மன்னவன் பேரைச் சொல்லி, மல்லிகை சூடிக் கொண்டேன் 17

பிஜு சொன்ன இந்த சுசி திருமண என்பது நடைமுறைக்கு எத்தனை அசாத்தியமானது என்ற புரிதலில் ராதி அப்படி பார்த்து வைக்க,

“பாரு எக்ஸ்போஷர் உள்ள நீயே அவங்களுக்கு ரீ மேரேஜ்னதும் இப்படி லுக் விட்டா, மத்தவங்க எப்படி ரியாக்ட் செய்வாங்க?, அதான் வெளியாள் யாரையும் கூப்டாம, ரெண்டு குடும்பம் மட்டுமா நம்ம வீட்ல வச்சி தட்டு மாறுனாங்க” என்றபடி மருத்துவமனை நோக்கி நடக்கத் துவங்கினான் பிஜு.

“அது இல்ல ரெண்டு குழந்தைங்க அதுவும் ஸ்கூல் போற பிள்ளைங்க, அதோட கிராமம் வேற, அதான் கொஞ்சம் குழப்பமாகிட்டு” அவனோடு இணைந்து நடந்தாள் இவள்.

“சுசி அக்கா என்னைவிட ஒரு வயசுதான் மூத்தவங்க, நமக்கே நீ படிச்சு முடிச்சதும்தான் மேரேஜ்னா அடுத்த இயர்தான கல்யாணம் நடந்து இருக்கும். அந்த வயசுல இருக்க அக்கா மட்டும் கடைசி வரை தனியா இருக்கணும்னா எப்படி?

எனக்கு ப்ரபாகர்னு ஒருத்தர் நல்ல பழக்கம், நல்ல டைப், சின்ன சின்ன வீடு கான்ட்ராக்ட் எடுத்து செய்வார், அவருக்கு 8 வயசில் ஒரு பையன் உண்டு, வைஃப் தவறிட்டாங்க, அவரோட அம்மாவும் ரொம்ப உடம்பு முடியாம கூட இருக்காங்க,

மிடில் க்ளாஸ், எல்லாத்தையும் ஆள் வச்சு செய்துக்கிற மாதிரி ஃபினாஸ் கிடையாது, வீடையும் வேலையையும் அவரே சமாளிக்கணும்னா ரொம்ப கஷ்டபடுறார்,

அதான் சுசி அக்காவுக்கும் அவருக்கும் மேரேஜ் செய்தா ரெண்டு பேர் லைஃபும் நல்லா இருக்கும்னு பட்டுது, அதான் ரெண்டு சைடும் இனிஷியேட் செய்தேன்” அவன் சொல்ல,

ராதிக்கு இந்த சுசி அக்கா திருணத்தில் பிஜு நடந்து கொள்ளும் முறை பெருமிதமாக இருக்கிறதென்றால்,

‘இதே மாதிரி லாஜிக் எல்லாம் பார்த்துதான் இவன் நம்மள கல்யாணம் செய்துகிட்டான்’ என்ற ஒரு சிந்தனையும் உள்ளே ஓடுகிறது.

அது நல்ல உணர்வைத் தரவே இல்லை.

இதற்குள் மருத்துவமனை ரிஷப்ஷனை இவர்கள் அடைந்திருக்க, பிஜுவுக்கான மருத்துவரை சந்திக்க பதிந்துவிட்டு இருவரும் காத்திருக்க துவங்க, மீதியைத் தொடர்ந்தான் பிஜு.

“இதுல சிக்கல் என்னனா சகுனம் பார்க்க கூடாதுன்னு நமக்கு நல்லா தெரியும், ஆனா ப்ரபாகர் அம்மா இருக்காங்களே அவங்கட்ட எவ்ளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க,

கல்யாணத்துக்கு எப்படியோ சம்மதிச்சுட்டாங்க, ஆனா எல்லாத்துக்கும் சகுனம், இதுல கண்ணாடி விழுந்து உடையுறத அவங்க ரொம்ப கெட்ட சகுனம்னு யோசிப்பாங்க,

இதோட நான் வேற உன்ட்ட வந்து எனக்கு அடிபட்ருக்குன்னு  சொல்ல, நீ மறுநாள் அழுது வடிஞ்சுட்டு இருக்க, கல்யாணம் நிச்சயம் செய்ய வந்த ப்ரபாகர் அம்மாவுக்கு இதெல்லாம் தெரியவர, எல்லாமே கெட்ட சகுனமா தோணும்,

மேரேஜ் வேண்டாம்னு சொன்னா கூட ஆச்சர்ய படுறதுக்கு இல்ல,

இதே இது அன்னைக்கு நான் உன்ட்ட விஷயத்தை சொல்லாம கொஞ்சம் அவாய்ட் செய்துட்டேன்னா,

உன் குணம்தான் தெரியுமே, அவாய்ட் செய்ததுக்காக என் மேல கோபம்னாலும், அடுத்தவங்கட்டல்லாம் நல்லா பேசுவ, என்னை மட்டும்தான் அதுவும் சீக்ரெட்டா முறைப்பன்னு,

அதனாலயும் உன்ட்ட இந்த காயம் பத்தி அப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு நினச்சேன்” அவன் முடிக்க,

இதுக்கு திட்டம் போட்ட மாதிரிதான், அன்னைக்கு அந்த செல்வி பாட்டி வீட்டுக்கு இவளை கூப்ட்டுட்டு போகம இருக்க கூட திட்டம் போட்ருக்கான் என ஓடுகிறது ராதியின் மனதில் ஒரு  கம்பேரிசன்.

கசக்கிறதுதான் இவளுக்கு. ஆனாலும் இதை குற்றம் என்றும் எண்ண முடியவில்லை.

யார் மனமும் காயப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பொய்யளவு கூட தவறும் செய்துவிடாமல் செய்து கொண்ட ஏற்பாடுகள்தானே அவை.

ஆனாலும் டாக்டரை கல்யாணம் செய்யக் கூடாது என இவன் நினைத்தது இவளுக்கு தெரியக் கூடாதென யோசித்து காய் நகர்த்தி இருக்கிறான் என்பது வலிக்கிறதே.

இதெல்லாம் இவள் மனதில் ஓடிக் கொண்டிருக்க,

இவள் முக வாட்டத்தைக் கண்டு போலும்,

“சாரி… அந்த சந்த்ரன் டெத்க்கு நீ ரியாக்ட் செய்தது, உங்க அம்மாவுக்கு ஸ்டிச் போட்டதுக்கு மயங்கி விழுந்துட்டேன் சொன்னது இதெல்லாம் சேர்த்து எனக்கு இப்படித்தான் தோணிட்டு,

ஆனா விஷயத்தை சொல்லலைனா நீ எவ்ளவு ஹர்ட் ஆகுறன்னு பார்த்துட்டேன்ல, இனி இதுன்னு இல்ல எதையுமே உன்ட்ட மறைக்க மாட்டேன் ஓகேவா” என ஆறுதல் சொன்னான் அவன்.

அன்று பிஜுவுக்கு அடிபட்ட மறுநாள் காலை 8 மணியளவில் இவனது வீட்டிற்கு வருவதாய் சொல்லி இருந்தனர் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டினர்.

இதில் ராதியிடம் காயம் பற்றி சொல்லாமல், முடிந்த வரை இலகுவாக பேசி, இரவு தனியாக சென்றுவிட வேண்டும் என்பதும் அவன் எண்ணம்.

ஆனால் முதல் புள்ளியே சொதப்பல். அவள் சற்றும் இவன் எதிர்பாராத திட்டத்தில் இருந்தாள். பார்க்கவும் இவனுக்கு எத்தனை ஆசையும் ஏமாற்றமுமாக இருக்கிறது எனப் புரியும்போதே அது இவன் விலகல் அவளையும் அப்படியே மட்டுமல்ல அதைவிட மோசமாகவே தாக்கும் எனவும் புரிய,

இருந்த வலியில் நினைத்து வந்த அளவு கூட இயல்பு போல் காட்டிக் கொள்ள முடியாமல் இருந்தவனுக்கு, இதில் இன்னுமாய் இயல்பற்று பேச்சை முடிக்கத்தான் வருகிறது, அதில் அவள் வந்து அவன் காயம்பட்ட கரத்தையே பற்ற,

துடிக்க வைத்த வலியை மறைத்து வைக்க, தடித்த வார்த்தைகள்தான் வந்து விழுந்தன  இவனிடமிருந்து.

காலையில் பேசிக் கொள்வதே சரி என்றது இவனது காயமும் மனமும்.

ஆனால் காலையில் இப்படி இருட்டு விலகும் நேரமே ராதி கிளம்பிப் போய்விடுவாள் என இவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“என்னணா ஆரா ஆட்டோல வந்துருக்கா, உனக்கு கஷ்டமா இருந்தா எனக்கு சொல்லி இருக்கலாம்ல, நான் வந்து பிக்கப் செய்துருப்பனே, இத்தன மணிக்கு ஆட்டோ அவ்ளவு சேஃபா என்ன?” என அபித் ஃபோன் செய்து விசாரித்த போதுதான் தூங்கிக் கொண்டிருந்த இவன் விழிக்கவே செய்தான்.

அதில் ராதியின் கோபம் இவனுக்கு முழுதாக புரிய,

சற்று நேரத்தில் விழா வீட்டினர் வந்துவிடுவர் என்ற நிலையில் எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்,

அடுத்து இவனுக்கு அடிபட்டது வரை எல்லாவற்றையுமே ராதியிடம் சொல்லி சமாதானப் படுத்திவிடலாம் என இவன் நினைத்துக் கொள்ளும் நிலை.

அடுத்த பக்கம்

Advertisements