக்கமா என்னமோ ஏதோன்னே எப்பிய முடிச்சு பழக்கமா, சரி ஒரு மாறுதலுக்கு ரொமான்ஸ்ல விடுவோம்னு ஒரு முயற்சி.

அடுத்த எப்பில முற்றும் போடுவோம் (ஹை அது கூட ரொமன்ஸ்லதான் இருக்கும்)

அடுத்து அடி தடின்னு…ஹ ஹா ஹீரோக்கு ஹீரோயின் குடுக்குறதுங்க அந்த அடிதடின்னு துளி தீயில் களம் இறங்குவோம்.

உங்கள் கமென்ட்ஸுக்கு ஆசையுடன் வெயிட்டிங்.

சென்ற எப்பியில் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி

Advertisements

16 comments

  1. After a long period ore night la 11 episodes um read pannitten. Ippo office la irunthuttu thookkam thookkama varuthu…Ore line la azhagaana hikoo kavithai maathiri azhagaana kathai akka…God bless u…Epo final episode akka?

Leave a Reply