மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15 pg (3)

ராதனா ரிப்போர்ட் செய்து கொண்டிருக்கும் சீனியர் டாக்டர் அவர். அவருக்கு மாணவியாய் ஆராதனாவைத் தெரியுமே தவிர, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது தெரியாது.

தூரத்தில் இருந்து அவர் பார்க்கும் போது, பிஜு அவளை கை நீட்டி மறிப்பதையும், இவள் விடைப்பாய் நின்று பேசுவதையும் கண்டவர், யாரோ அவளிடம் ப்ரச்சனை செய்கிறார்கள் போலும் என எண்ணிவிட்டார்.

ஆக இவளுக்கு உதவிக்கு வந்திருக்கிறார்.

“நான் ஆராதனாவோட ஹஸ்பண்ட், அவங்க வீட்டுக்கு வந்து டூ டேஸ் ஆகுது, அதான் பார்க்கலாம்னு வந்தேன்” கோபம் என எதுவுமின்றி சிறு புன்னகையோடே பதில் கொடுத்தான் பிஜு.

எங்களுக்குள் சண்டை என காண்பித்துக் கொள்வது அவளுக்கு அங்கு மரியாதையாய் இராதே!. அவள் ரொம்பவும் ஹார்ட் வர்க் செய்கிறாள் என அந்த சீனியர் டாக்டர் மனதில் பட்டால் போதும் என்பது பிஜுவின் நோக்கம்.

அது சரியாய் வேலை செய்ய, “என்னமா இது? என்னதான் இங்க வேலை இருந்துகிட்டே இருக்கும்னாலும் அதுக்காக இப்படியா?” என ஒரே நொடியில் கட்சி மாறிவிட்டார் அந்த சீனியர் டாக்டர்.

“இப்ப முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க” என்றவர்,

“நீங்க என்ன ஷிப்ட்ல இருக்கீங்க?” என அதையும் கேட்டுக் கொண்டார்.

இது டே ஷிப்ட் முடிந்து இரவு ஷிப்ட் துவங்கும் நேரம். என்னதான் இரண்டு நாள் இங்கு இருந்திருந்தாலும், ஆராதனாவுக்கு இன்று ஒதுக்கப்பட்ட ஒரிஜினல் ஷிப்ட் இரவு ஷிப்ட்டாக இருந்தால் இப்படி கிளம்பிப் போ என அப்படி எளிதாய் அனுப்பிவிட முடியாது.

“டே ஷிப்ட்தான் டாக்டர்” கொஞ்சம் முனங்கலாய் வருகிறது ஆராதனாவின் குரல். பிஜு ஏன் காலையிலேயே வராமல் இந்த நேரத்தில் வந்து நிற்கிறான் என்பது இவளுக்குப் புரிகிறதே.

பிஜு காலையில் வந்திருந்தானானால் இதே ஷிப்ட் விஷயத்தை சொல்லி எளிதாய் இவள் துரத்தியிருப்பாள் அவனை.

“அப்றம் இன்னும் இங்க என்ன செய்துகிட்டு இருக்கீங்க? நம்மளையே நமக்கு பார்த்துக்க தெரியலைனா பேஷண்ட எப்படி பார்ப்போம்?” சீனியர் டாக்டர் இப்படி முடிக்க,

இப்போது வேறு வழியின்றி அவனோடு கிளம்ப வேண்டியதாகிட்டு ராதிக்கு.

‘அக்கறை இருந்தா நேத்து நைட் நான் போகலைனு தெரியவும் இன்னைக்கு காலைல அவன் வந்திருக்கணும்ல’ என அவளுக்கு முன்பிருந்த ஏக்கம்,

‘திட்டம் போட்டு கம்பெல் செய்து கூட்டிட்டுப் போக வந்திருக்கான்’ என இப்போது மாறியது.

அவளோட சீனியர் டாக்டரிடம் அல்லவா போட்டுக் கொடுக்கிறான்?!

கட்டிடத்தை விட்டு வெளியே வரும்வரை கடுமையாய் கட்டுப்படுத்தி மௌனமாக வந்த ராதி, பார்க்கிங்கை பார்த்து நடக்கத் துவங்கிய போது

“சீனியர் டாக்டர்ட்டல்லாம் வந்து சொல்லி கேவலப்படுத்துறீங்க” என பல்லைக் கடித்தபடி முனங்கினாள்.

“என்ன செய்றது கண்ணா? எனக்கு நம்ம ரொமான்ஸ் ஸ்டோரி நாலு சுவத்துக்குள்ள இருக்றதுதான் பிடிச்சுருக்குது, ஆனா அது என் ப்ரின்சஸுக்கு தெரியலையே” என பதில் வந்தது அவனிடமிருந்து.

அவ்வளவுதான் இருந்த எரிமலை நிலைக்கு மேலாக இன்னும் இரண்டு மடங்காய் கொதித்தாள் ராதி. ஆக தப்பு எல்லாமே இவளிதுதான் என்கிறான்.

இதற்குள் இவளது ஸ்கூட்டியை அடைந்திருந்த அவன், ஆம் ஏனோ ஸ்கூட்டியில் வந்திருந்தான் அவன்,

ஸ்கூட்டியின் டிக்கியை திறந்து “உள்ள இருந்தா சூடுல கருகிடும்” என்றபடி ஒரு பந்து மல்லிகைப் பூவை எடுத்து நீட்டினான் இவளிடம்.

மருத்துவமனைக்கு பூ வைக்க அனுமதி இல்லை என்பதால் ராதி பொதுவாக பூ வைப்பது கிடையாது.

ஆனால் அவனோடான அன்யோன்ய தருணங்களில் பூ வைப்பது இவளுக்குப் பிடிக்கிறது.

திருமணம் மற்றும் இவர்கள் வீட்டு கிரஹப் பிரவேசம் தவிர, அன்று ஆவுடையனூர் செல்லும்போதும், அடுத்து அந்த கேடுகெட்ட முதலிரவு திட்டத்தின் போதும் மட்டுமே இதுவரை பூ வைத்திருக்கிறாள்.

தெரிந்தும் இவன் பூ வாங்கி வந்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்?

இன்று முதலிரவு என்கிறானா?

அந்த ரவி போல யாராவது ஓதினால் இவளைத் தூக்கி தூரப் போட்டுவிடுவான், அடுத்து இவனுக்கு தோன்றும் போது வந்து கூப்பிடுவான், இவள் வாலாட்டிக் கொண்டு போக வேண்டுமோ? இவள் மனம் இப்படி ஓட,

எரியும் சிலையாய் அசையாமல் நின்ற இவளை இரு நொடி காத்திருப்பாய் பார்த்திருந்தவன், இவள் பூவை வாங்கிக் கொள்ளவில்லை என்றதும், ஒன்றுமே நடவாதது போல் ஸ்கூட்டியின் முன்பக்க பாக்ஸில் பூவை வைத்துவிட்டு,

இவள் கையைப் பற்றி, இவள் அதை உருவிக் கொள்ள முயன்ற நேரம், அதில் வண்டிச் சாவியை வைத்தான்.

அதாவது இவளை ஓட்டச் சொல்கிறான்.

ஏற்கனவே ஓரிருவர் இவர்களை இதற்குள் கவனிக்கத் துவங்கிவிட, அதற்கு மேலும் இங்கு நின்று ப்ரச்சனையை இழுத்துக் கொண்டிருக்க விரும்பாத ராதி, வேறு வழியின்றி வண்டியில் ஏறி உட்கார,

பிஜு இவளுக்கு பின்னால் ஏறி அமர்ந்தான்.

அமர்ந்தவன் சும்மா இருந்திருக்க வேண்டும்,

“பிஜுப் பையா உன் காட்ல இன்னைக்கு செம்ம மழைடா” என்றபடி தன்னவளை ஒரு கையால் இடையோடு வளைத்துப் பிடித்துக் கொண்டவன், அவள் மீது பாராம் கூட்டாமல் சாய்ந்து கொண்டு, அவள் தோளில் போய் தன் நாடியை வைத்துக் கொண்டான்.

உன் அருகாமையை நான் அசட்டை செய்யவில்லை வெகுவாக விரும்புகிறேன் என காட்டிவிட நினைத்திருந்த அவன் மனதின் இயல்பான செயல் இது.

ஆனால் ராதியோ இதில் கோபத்தின் உச்சத்தை தொட்டிருந்தாள்.

“விடுங்க என்ன” என உறுமியவள்,

“அன்னைக்கு என்னைப் பார்க்க அருவருப்பா இருந்துச்சு இன்னைக்கு மட்டும் என்ன?” என கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவளை மீறி அழுகைக்குப் போனவள்,

அவள் இஷ்டத்தை மீறி அவளை கட்டாயமாய் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு செல்கிறான், அதோடு அவள் விருப்பம் இல்லாமல் எல்லை தாண்டுகிறான். இது எதையும் இவளால் தடுக்க இயலவில்லை என்ற இயலாமையில்,

அதை எப்படி வெளிப்படுத்த எனத் தெரியா ஆதங்கத்தில் அவள் கைக்கு கிடைத்த அவன் வாங்கி வந்திருந்த பூவை தூக்கி தூர வீசி எறிந்தாள்.

சற்று தூரத்தில் குப்பையும் முள்ளுமாய் கிடந்த ஒரு கும்மத்தில் போய் விழுந்தது அது.

“ராதீ!!!”

கடித்து துப்பியபடி வந்தது பிஜுவின் இந்த ராதீ. அறை வாங்கியது போல் இருக்காதாமா அவனுக்கு? அதுவும் பொது இடத்தில் வைத்து. அதிலும் அவளுடைய வேலை இடத்தில் வைத்து.

“என்ன நினச்சுகிட்டு இருக்க நீ? எத்தனை கோபத்துலயும் ஒரு நிதானம் இருக்கணும், சண்டை போட்டுட்டு பையன் நைட் வீட்டுக்கு வரலைனாலே பல்லை கழட்டிடுவாங்க எங்க வீட்ல, இதுல வீட்டுப் பொண்ணு நீ ரெண்டு நாளா வரலை, அதுல…” முடிந்தவரை குரலை இறக்கித்தான் என்றாலும்,

அத்தனை சீறலாய் அவன் சொல்லிக் கொண்டு போக,

தன் செயலில் தானே ஒரு மாதிரி விக்கித்துப் போய் குற்ற உணர்வோடு நின்றிருந்த ராதி,

அவனது இந்த வார்த்தைகளை ஆண் வேண்டுமானாலும் இரவில் வெளியே தங்கிக் கொள்ளலாம்  பெண் என்பவள் இரவு வெளியே தங்குவது மகா மோசம் என அவன் சொல்வதாகவே எடுக்க,

அடிப்படையே காயமே அவளுக்கு அதில்தானே, அந்தக் காயம் இப்போது அமில வார்ப்புக்கு உட்பட, தன் மீதும் அவன் மீதும் உள்ள கோபம் மற்றும் ஆற்றாமையில் வெடித்துவிட்டாள்.

“ஆமா பையன் வெளிய தங்கிட்டு வந்தாலும் அவன் பத்தர மாத்து தங்கம், ஆனா நான்லாம் பத்து மணிக்கு மேல வெளிய போனா பத்தினி இல்ல” அவள் காதில் வாங்கி இருந்த வார்த்தை, அவளை குடைந்து எடுத்துக் கொண்டிருந்த விஷயம் இப்படி வெளியில் வந்து விழுந்தது.

அவ்வளவுதான் அவ்வளவேதான், அவள் என்ன சொல்லி இருக்கிறாள் என உணரும் முன்னும், தடும் என இடி போல் வந்து விழுகிறது ஒன்று.

இவள் பின்னாலிருந்த பிஜு முஷ்டி இறுக ஒரு அடி அவளது ஸ்கூட்டியின் வலப்பக்க ஹேண்டிலில்.

“சீ வாய மூடு” அடிபட்ட நாகமாய் சீறிக் கொண்டிருந்தான் அவன்.

ராதிக்கு இப்போது அவன் இவளையே அறைந்துவிட்ட உணர்வு. அவள் கண்ணில் கிடைத்த  துடிப்பை அடக்கிக் கொள்ளும் அவனது முஷ்டியும், ரியர் வியூவில் தெரிந்த எரியும் அவன் முகமும் அதை ஆமோதிப்பதாகவே அவளுக்குப் பட,

இவன் என்னை அடிக்க வேற செய்வானாமா? என்ற நினைவோடு இடிந்து போய் நின்றிருந்தாள் அவள்.

அவனோ வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டவன்,

“இங்க பார், நீ ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் உன்னைப் பார்த்துக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு, அது என் வீடு மட்டுமில்ல, உன் வீடும்தான், நான் அங்க இருக்கேன்னுதான வர மாட்டேங்குற, இனி எப்ப வர்றதா இருந்தாலும் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு வா, நீ வந்து போற வரைக்கும் நான் அங்க வர மாட்டேன் போதுமா?! ஒழுங்கா வந்து சாப்ட்டு தூங்கி எந்திரிச்சுப் போ, இப்ப ஒழுங்கு மரியாதையா வீடு போய் சேர்” என்றுவிட்டு

இறுகிய முஷ்டியை இன்னுமே திறக்காமல், முழு கோபம், மொத்த வலி, கடும் எரிச்சல் என்பவைகளோடு விடுவிடென போய்விட்டான்.

முழு நிமிடம் போல அங்கேயே திகைத்துப் போய் நின்றிருந்த ராதி, அடுத்து வண்டியை கிளப்பிக் கொண்டு வளாக கேட்டை தாண்டி வெளியே வரும் போது, பிஜு ஒரு ஆட்டோவில் ஏறிப் போய்க் கொண்டிருந்தான்.

தொடரும்..

Advertisements

8 comments

 1. Inital lines about the first spar between newly wedded couples- spot on!!! But sandaila dhane inum nerukam varum. Lets see..
  Manasula ulladha kottiyachu… Ipavadhu Raadhi self analysis pani thelivu aavala?
  Biju payan pavam dhan. Asaiya vandhavan veri aagi kelambitan.
  Rendu perum issue va epdi resolve pana porangalo?!!!

 2. 😞😞😞
  Muthal. Sandai pathi sonnathellaam abaaram.😍.avanai nambi aval ellayaith thannidaal…..semmmma line…😍😍😍
  Unga mozhi vilakkam laam nallaa iruku.soka epi😕😕😕

 3. Acho ipo inthe avasara kuduka ponnu enna panni vachiruka?inthe bajji payanavathu kooda konjam porumaya irunthirukalam.avakitte ena than maraikiran?

 4. Eppa Bugji en appadi behave pannan??? Eppavum ippadi kova patta eppadi??? Theriyuthu illa ava kovamaga irukkiral endru…. vittula poi pesa venditathu thane …. pavam Rathi 😢😢

 5. Raathi um paavam than, bujji um paavam than…
  Ithu variakum raathi point of view la thana story poguthu….
  Bujji point of view la story eppadi pogum😕💭💭
  As of now story semmaya pothu😍😍
  Eagerly waiting for nxt updates

Leave a Reply