காற்றாக நான் வருவேன் 4 (5)

இராயிரம் ஆண்டுகளுக்கு முன் யேசு கிறிஃஸ்துவின் சீடரும் அப்போஃஸ்தலருமான தாமஃஸ் (தோமா) தமிழகம்வந்து இறைபணி ஆற்றியபோது இவள் முன்னோருக்கு தன் கரத்தால் எழுதி கொடுத்த ஒரு வசனம் எழுதபட்ட ஓலை சுருள்…அந்த சுருளை இவள் நீண்டிருக்கும் நகத்திற்குள் சுருட்டி வைத்துவிட முடியும்.. அது உள்ளிருக்கிறது இந்த மரகதங்கள் பதித்த தங்க சிறு வீணைக்குள். பரம்பரையாக இவள் தந்தைக்கு வந்தது. இப்பொழுது இவளுக்கு. படு ரகசியம். இதன் இன்றைய மதிப்பு….பணத்தில் கணக்கிட முடியுமா?

அன்று அத்தையின் சம்மதமின்றி தப்பி ஓட நேர்ந்தால் அதற்கு முன் இது எல்லை கடந்து விடுவது நல்லது என அந்த மஞ்சுளாவுக்கு கூட தெரியாமல் மறைத்து நம்பிய கணவனுக்கு அனுப்பியது. எடுத்து அவளது வழக்கத்தின்படி கூந்தலுக்குள் மறைத்தாள். அதுதான் அதன் வழக்கமான இருப்பிடம்.

எதற்காக இந்த நரிகள் என்னை சின்னாபின்ன படுத்தியதோ, அதை ஒருநாளும் அவர்களை அடைய விட போவதிலை இந்த தயனி. சூளுரைத்தாள்.

பொன் எழுதுகலத்தில் கடிதம் வைத்த அடுத்த பகுதியை பார்த்தாள், அது காலியாக இருந்தது.

தே நேரம் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அபிஷேக்.

“இன்னும் தூங்கலையா தயூ?…. இருட்டில் எதுக்கு வாலட்டை குடஞ்சுகிட்டு இருக்க?…. “ என்றபடி லைட்டை ‘ஆன்’ செய்தான்.

அவன் முகத்தில் எந்த அதிர்ச்சியோ, யோசனையோ, கோபமோ இல்லை. இயல்பாக இவளிடம் வந்தான்.

அவனுக்கு தெரியாமல் இவள் எதையோ குடைவதாகத்தானே தோன்றும். அதுவும் இவளிடம் அவன் சதி வெளிபடகூடிய சாட்சி பேனா உள்ளிருக்கும் வாலட்டை அவன் இல்லாத நேரம், தயனி குடைவதை பார்த்தால் அவனுக்கு எத்தகைய உணர்வு வர வேண்டும்?

குழம்பி போய் பார்த்தாள்.

“வா….வாலட் அதா திறந்திட்டு….நா…நான் இருட்டில மோதிட்டேன்”

“நான் சரியா பூட்டிருக்க மாட்டேன்மா. இந்த ரூமுக்குள்ள யாரும் வர்றது கிடையாது. ரூமை க்ளீன் செய்ய கூட என் கண்பார்வையில தான் வருவாங்க. அதனால வாலட்டை கவனமெடுத்து பூட்டாம கூட இருந்திருப்பேன். இடுச்சிட்டியாடா?….”அவள் நெத்தியை மென்மையாக தேய்த்துவிட்டான்.

அடுத்து அவன் என்ன எதிர்பார்க்கிறான் என புரிய அடி வயிறு வரை குமட்டியது தயனிக்கு.

அதே நேரம் அவன் அந்த பேனாவை பார்க்க, வருத்தத்தில் அவன் முகம் சுருங்குவது தெளிவாக தெரிந்தது அவளுக்கு..

“கொஞ்சம் முன்னால அம்மா அனுப்புன கிஃப்ட். இப்படி எப்பவாவது அனுப்புவாங்க…எப்பவாவது அவங்களா கூப்பிட்டு பேசுவாங்க, நான்தான் அடிக்கடி கூப்பிடுவேன்…..கடைசியில என்ன சுட்டாங்க தெரியுமா தயனி அதை என்னால புரிஞ்சிக்கவே முடியல…”

அவன் மனதின் வலி அவளுக்கு புரிய…இது அவளது பேனா என்பதே அவனுக்கு தெரியவில்லை என உறைக்க,  தன் கதை அவனிடம் சொல்லும்போதும் தங்கத்தில் பரிசு எனதான் அவனிடம் கூறி இருந்தாளே தவிர தங்கபேனா என்றவரை கூட தெரிவித்திருக்கவில்லை என்ற ஞாபகம் வர, அவனை தன் தோளில் சாய்த்தாள் தயனி. இவளை அணைத்தான் அவனும்.

ஒரு அம்மாவுக்கு தன் குழந்த வேண்டாததா போகுமா……?” முனங்கினான் அவன். அவன்பால் தாய்மை கொண்டாள் தயனி.

மறு நொடி “ப்ச், உலகத்தில் என்னவென்னவோ நடக்குது….அது நமக்கு நடக்கிறப்பதான் வலி புரியுது…எத்தன குழந்தைங்கள குப்ப தொட்டியில இருந்து கண்டெடுக்காங்க என்ன தயூ….” திடம் பெற்று நிமிர்ந்துவிட்டான். “அப்படிபட்ட குழந்தைங்களுக்காக இனி எதாவது செய்யனும்” தனக்குதானே அவன் சிறு குரலில் உறுதியோடு சொல்லி கொண்டான்.

“தூங்கலாம் தக்காளி! நாளைக்கு ரொம்ப வேலை இருக்குது.” இவளை இழுத்துகொண்டு போய் படுக்கையில் விழுந்தான்.

ஏசிக்கு இதமாக இவளுக்கு மூடிவிட்டு கண்களை மூடிக் கொண்டான்.

அவன் தாயின் நினைவு வந்ததும் அவன் மனம் சோர்ந்து விட்டது என தயனிக்கு புரிந்தது. இல்லையென்றால் அவன் தொடங்கிய தொடுகை தொடர்ந்திருக்கும். இவளை போல அவனும் பலவற்றையும் எண்ணி மனம் தவித்து கொண்டுதான் இருக்கிறான்.

அப்படி அவன் தவிக்கும் போதும் இவளுக்கு குளிருக்கு இதமாக மூடும் அன்பின் கரங்கள் அவனது. மனம் முழு நிம்மதி அடைய கணவன் மேல் கரம் போட்டபடி தூங்கி போனாள்.

டுத்த நாள் அவன் எழுப்பிதான் அவள் கண் மலர்ந்தாள்.

“அம்மு, மணி பத்தாச்சுடா…சப்பிட்டு ட்ரஃஸ் ட்ரயல் பார்த்துட்டு தூங்குமா…”

தடபுடவென எழுந்தாள். “எப்பவும் யாருக்காவது பயந்துதான் எழும்புவியா? நான்தானே! மெதுவா எழுந்தா என்ன?” அதட்டினான்.

உரிமையாய் உண்மையாய் இவளிடம் அன்பாயிருக்கிறானா?…. நடிக்கிறானா?……முதல் சிந்தனை அதுதான்.

என்னதிது ஒரு கணம் அவனை நம்புவதும் மறுகணம் அவனை சந்தேகிப்பதும்……நேற்றும் எதை வைத்தோ சந்தேகித்தாள்…..பின்பு எதை வைத்தோ நம்பினாள்தானே…..இன்று திரும்பவும்?

அடுத்த பக்கம்