மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15 pg (2)

தில் இன்று மாலை ஆறரை மணி அளவில் இவள் ஐ சி யூ கதவை சாத்திக் கொண்டு வெளியே வர, குறுக்காய் வந்து நின்றான் பிஜு. அதுவும் முகத்தில் சின்னதாய் ஒரு சிரிப்போடு.

கையிலிருந்த ரிப்போட்ர்ட்டை வாசித்தபடியே வெளியே வந்தவள் தன் வழியில் நிற்கும் உருவத்தை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள், அது அவன் எனத் தெரியவும்,

முழு மொத்தமாய் முகம் இறுக, சற்றாய் விலகி நடந்து அவனை கடக்க முயன்றாள்.

இங்க ஒருத்தி சாகாம செத்துட்டு இருக்கா, இவனுக்கு சிரிப்பு வருதாமா?

ஆனாலும் அவனைப் பார்க்கவும் மனதுக்குள் ஒன்று இளகுகிறதே அதைக் கல் எடுத்து அடித்தால் என்ன?

அவனோ இப்போது இவளுக்கு முன்பாக கை நீட்டி பாதையை மறைத்தான்.

“பச் பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு ப்ரச்சனை செய்தீங்கன்னா போலீச கூப்டுவேன்” இருந்த எரிச்சலில் இப்படித்தான் சிடுசிடுக்க வருகிறது இவளுக்கு.

“சரி அதுக்கென்ன? என் பொண்டாட்டி ரெண்டு நாளா வீட்டுக்கு வரலைனு நானும் சொல்றேன்” இப்போதும் சின்ன சிரிப்போடே சொன்னவன்,

“அதுவும் எதுக்கு, பர்ஸ்ட் நைட் நடக்கலைன்ற கோபத்துல” என இவள் முகம் அருகில் குனிந்து வெகு சிறுகுரலில் ஒரு ஹஸ்கி வாய்சில் சீண்டலாய் சொல்ல,

குபுக் என கண்ணீர் வடிந்தேவிட்டது இவளுக்கு.

‘கடைசியில் இவளை எவ்ளவு சீப்பா நினச்சுருக்கான் அவன்?’

இவள் கண்ணீரைக் காணவும் அவன் முகத்தில் இருந்து சிரிப்பு மறைந்து போக,

“ஹேய்” என்றவன்  “இப்ப எதுக்கு அழுற?” எனும் போது அதட்டிக் கொண்டிருந்தான்.

“அதென்ன அப்படி கோபம் வருது உனக்கு? ரெண்டு நாளா வீட்டுக்கு வராம இருந்துக்கிற அளவுக்கு?” என கேட்டபோது கோபத்தில் நெற்றி இறுகிக் கொண்டிருந்தது அவனுக்கு.

பிஜுவுக்கு இவள் எதற்கு கோபமாக இருக்கிறாள் எனத் தெரியாதே, அவன் அன்று இரவு அவளை விலக்கியதற்காக கோபத்தில் இருக்கிறாள் எனதானே புரிந்து வைத்திருந்தான்,

அதில் இவன் புறம் தவறு இருக்கிறது என்றாலும், அவள் இரண்டு நாள் வீட்டுக்கு வராமல் இருந்து கொண்டது அவனுக்கு உண்மையில் கடும் கோபம்.

அபித் மட்டும் இங்கு இல்லையெனில் இவள் இங்குதான் இருக்கிறாள் என்று கூட இவனுக்குத் தெரிந்திருக்காதே!

இந்நேரத்துக்குள் இது எத்தனை பெரிய களேபரமாக மாறி இருக்கும்? இவன் மட்டுமா வீட்டில் உள்ள அனைவருமே துடித்துப் போயிருக்க மாட்டார்களா?

ஆனாலும் அவளுக்கு கோபம் வந்ததின் காரணம் இவனல்லவா? அதோடு அவள் சொன்ன பொசசிவ்னெஸும் இவனுக்கு நியாபகத்தில் இருக்கிறதுதானே!

உன்னுடைய எல்லாம் எனக்கு மட்டும்தான் என உரிமை கொண்டாடுபவளை, அத்தனை நாசுக்கும் மென்மையுமான ஒரு பொழுதில், அதுவும் அவளது எல்லைக் கோட்டை இவனை நம்பி அவள் தாண்டி வந்து நிற்கும் போது இவன் விலக்கியது,

அன்றைய நிகழ்வை அல்ல, அவளையே விலக்கியது போல் தோன்றும்தானே அவளுக்கு.

ஆக இத்தனை தூரம் அவள் கோபப் படுவாள் என இவன் எதிர்பார்த்திருக்காவிட்டாலும், இன்றைய அவள் கோபத்தின் அளவு இவன் மீது அவள் மனதிற்குள் வைத்திருக்கும் உரிமை மற்றும் அன்யோன்யத்தின் அளவாக மட்டுமே அவனுக்குப் பட்டது.

அந்த வகையில் இவனுக்கு அவளிடம் காதல்தான் பெருகுகிறது. சிரிக்கவும் அவளை ரசிக்கவும் உரிமை பாராட்டவும் அவனுக்கு முடிகிறது.

மென்மையாய் மிக மென்மையாய் அவளை அவளின் இந்த கோபத்தை கையாள விரும்பினான் அவன்.

அதோடு ‘உன்னைவிட அதிகமாக நான் கூடலுக்கு ஏங்கிப் போய் இருக்கிறேன்’ என்றும் அவளிடம் உணர்த்திவிட ஒரு உந்துதல்.

அது வெகுவான உண்மை என்பதோடு மட்டுமல்லாமல், அது இந்த நேரத்தில் அவளுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய விஷயமாகவும் இவனுக்குப் படுகிறது. இவன் எந்த வகையிலும் அவளை அசட்டை செய்யவில்லை என்பது அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என்கிறது அவன் மனம்.

இந்த உணர்வுக் கலவைகள்தான் ஒரு பக்கம் சிரிப்பும் சீண்டலுமாயும், அடுத்த பக்கம் அதட்டலும் கோபமாகவும் வந்து கொண்டிருந்தது பிஜுவின் வார்த்தைகளில்.

அவன் கோபத்தை இதுவரை ஆராதனா பார்த்ததே இல்லை என்பதால் இப்போது ஒரு கணம் திகைத்துப் போய் பார்த்தாள்.

அதே நேரம் “டாக்டர் ஆராதனா இங்க என்ன இஷ்யூ? யெஸ் மிஸ்டர் உங்களுக்கு என்ன தெரியணும்?” எனக் காதில் விழுகிறது ஒரு ஆளுமையான குரல்.

அடுத்த பக்கம்

Advertisements