மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 17 (4)

உன்னைப் பிடித்திருக்கிறது’ என்பதில் அவன் கண்ணில் தோன்றிய மொத்த வெடிப்பு மலர்ச்சியாய் அவன் முகம் முழுவதும் பரவி முடிய,

அதற்குள் ‘கொஞ்சம் பிடிக்கல’ என இவள் சொல்லிய வார்த்தைகளில் அவன் முகம் அதில் அப்படியே விழுந்து போக,

ஆனாலும் இறுதியில் ஒரு விதமாய் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஒரு சமனப் பட்ட புன்னகையை, இது ஒன்னும் தீர்க்க முடியாத விஷயமில்லை என்ற வகையில் அவன் முயன்று கொண்டு வந்ததையும் பார்த்துக் கொண்டு நின்றாள் இவள்.

“என்ன பிடிக்கலைனு சொல்லு ராதி, தப்புன்னா மாத்திக்கிறேன்” தன்மையாகவே கேட்டான்.

இருந்த எல்லா தவிப்பையும் விட, அவனிடம் உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி  நிறுத்தி இருக்கிறாளே அந்த இந்நேரத்து நிலை ராதியை அதிகமாய் தவிக்கச் செய்ய,

“இல்ல அது ஒன்னும் தப்புன்னு உங்களுக்குத் தோணாது, எனக்குதான் பிடிக்கல”  இவர்களுக்கு திருமணம் நடந்த விதத்தை இப்படியாய் குறிப்பிட்டாள்.

“சரி அது தப்பா இல்லாமலே இருக்கட்டும், உனக்கு பிடிக்கலைன்றதுக்காகவே நான் மாத்திக்க ட்ரைப் பண்றேன்” அவன் இன்னுமே இறங்கி வர, என்ன சொல்ல முடியும் இவள்?

“அது முடிஞ்சுட்டு, இனி மாத்தல்லாம் முடியாது” என்றவள்,

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க பிஜு, சூன் ஐ வில் பி ஆல்ரைட், ப்ளீஸ் நீங்க மனசப் போட்டு இந்த டைம்ல குழப்பிக்காதீங்க” என்றும் சொல்லி வைத்தாள்.

வேறு என்ன செய்யவென்று அவளுக்குத் தெரியவில்லையே!

இவள் முகத்தையே வாசித்தபடி நின்றிருந்த பிஜு, இப்போதைக்கு அவளை இந்த விஷயத்தில் குடையாமல் விடுவதே நலம் என்று எண்ணியவன் வெகு இயல்பாய் கடந்து போய்விட்டான்.

என்னதான் இயல்பு போல் காட்டிக் கொண்டாலும், யாருக்குத்தான் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என கேட்கப் பிடிக்கும்? அதுவும் அவனது மனைவியிடமிருந்து.

வலித்தது அவனுக்கும்.

சற்று நேரம் தனது அறை படுக்கையில் அமர்ந்திருந்தவன், அடுத்து அவளிடமிருந்து எந்த சத்தமுமே இல்லை எனவும் என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என அவளைத் தேடி வெளிவர,

அவளோ ஒரு கையில் சுடு தண்ணிப் பாத்திரமும் மறு கையில் சிறிய டவலுமாக இவனிடம் வந்து கொண்டிருந்தாள்.

அவன் தோளில் விழுந்திருந்த கண்ணாடி முதுகின் வழியாய் சரிந்து விழுந்ததில், அங்கும் கிழித்திருந்தது. அது ஆழக் காயம் இல்லை என்பதால், அதில் மருந்து மட்டும் இட்டு திறந்தே இருக்கட்டும் என விட்டிருந்தனர் மருத்துவர்.

ஆக இவனால் குளித்திருக்க முடியாதே!

அவள் எதற்கு வருகிறாள் எனப் புரியவும், ஒரு புறம் இதமாகவும், மறுபுறம் மறுக்கவும் தோன்றிய உணர்வை தூர எறிந்துவிட்டு,

எப்படியும் வெகு சீக்கிரம் சமாதானம் ஆகிவிடுவாள் என்ற முன் அனுபவம் தந்த பாடத்தின் நிமித்தம், அவளிடம் எதுவும் சொல்லாமல் சட்டையை கழற்றிவிட்டு மௌனமாய் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான்.

ஈர டவலால் இவன் உடலைத் துடைத்து காயத்திற்கு மருந்திட்டு, “சேர்ட் போடாதீங்கப்ப, வூன்ட்ல எதுவும் பட வேண்டாம்” என சொல்லி முடிக்கும் வரை இவன் அவள் முகத்தையே பார்த்திருக்க,

அவளோ இவன் கண்களை சந்திக்காமலே எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள்.

அடுத்து இரவு உணவு செய்து கொடுக்க வேலையாள் வந்து போக,

சாப்பாடு முடியவும் இவன் தங்கள் அறைக்கு படுக்க வந்தவன் அவள் இங்கு வருவாளோ இல்லையோ என யோசிக்கத் துவங்கிய நிமிடம்,

இவனுக்குத் தேவையான எல்லாம் இருக்கிறதா என சரி பார்த்துவிட்டு, இவனுக்கு அடுத்து முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள் அவள்.

இரண்டு நாளாய் தூங்கி இருக்க மாட்டாள், அதனால் தூங்கிவிடுவாள் என இவன் நினைத்துக் கொண்டிருக்க,

அவளோ தூங்காமல் கிடக்கிறாள் என இவனுக்குப் புரிந்தது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவன், அதான் டைம் குடுங்கன்னு சொல்லி இவனை தள்ளி வச்சுருக்காளே! ஒரு கட்டத்தில் மனம் கேட்காமல்,

இவனால் அசைக்க முடிந்த கையை நீட்டி பின்னிருந்து அவள் நெற்றியில் வைத்தான்.

“குழப்பிக்காம தூங்கு ராதிமா”

என்ன செய்யலாம் என தவித்தபடி படுத்திருந்த ராதியின் மனதிலோ,

“குறை இல்லாத மனுஷங்கன்னு யாருமே இல்லை ஆருமா, கடவுளே தந்த லைஃப் பாட்னர் கூட அவங்கட்டயும் சின்ன சின்னதா குறை இருக்கத்தான் செய்யும், அதுல அவங்கள திருத்த நாம கல்யாணம் செய்யல, அவங்களோட பலவீனம் அவங்களையோ நம்மையோ பாதிக்காத வண்ணம் தாங்கிக்கத்தான் மேரேஜ் செய்துருக்கோம்.

அதுதான் முழுமையான அன்புன்னும் சொல்லலாம். இது ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் ரெண்டு பேருக்குமே பொருந்தும்.

சில விஷயத்தில் அது இயல்பா வரும், சில விஷயத்தில் வராது, அப்ப ப்ரே பண்ணு, எதாவது வகையில் அது சரி ஆகிடும்”

என இவளிடம் சொல்லி இருந்த அம்மாவின் வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தன அந்நேரம்.

சரியாய் அப்போது வந்து படிகிறது அவளவனின் பாசப் ஸ்பரிசம்.

அது தாகத்தில் வெடித்திருந்த பாலையில் விழுந்த மந்திரப் பால் பொழிவாக மட்டுமே அவளுக்குள் இறங்க,

இவள் அவனைக் காயப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட இவளை நேசிக்க முடிகிறதே அவனுக்கு, இதுதான் அம்மா சொன்ன முழுமையான அன்பு போல என்றெல்லாம் யோசிக்க முடிந்திருந்தால் நன்றாக இருக்கும்,

ஆனால் அவளே உணராமல் அனிச்சையாய் அச்செய்தி அவள் உயிருக்குள் நுழைந்து கொள்ள,

அவனது முழு அன்பும் தனக்கு வேண்டும் என ஏங்கிப் போய் கிடந்த அவள் மனம், இவள் எதையும் நிதானிக்கும் முன்னும், இவளை இழுத்துத் திருப்பி அவன் மார்பிற்குள் கொண்டு சேர்த்திருந்தது.

பிஜுவுக்குமே இது எப்படி இருக்குமாம்? உன்னை எனக்கு பிடிக்கல என அவள் சொல்லிவிட்டுப் போனதென்ன? இவ்வளவு நேரத்துக்குள் கூட்டுக்குள் இருக்கும் குருவி மாதிரி இவனிடம் வந்து சுருண்டிருக்கும் கோலம்தான் என்ன?

இதில் “ஐ லவ் யூ பிஜு, எனக்கு நீங்க வேணும்” என்ற அழுகை வேறு வருகிறது அவளிடமிருந்து.

“உனக்கு இல்லாமலா?” என வருகிறது இவனது பதில்.

அவளைத் தன்னோடு அணைத்து, வாகாய் அருகிலிருந்த அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம்.

ஈரக் கண்களை மட்டுமாய் மலர்த்தி இவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

அவன் முகத்திலிருந்த எல்லா உணர்வும் இவளுக்குள் ஏதோ ஒரு எடையற்ற தன்மையை உண்டு செய்ய அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் எல்லாம் தூங்கிப் போயிருந்தாள் அவள்.

மறுநாள் காலையில் ஆராதனா கண்விழிக்கும் போதே காதில் விழுகிறது  அடுத்த வரவேற்பறையில் இருந்து பிஜுவும் அவனது அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம்.

இவனுக்கு காயம் பட்ட செய்தி நேற்று மாலைதான் பிஜு வீட்டுக்கு சொல்லப் பட்டது. அடுத்து கிளம்பி வந்திருக்கிறார்கள் போலும்.

நடந்து கொண்டிருந்த பேச்சு இவளைப் பற்றித்தான்.

தொடரும்…

சாரி மக்களே காதலாம் பைங்கிளி டைப் செட்டிங் வச்சு செய்ததிலும், அடுத்து எங்க வீட்டு நெட் என்னை செய்து வச்சதிலும் எப்பி இவ்ளவு லேட்.

இன்னும் இரண்டு எப்பியில் கதை முற்று பெறும்.  அடுத்த எப்பி திங்கள் அன்று பதிவிட எண்ணி இருக்கிறேன். 

Please கமென்டவும். நன்றி

Advertisements

8 comments

 1. Achagacho!!!! Bajji payan pavam…. Rendu perum pesi theerthukuta elame mudinju poidum.
  Valikumenu nama velagi pora sila situations a namma bold a face panale mukalvasi prachanai varadhunu nenaikiren.
  Seekrama samadhanam pani vainga ma’am.. Bajji and Raadhi deserve their sweet nothings.
  Open and two way communication evlo important nu indha scenes lam pakurapo puriyudhu..
  Kadhai matum ila author’s note kuda kalakkal dhan. Vachu seidhadhu, senju vachadhu nu ennnama word pun panreenga!!!! 😀

 2. Nice epi
  சாண் ஏற முழம் சறுக்குதேப்பா நம்ம பஜ்ஜிக்கு.
  Eagerly waiting for the next epi.

 3. Pavam bajji payan analum ipidi mulusa valaratha papa va ellam kalyanam panni na Vera vazhi?rathi um manasula irukiratha avan kitte keta than enna?

 4. Superb update mam. Aradhana is swinging between her love ❤ and negative thoughts whether Biju is not loving her truly. When she understands his love ❤ her’s will flow on him like a shower. Waiting for your next update eagerly mam.

Leave a Reply