KV10 (3)

“எங்க குடும்பங்கள்ள பொதுவாவே பிசினஸ்ல பண வரவு செலவுதவிர எதைப்பத்தியும் வீட்டு பொண்ணுங்கட்ட ரொம்ப பேசியிருக்க மாட்டாங்க பவன்… பொண்ணுங்கள கண்டிப்பா படிக்க வைப்பாங்க…..அதுவும் PG வரை…. ரொம்ப அட்ராக்டிவான காஸ்ட்லியான டஃபபான கோர்ஸ்னு தேடி தேடி படிக்க வைப்பாங்க…..பட் அடுத்து வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டாங்க…. சின்ன வயசில் மேரேஜ் செய்து கொடுக்க கூடாது….. அந்த வயசு வர்ற வரை வீட்லயும் சும்மா வச்சுகிட்டு இருக்க முடியாதுன்றதுக்காகத்தான் இந்த படிப்பெல்லாம்…… அதான் அப்டியே வளந்துறுப்பேன்…..” தன் சூழலை தானே அப்போதுதான் உணர்ந்தவளாக பேசினாள் அவள்…

“எனக்கு டைல்ஸ் மார்பிள்ஸ் பிசினஸ் செய்றாங்கன்றத தவிர அப்பா கடைய பத்தி எதுவுமே தெரியாது….. அதோட அ…..து கம்ப்ளீட்லி மெ….ன்ஸ் பிசினஸ்….. ” கடைசி வரியில் அவன் கண்டிப்பாய் அப்போஸ் செய்வான் என்ற உணர்வோடு தயங்கிவள்…. பின் தீர்மானமாகவே சொன்னாள்…

“இது லேடீஸ்க்கு கொஞ்சமும் செட் ஆகாத ஒன்னு….. “

“ஏன்….?” ஒற்றை வார்த்தையில் அவளது அனைத்தையும் மறுத்தான் அவன்….

“நிஜமா பவன்…எவ்ளவு பிசிகல் வர்க்….?” அவள் கேள்வி அவளுக்கு நியாயமாகவே பட்டது

“நீயா நித்து லோட ஏத்தி இறக்க போற…?” இது அவன்.

“பச்…. அது  மட்டும்தான் வர்க்கா…? அப்பா பர்சேஸ்க்கு எங்கல்லாம் போவாங்க தெரியுமா…. இந்தியா முழுக்க சுத்தியிருப்பாங்க….  அவ்ளவு பேக்டரியும் அங்கங்க காட்டுக்குள்ள இருக்றது போல இருக்குமாம்…. மருந்துக்கு கூட லேடீஸ பார்க்க முடியாதாம்…..

மோஸ்ட் ஆஃப் த பேக்ட்ரீல ஆன் த ஸ்பாட் பேமென்ட் கட்டிட்டு அப்டியே சரக்க வெளிய எடுத்துட்டு வரனுமாம்…… லட்சக் கணக்கான பணத்தோட அப்டி போன இடத்துல நம்மள பிடிச்சு அடிச்சுப் போட்டுட்டு பணத்த எடுத்துக்கிட்டா என்ன செய்றதுன்னு அப்பாவே ரொம்ப யோசிப்பாங்க….

அதையும் விட பெரிய கொடுமை….. பர்சேஸ் செய்து வந்த லோட இங்க லாரில இருந்து இறக்க லேபர்ஸ்க்கு அலைவாங்க பாருங்க……. நாங்கதான் லேபரா வருவோம்……எங்கள தவிர யாரையும் உள்ள விடமாட்டோம்னு ஒரு க்ரூப் சரக்கு லாரிய மறிச்சுட்டு வந்து நிக்கும்….  அப்டி நின்னுகிட்டு   நமக்கு கிடைக்கிற லாபத்த விட அதிகமா… இறக்குறதுக்கு மட்டுமே கூலியா கேட்டு மிரட்டுவாங்கன்னு அப்பா சொல்லி இருக்காங்க….  அதுக்காகவே நட்ட நடுராத்ரி நேரமா லோட கொண்டு வர வச்சு இறக்குவாங்க….. இதுக்கெல்லாம் நான் எப்டி செட் ஆவேன்….?” அவன் கேள்வியில் ப்ரோவோக் ஆகி சற்று ஆதங்கமாகவே பொரிந்தாள் நித்து..

கேட்டுக் கொண்டிருந்தவன் இப்போது ஒரு விதமாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்….

“ஆக உங்க பிஸினஸைப் பத்தி உனக்கு ஒன்னுமே தெரியாதுன்ற….?” அவனின் அடுத்த கேள்வியில்தான்……இவ்ளவு நேரம் தான் சேம் சைட் கோல் போட்டிருப்பதே அவளுக்கு புரிகிறது….

“இத தாண்டி வேற என்ன தெரியனும் நித்து உங்க பிஸினஸ்ல…..? இது தவிர சேல்ஸ் தானே விஷயம்…..பொதுவா அதை கடைல இருக்ற எம்ப்ளாயீஸ்தான் பார்த்துறுப்பாங்க…. வாட்எவர் வந்து பாரு…..அடுத்து என்ன செய்யலாம்னு  டிசைட் செய்யலாம்…..உங்க அப்பா இருக்ற கண்டிஷன்ல அவங்க என்ன பார்ப்பாங்கன்னு நீ வீட்ல உட்காந்துட்டு இருக்க..?” பவனின் அடுத்த கேள்வியில்

“மொத்த இந்தியாலயும் இரெண்டே  லேடீஸ் மட்டும்தான் இந்த பிஸினஸ் செய்றாங்கன்னு சொல்வாங்க…. அந்த அளவு லேடீசே இல்லாத பிஸினஸ்க்குப்போய் என்னய இழுக்கீங்க….”  முனங்கிக் கொண்டே  சாப்பிட போய் உட்கார்ந்தாள்…

அதாவது சம்மதிக்கிறாளாம்..

“ அந்த ரெண்டு பேரும் இங்க நாகர்கோவில் திருநெல்வேலின்னு உங்க பக்கத்து ஊர்காரங்கதான் தெரியுமா…?” கேட்டபடி அவளுக்கு எதிராக  இவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில்  போய் உட்கார்ந்தான் பவன்….

“வீட விக்றதுக்கே சித்திட்டதான் ஹெல்ப் கேட்கலாம்னு நினச்சுறுந்தேன்….. திருநெல்வேலில இருக்ற தினதந்தி ஆஃபீஸ் போய் ஒரு அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க எனக்கு நடுங்கும்….

விக்கப் போற ப்ராப்பர்டிக்கு EC போட்டு…..  வாங்க நினைக்கிறவங்களுக்கு அதையும் டாக்குமென்ட்ஸ் கூட  காமிப்பாங்கன்னு கேள்விப்பட்றுக்கேன்…….ஆனா EC வாங்க  என்ன செய்யனும்னு கூட  எனக்கு தெரியாது…….என்ன போய் கடைக்கு வர சொல்றீங்க…” அதற்கடுத்த நித்துவின் பேச்சு யாவும் இதே வகையில் குறைபடலாகவே அமைந்தாலும்….. அவள் கிளம்பத்தான் செய்தாள்.

“ஹேய் அடுத்த பிஸினஸ் ரியல் எஸ்டேட்டும் உன் கைவசம் இருக்குன்ற…..” என்ற வகையிலேயே அவளுக்கு பதில் கொடுத்து கடைக்கு கிளம்ப வைத்துவிட்டான் பவன்…

டைக்கும் போவதே ஒரு பெரும் கலக்கமாக இருந்ததென்றால் பவனுடன் காரில் செல்வதென்பது செய்யக் கூடாத ஒன்றை செய்வது போல் ஒரு கணம் நடுக்கியது நித்துவுக்கு…. இதுவரை இப்படி அந்நிய ஆண் யாருடனாவது பேசி இருப்பாளா…..? அதுவே கிடையாதென்கிற போது….காரில் செல்வதெல்லாம் எப்படியாம்….?

ஒரு கணம் தயங்கியவள் மனக் கண்ணில் சஹா மற்றும் ஷ்ருஷ்டியின் முகம் தோன்றி மறைய…. ஆழமாய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு காரில் ஏறிவிட்டாள்….

ன்று அவளை கடைக்கு கூட்டிப் போனதற்கு பல காரணங்கள் இருந்தன பவனிடம்….

முதல் விஷயம் அவள் அப்பாவை அந்த நிலையில் பார்த்தபின்….. அதுவும் அக் கிழவனை அப்படி மிரட்டி வேறு துரத்தி இருக்கும் நிலையில் அவளை அவ் வீட்டில் தனியாக விட்டு வர அவனுக்கு மனதில்லை

நீ போய்ட்டியோன்னு வருத்தப்பட்டு குடிச்சேன்னு தான அவ அப்பா சொன்னார்…..அது யார நினச்சு சொன்னார்…..அந்த கிழவனையா…..? அவன் போக கூடாதுன்னு இவ அப்பா நினச்சாரா? என்ற ஒரு நெறிஞ்சி முள் அவன் நெஞ்சிக்கு நேரிட்டிருந்தது….

ஆக முதல் வேலையாக கடைக்கு வரவும்  கடை செக்யூரிட்டியில் நம்பிக்கையான ஒருவரை குடும்பமாக நித்து வீட்டுக்கு அன்றே குடி பெயர செய்தான்…

நித்து வீடு பழைய மாடல் வீடு என்பதால் காம்பவ்ண்டின் இடது பக்கம் ஒரு மெகா சைஸ் பழைய சாமான் போடும் அறையும்… பின் புறம் தனியாக ஒரு உபரி  சமயலறையும்…. மூன்றாவதாய் ஒரு மூலையில் டாய்லெட்டும் இருந்தது……

ஆக அதையெல்லாம் காலி செய்து கொடுத்து அந்த குடும்பத்தை அங்கு  குடியேற்றுவது நித்துவுக்கும் அந்த குடும்பத்துக்கும் ஏற்புடையதாக இருந்ததால் அதை உடனடியாக செயலாக்க முடிந்தது…

அது தவிர கடையில் இருந்த சரக்கின் ஒரு பகுதியை அங்கு வீட்டில் இருந்த ஒரு ஷெட்டுக்கு மாத்த சொன்னான்….

யாருக்கும் வீட்டுக்கு செக்யூரிட்டி என்பது வித்யாசமாக படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை…..

வாசல்ல கார் நின்னதுக்கே  கன்னா பின்னானு எதையோ கேட்டு அவள அழவச்ச ஊராச்சே என்பது பவனின் எண்ணம்…

நித்துவை பவன் கடைக்கு அழைத்து வந்ததின் அடுத்த காரணம்….  கடையில் நடக்கும் தில்லுமுல்லுவை கண்டறிவது சம்பந்தப்பட்டது…..

இப்படி நிலையில் இருக்கிற ராஜசுந்தரமா அவ்வளவு ஆர்டர் புக் செய்தார்? ஏன் ? எதற்கென்றெல்லாம் தோன்றுகிறதுதானே….

நித்துவும் அவனுமாக டாக்குமென்ட்களை குடைந்து ஸ்டாக்கையும் பரிசோதித்த போது அவர்கள் கண்டு பிடித்த முக்கிய விஷயம் அந்த லோடுகளை புக் செய்தது….. முன் பணம் 50 லட்சம் பவன் கம்பெனி கணக்கில் போட்டது எல்லாம் ராஜ சுந்தரம்தான் என்றாலும்…. சரக்கை அவர் ரிசீவ் செய்தே இருக்கவில்லை…. ஆனாலும் வாங்கிக் கொண்டதாக மெயில் மட்டும் அனுப்பி இருக்கிறார்…. ஏன்????

அதோடு அந்த 50 லட்சம் என்பது கடையின் மொத்த முதலீடையும் துடைத்தது போல்….. ஆக கடையில் இப்போது விற்பனைக்கென்று பெரிதாக ஸ்டாக் கூட எதுவும் இல்லை….

அதாவது மொத்தத்தில் பெயரளவுக்கு கடை இருக்கிறது……ஆனால் கடனை தவிர அங்கு வேறு எதுவும் இல்லை…..

கடனை அடைக்க வீடையும் வித்துவிட்டால்….அடுத்து என்ன என்ற கேள்வி முதன் முதலாக நித்துவை தொட்டுப் பார்த்தது…

தொடரும்…

16 comments

  1. Superb sis…. Pawan nithu and Saha Sri both love tracks are unique in its own ways… Good work sis….

Leave a Reply