காற்றாக நான் வருவேன் 4 (6)

ஒவ்வொரு நொடியும் அவனது அன்புக்கு இவளுக்கு சாட்சி தேவைபடுகின்றதா? அவன் நடிகன் என்பதால் நம்ப முடியவில்லையா? அல்லது அவன் அம்மாதான் இதற்கு காரணமா? இரண்டும்தான் என்றது அறிவு.

அந்த நாள் இவளுக்கு நத்தையாய் நகர்ந்தது என்றால் அபிஷேக்கிற்கோ நிற்க நேரமில்லை. அன்று அவனை தயனியால் கண்ணால் காண கூட முடியவில்லை.

இரவு தாமதமாக வீடு வந்தவன் இவள் வரவேற்பறையில் திரு திருவென விழித்தபடி அமர்ந்திருப்பதை பார்த்தவுடன், “தூங்காம இங்க என்ன செய்துகிட்டு இருக்க?” சற்றே அதட்டினான்.

அவன் அருகில் இல்லாமல் உலகமே வெறுமையாய் தெரிந்திருந்தது அதுவரை அவளுக்கு. “நாளைல இருந்து எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்க……நீங்க இல்லாம முடியல அபிப்பா….”

அவள் அழுவாள் என நிச்சயமாக அபிஷேக் எதிர் பார்க்கவே இல்லை.

“ஹேய்….என்னாச்சு அம்மு? வர லேட்டாகும் தூங்குன்னு சொன்னே தயூ? “ மார்பில் முகம் புதைத்திருந்தவளை மௌனமாக சில நொடி அணைத்துகொண்டான்.

“ஒரு முக்கியமான வேலை…” அவளிடம் சில பத்திர கட்டுகளை நீட்டினான்.

“நம்ம ப்ராப்பர்ட்டி எல்லாத்தையும் நம்ம ரெண்டு பேருக்குமா மாத்திட்டேன்….நாளைக்கு ரிஷப்ஷன்…அதான் நாள கழிச்சு ரிஜிஃஸ்டர் செய்துடனும்…”

காலையில் இவள் விழித்த விதத்தை அவன் புரிந்திருக்கிறான். சந்தேகம் போக்க இந்த ஏற்பாடு.

நொடியில் புரிய “சாரி….அபிப்பா….ஒரு நிமிஷம் நம்பிக்கை…மறு நிமிஷம் சந்தேகம்னு….” குற்ற உணர்ச்சி அவளை கொன்றது.

“தெரியும்டா தயூ….பொறுமையா இருக்கனும்னு சொல்லி இருந்தேனே….இதுக்கெல்லாம் கில்டியா ஃபீல் செய்துகிட்டு….கொஞ்ச நாள்ல சரி ஆயிடும் அம்மு” அப்பொழுதும் அவளுக்குதான் ஆறுதல் சொல்ல முனைந்தான் அவள் கணவன்.

“என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா….அபி?”

“இல்லடா……நான் இல்லனா தூக்கம் வரலைனு வந்து உட்கார்ந்துட்டு இருந்தியே அது என்னவாம்?…..காதல்…..அது எனக்கான பொக்கிஷம்…..உன் சந்தேகம் ஒரு காயம்…..அதை ஏற்படுத்தியது என் அம்மாவேங்கிறதால அது நம்ம ரொம்ப பாதிக்குது….குணமாக்க என்னவெல்லாம் செய்யனுமோ அதையெல்லாம் செய்வேன்….அதவிட்டுட்டு….என் பொக்கிஷத்தை தொலைக்க நான் தயாரா இல்ல……ஐ லவ் யூ தயு…” இதற்குள் தயனி அவன் மார்பில் சரணடைந்திருந்தாள்.

“தயு….,  நம்ம மேரேஜ் ப்ராப்பரா தெரியனும் இங்க…அதுக்கு ரிஷப்ஷன் முடியட்டும்….அங்கே போய் உனக்கு நியாயம் கிடைக்க என்ன லீகல் ஆக்க்ஷன் எடுக்கனுமோ எல்லாம் எடுப்போம்.  வொய்ஃபோ, பிள்ளைங்களோ, பேரண்ஸோ எனக்கு எதிரா செய்றத நான் விட்டு கொடுத்திடலாம்…பட் அவங்களே அடுத்தவங்களுக்கு எதிரா செய்த அநியாயத்துக்கு நீதி செய்யனும்னுதான் பைபிள் சொல்லுது. தாமர், அம்னான் விஷயத்தில் அவங்க அப்பா டேவிட் நீதி செய்திருந்தார்னா, பின்னால எவ்ளவோ இழப்ப தடுத்திருக்கலாம்” மௌனத்தால் தன் சம்மதத்தை வெளிபடுத்தினாள் மனையாள்.

குரூரமாய் பார்த்தபடி அங்கு வந்து நின்றது அது.

தொடரும்..