“வாங்க…… ப்ரெஷும் பேஸ்டும் உள்ள இந்த ரூம் பாத்ரூம்ல வச்சுறுக்கேன்…. ரெஸ்ட் எடுக்கனும்னா கூட கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்துட்டு கிளம்பி வாங்க….. வீடு பழசுனாலும் அட்டாச் பாத் பின்னால கட்டினதுதான்…..ஓரளவு எல்லா மாடன் அம்னிடீசும் இருக்கும்….. உங்களுக்கு வேற எதுவும் வேணும்னாலும் சொல்லுங்க….” உபசரிப்பாய் சொல்லிக் கொண்டு சற்று துள்ளலான நடையோடு இவனுக்கு முன்னாக வீட்டுக்குள் போக துவங்கினாள் நித்து……
அவளின் குரலில் தொற்றி இருந்த உற்சாகத்தை தன் நரம்பு மண்டலங்களில் ஸ்பரிசித்தபடியே பின்னால் செல்லத் துவங்கினாலும்…. “வேண்டாம் நித்து….அதெல்லாம் தேவையில்ல….. இப்டியே உங்க அப்பாவ பார்த்துட்டு கிளம்பிடுறேன்….” என மறுத்தான் இவன்…
“இல்ல…அப்பா தூங்கிட்டு இருக்காங்க….நீங்க ஃப்ரெஷப் ஆனீங்கன்னா…அதுக்குள்ள அப்பா எழுந்துடுவாங்க….. “ கொஞ்சம் தயக்கத்தோடு நின்று சொன்ன நித்துவின் குரல்…..
“இல்லனா அப்பாவ வேணும்னா இப்ப எழுப்பட்டுமா….?” எனும் போது ரொம்பவும் உள்ளே போயிருந்தது…… அப்பாவ பார்க்காமலே அனுப்ப ட்ரைப் பண்றேன்னு நினைப்பானோ என திடீரென வந்த எண்ணம் காரணம்… அப்டின்னா பணம் தராம இழுத்தடிக்க நினைக்கிறதா அர்த்தம் ஆகும்தானே….
அக்னி பட்ட அரும்பாய் அவள் முகம் கருகுவதைக் காணவும் “உனக்குத்தான் தேவையில்லாம கஷ்டம்னு பார்த்தேன்…..” என அவசர ஆறுதல் சொல்லி “அதோட “என்றபடி குனிந்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டு….
“ரூம்க்கு போய்ட்டாதான் பெட்டரா ஃபீல் ஆகும் “ என முடித்தான் பவன்…
அப்பொழுதுதான் அதை கவனித்தாள் அவள்….
நேற்று மழையில் கார் டயரை எல்லாம் குடைந்திருந்தானே…..அவன் உடையில் சகதியின் சாம்ராஜ்யம்… குளிச்சுட்டு திரும்பவும் இதே ட்ரெஸ்ஸ எப்டி போட்டுப்பான்?
சின்னதாய் யோசித்தவள் “இருங்க வர்றேன் “ என உள்ளே ஓடினாள்…
திரும்ப வர்றப்ப லூயி பிலிப்…..ஆலன் சோலி என இரண்டு அட்டை பெட்டிகள் அவள் கையில்…. “உங்க சைஸுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறேன்….” இவனுக்காக அவள் காட்டிய அறைக்குள் சென்று வைத்துவிட்டே வந்துவிட்டாள்…..
நேற்று முதன் முதலாக அவளைப் பார்க்கும் போது அவள் இருந்த மனோநிலைக்கு….. இன்றைய இவளது இந்த துடிக்கும் உவகை இவனது மனதை நிரப்பி நீரிடுகிறது…..
கூடவே ‘அவளுடைய அப்பாவின் உடை அளவு இவனுக்கு நிச்சயமாக சேராது….. அப்போ இது வேற யாருக்காக வாங்கின ட்ரெஸ்ஸா இருக்கும்…? என்னதான் இருந்தாலும் கெஸ்டுக்கு கொடுக்கறதுக்குன்னா புது ட்ரெஸ் வாங்கி வீட்ல வச்சுறுப்பாங்க….’ எனவும் ஒரு சிந்தனை அவனுக்கு உண்டாகிறது…..
அதைப் பற்றி கேட்க நினைத்து இவன் அவளை பார்க்க…. என்னதான் மகிழ்ச்சியாய் இருப்பது போல் காண்பித்துக் கொண்டாலும்… பாலிஷ் செய்த பளிங்கு போல் உள்ளிருப்பதை காண்பிக்கும் அவள் முகத்தில் இதைப் பற்றி பேச பிடிக்காத வகையில் எதோ புதைந்து இருக்கிறது…..
‘அப்படி என்ன விஷயம் இருக்கும் அந்த ட்ரெஸ்ல….? ‘ என மனதுக்குள் கேட்டுக் கொண்டே அவள் காண்பித்த அறைக்குள் சென்றான் பவன்.
அடுத்து இவன் குளித்து கிளம்பி வெளி வரும் போது….. சுட சுட தயாராக இருந்தது காலை சிற்றுண்டி…
“இப்பவேவா? டூ இயர்லி… சாப்பாடுல்லாம் வேண்டாம்….நான் அப்பாவ பார்த்துட்டு கிளம்புறேன்….” முதலில் இவன் மறுக்க
அவளோ அதையெல்லாம் சட்டை செய்ததாக தெரியவில்லை “நைட் தூங்காம இருந்ததுக்கும்….இப்ப குளிச்சுட்டு வந்ததுக்கும் ரொம்பவே பசிக்கும்….” என்ற ஒரு விளக்கத்தோடு உணவை பரிமாறத் துவங்கினாள்….
வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்பாடு போடுறதுக்கெல்லாம் இப்டி எக்சைட் ஆகிறியேடா….. இது நார்மலான விஷயம் என என்னதான் அறிவு லாயராய் ஆஜரானாலும்…..மின்சார தேன்மழை எங்கோ இவனுக்குள் இடம் பிடிக்கிறது…..
“அப்பா குளிச்சுட்டு இருக்காங்க…. நீங்க சாப்டு முடிக்கவும் பார்த்து பேசலாம்….” அவளோ இன்னும் அவனுக்கு விளக்கம் சொல்வதிலேயே கவனமாய் இருந்தாள்.
அதுவரை எல்லாம் நன்றாகத்தான் சென்றது….
இவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்….
“ஏய்ய்ய்ய்……நான்ன்ன் செத்துட்ட்ட்டா……இல்ல்ல…. இல்ல்ல்ல்ல்ல்ல்ல…..நீ செத்துட்ட்ட்டா….எல்லாம்ம்ம்ம்….சரியா போய்டும்ம்….” என்ற உளறலும் குமுறலுமாய் தள்ளாடிய படி வந்து நின்றார் ராஜசுந்தரம்….
அதோடு தன் மகளை கையோடு பிடித்து முரட்டுத்தனமாய் இழுக்கவும் செய்தார்…. முழு போதையில் இருக்கிறார் என சொல்லாமலே புரிந்தது…
அவ்வளவுதான் பவன் சாப்பாட்டிலிருந்து பட்டென எழுந்துவிட்டான் என்றால்
நித்துவோ “சாரி பவன்…. வெரி சாரி…நிஜமா அப்பா குளிச்சுட்டுதான் இருந்தாங்க…..அவங்க சாப்டுறதுக்கு முன்ன இப்டில்லாம் ட்ரிங்ஸ் எடுக்கவே மாட்டாங்க……எங்க அப்பாட்ட பேச உட்காந்தீங்கன்னா…..அடுத்து சாப்டாம போய்டுவீங்களோன்னுதான்….. முதல்ல சாப்ட சொன்னேன்…..நிஜமா இப்டி ஆகும்னு எதிர்பார்க்கல…..” இழுத்துக் கொண்டிருந்த அப்பாவையும் தாண்டி தவிக்க தவிக்க இவனுக்குத்தான் விளக்கம் சொன்னாள்…
“அப்பாட்ட நீங்க பேச முடியாம போகனும்னு நான் நினைக்கவே இல்ல….. உங்க பணத்த கண்டிப்பா தந்துடுவோம்…..” ஏறத்தாழ அழத் தொடங்கி இருந்தாள் அவள்…
“இடியட்….” பவனும் அவளைத்தான் பார்த்து உறுமினான்…. ஆனால் அதற்குள் எப்போதோ அவளை அவளது அப்பாவின் கையிலிருந்து உருவியுமிருந்தான்….
”இப்ப இதா விஷயம்….” அதட்டலோடு தன் புறமாக இழுத்து நிறுத்தியும் இருந்தான்….
அவள் அழுகை அப்போதைக்கு நின்றிருந்தாலும் அது எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும் அறிவிப்பு அவள் இதழ்களிலும் இமை கண்ணிலும் குறையாமல் இருந்தது….
ராஜசுந்தரமோ மகளை தன்னிடம் இருந்து உருவும் இவனைப் பார்க்கவும் ஒரு விதமாக சிரித்தார்….. “நீங்க போகழையா….. போய்டீங்களோன்னு ழொம்ப பயந்துட்டேன்……அதான் இப்ப குழிச்சேன்…. சாழி….” பவனைப் பார்த்து ஒரு கும்பிடு…..”சாழி” இது மகளுக்கான கும்பிடு…..”இனி அப்பா குடிக்க மாட்டேன் நித்துமா…..” சொல்லிவிட்டு அருகிலிருந்த மேஜையில் மட்டையாக சரிந்தார்…
“இவர் என்ன சொல்றார்?” அவள் அப்பாவின் வார்த்தைகளில் மீண்டுமாக உறுமினான் பவன்…
“ப்ச்….அவர் குடிச்சுட்டு உளர்றதையெல்லாம் புரிஞ்சுக்க ட்ரைப் பண்ணி கோபட்டா நம்ம BP மட்டும் தான் ஏறும் பவன்…..” ஏதோ புயல் முடிந்த உணர்வோடு அருகில் இருந்த நாற்காலியில் சொத்தென உட்கார்ந்தாள் நித்து….
ஒரு கணம் தன் நெற்றியை தேய்த்து ஆசுவாச படுத்திக் கொண்ட பவனும்….அவளிடம் குடிவந்திருந்த அதீத சோர்வை உணர்ந்தவனாக…..அவள் அருகில் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்…..
“சாரி….தேவை இல்லாம உன்ட்ட போய் கத்திட்டேன்…”
“ப்ளீஸ் பவன் ஏற்கனவே ஓவரா கடனாளியா இருக்கேன் உங்கட்ட….சாரி கேட்டு இன்னும் இன்னும் கடனாளியாக்காதீங்க…. நிஜமா சொல்றேன் நீங்க இல்லனா….” என்றவள் அடுத்து எதுவும் சொல்லாமல் நிறுத்தினாள்….
சொல்ல நினச்சத சொன்னா திரும்பவும் கத்துவான் என இவளுக்கு நன்றாகவே தெரியும்….
இவன் கோபத்தை தூண்டக் கூடாதெனதான் அவள் பேச்சை நிறுத்துகிறாள் என்பது அவனுக்கும் புரிகிறதுதானே….. அவன் முகத்தில் ஒரு மென்மையும் அதை சார்ந்த புன்னகையும் வந்தமர்கிறது…
“நான் இல்லனா…?” அவளை பேச சொல்லி தூண்டினான்…
“………………”
“கோபமெல்லாம் பட மாட்டேன்… சொல்ல வந்தத சொல்லு…..” அடுத்தும் அவன் ஊக்க
“கண்டிப்பா என்னால சமாளிச்சுறுக்கவே முடியாது….” கொஞ்சம் தயக்கமாய் வருகிறது அவள் பதில்…
இன்னுமாய் விரிகிறது அவனது புன்னகை…
“நிஜமா கோபடமாட்டேன்பா….சொல்ல நினச்சத அப்டியே சொல்லு…” அவன் சொல்ல….ஆக அவனுக்கு அவள் என்ன சொல்ல வந்தாள் என தெரிந்துதான் இருக்கிறது என்பது இவளுக்கு புரிகிறது..
“ப்ச்…..நிஜமா சூசைட் செய்யலாம்னு ஒரு தாட் இருந்துச்சு…” சலிப்பாய் சொல்வது போல் ஒத்துக் கொண்டாள்….
“ம்… அதான்….. தரைல படுத்துட்டு தனியா தன்னப் பத்தியே யோசிச்சுட்டு இருந்தா இப்டித்தான் தோணும்…. “ முகத்திலிருந்த புன்னகை மாறாமல் அவன் பேசவும் கொஞ்சம் இலகுவாக உணர்ந்தாள் அவள்… கூடவே அன்யோன்யமாயும்…
“அதுக்குத்தான் வெளிய வரனும்…..எதாவது வேலைக்கு போகனும்றது…… முதல்ல இப்ப சாப்டுட்டு என் கூட கிளம்பி உங்க கடைக்கு வருவியாம்…” அவன் தன் திட்டத்தை விளக்க மிரண்டு போய் விழித்தாள் அவள்…
“என்னது எங்க கடைக்கா?”
“ஏன்..? உங்க கடைக்குத்தான கூப்டுறேன்…”
“அதுக்கில்ல….. ஆ…ஃபீஸ் ஜா..ப்….ன்னாலும்….. கொ….ஞ்சம்…ஓகேவா படுது…..ஆனா…. பிஸ்னஸ்க்கு….?” ரொம்பவுமே தயங்கி இழுத்தாள் நித்து…
“என்ன படிச்சுறுக்க நித்து…?”
“MBA” சட்டென அவள் பதில் சொல்ல…
அவளை ஒரு பார்வை பார்த்தான் அவன்….
தன் வாதங்களின் அபத்தம் அவளுக்கு அப்போதுதான் உறைக்க…. பின்ன படிச்சது MBA ஆனா பிசினஸ் செய்ய மாட்டேன்னா அபத்தமாதானே இருக்கும் கேட்கிறவங்களுக்கு….