காற்றாக நன் வருவேன் 4 (3)

ரை தளத்திற்கும் கீழே இருந்தது அந்த குடோன்.

கட்டு கட்டாய் பல பண்டுல்கள். ஆனாலும் நீள ஹாலில் ஆள் நடக்க புழங்க இடமிருந்தது. கண்களால் கட்டுகளை மேய்ந்தாள். ஒரு மூலையில் அந்த வெண்மையும் லவண்டரும்…வேகமாய் சென்று அதை தொட கை நீட்டியவளை சூழ்ந்தபடி நின்றிருந்தான் அந்த குணா பாக்கு நிற பற்களை காட்டி இளித்தபடி.

“டேய்……. வழி விடு….கத்துவேன். மேலே உன் முதலாளி……போலிஸ்…….கொன்னுருவாங்க”

பதறினாலும் தைரியத்துடன் அதட்டினாள்.

“யேய்!….கத்தாத….” சொல்லிகொண்டே அவள் வாயை தன் குப்பை கரத்தால் மூடியபடி சுவரோடு முரட்டுதனமாக சாய்த்தான் அவளை.

“ம்…ஹட்த்க்…” திமிறிய சுகந்தி காலால்விட்ட உதை அவன் காலை பலமாக தாக்க…மேலும் மூர்க்கமானவன் மறுகரத்தால் அவள் கழுத்தை பிடித்து இறுக்கினான். வாயோடு நாசியை பொத்தி இருந்த ஒருகரத்திற்கும் கழுத்தை நெரித்த மறுகரத்திற்கும் இடையில் அவள். பலம் கொண்டமட்டும் தன் கைகளால் போராடினாள்.

மூச்சு திணறி….துடித்தவளுக்கு….வலி தவிப்பு எல்லாம் அடங்க, திரவமாய் குழைந்து காற்றாய் மாறி, உருவ சிறை தாண்டி, அருவமாய் அவள்.

சரிந்து விழுந்தது அவள் சரீரம். இப்பொழுது அது சடலம். மூச்சை பரிசோதித்த அவன் பதறியபடி படியேறி ஓடிப் போனான்.

அறையின் மேற் சுவருக்கு சற்று கீழாக அசைவாடி கொண்டிருந்தாள் சுகந்தினி.

‘செத்துட்டனா?’

தொடங்கியது ஒரு புது பயணம். இவள் வசம் இல்லை இந்த பிரயாணம். மேற் சுவர் தாண்டி மேல் நோக்கி எழுந்தாள். தரை தளம் வர வேண்டும். வரவில்லை. வந்தது ஒரு திறந்த நிலை. வானம் என சொல்ல வகை இல்லை ஆனாலும் அதை வேறு எப்படியும் வரையறுக்க முடியாது. வானமல்லாத வானம். சரீர உலகம் தாண்டி அடுத்த பரிணாமத்தில் அவள்.

எங்கோ சென்றாள். மிதத்தல், பறத்தல் என வகை படுத்தமுடியாத ஒரு செயலில் இவள். முதல் நிலை கடந்தாள். அடுத்த ஆகாயமில்லாத ஆகாயம். முந்தைய வானமில்லாத வானத்துக்கும் இதற்கும் மனித வார்த்தையில் வரிபடுத்த முடியாத வித்யாசங்கள் உண்டு.

மனிதன் கற்பனையில் கூட கண்டிராத களமிது. தொடர்ந்த பயணம் தெரிந்த வாசல் என்ற வார்த்தையால்  வடிவ படுத்த முடியாத வாசலுக்குள் இட்டு சென்றது.

மூன்றாம் ஸ்தலம். ‘ஆனந்தத்தின் எல்லைக்கே நான் சென்றேன்’ என சொல்ல இங்கு வராத யாருக்கும் தகுதி இல்லை.

ப்லிஸ்- பொருள் விளக்கம் கண்டாள் அங்கு.

‘தெய்வமே! நான் இங்கேயே தங்கிரணும். போக மட்டும் சொல்லாதீங்க என்னை’

அவளுக்குள் இருந்த ஒரே நினைவு அதுதான்.

ப்ரவாகித்த அடி முடியற்ற ஒளி வெள்ளத்தை தவிர அவள் பார்வைக்கு கிடைத்தது எதுவுமில்லை.

ஒளிக்குள் வாசம் செய்யும் உன்னதரை பார்வையில் படாதவண்ணம் மறைத்திருந்தது அவ் வெள்ளொளி.

ஒளியை உடையாய் உடுத்திய உன்னதன்.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மூன்றில் ஒன்றாய் ஜொலிக்கும் தேவன் ஒளிக்குள் வாசம் செய்யும் உன்னத உயர் ஸ்தலம் — ஸயன்.

“சுகந்தினி!” பெயர் சொல்லி அழைத்து அவர் பேசிய வார்த்தைகள் அவளுக்கு சொந்தம்.

“ஆவிகளை பற்றி அறிந்து அடுத்தவருக்கு உதவு, ஏற்ற நேரத்தில் திரும்பி வருவாய்.”

அப்பொழுதுக்கு இறுதி வார்த்தை அது.

சென்ற வழியே திரும்பினாள். முன்பை விட படுவேக பயணம்.

டை சுவர் தாண்டி, அடிதளம் சென்று அவள் உடலுக்குள் உட்புகுந்த நேரம் சிறு கூட்டம் அவளுக்கு அருகில். சில காவலர்களும் அதில் அடக்கம்.

உடலுக்குள் உட்புகுந்தாலும் அது தன் வசபட தேவைப்பட்டது சில பொழுது. காற்று திரவமாய் தன் உடல் நுழைந்தவள், மெல்ல பரவி, உடல் முழுவதும் வியாபித்தும் கை கால்கள் முகம், முதுகு, முன்புறம் என எதுவும் இவள் வசபடவில்லை.

அதற்குள் அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் மனிதர்கள் ஃஸ்டெரிச்சரில் ஏற்றினர்.

தெய்வமே! கை கால் கீழ்படிய எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

அலறியபடி ஒரு வெண்ணுடை ஊழியன் ஃஸ்டெரிச்சரை கைவிட சரிந்து தரையில் விழுந்தாள் சுகந்தினி.

தடவியபடி எழுந்து நின்றவள் அருகில், தயங்கியபடி நின்றனர் மக்கள்.

அதன் பின் பூமியில் நடந்த காரியங்களை விளக்கிய சுகந்தினி, களம் தாண்டி கடவுளை கண்டதையெல்லாம் தன் தாய் உட்பட ஒருவரிடமும் சொல்லவில்லை.

மறுநாள் அதிகாலை ஜெபத்திலிருந்த சுகந்தினியின் கண்களில் தெளிவாய் தெரிந்தார் சிங்காசனத்திலிருக்கும் தேவன்.

அவர் பேச இவள் கேட்டாள் “ நிகரிலுக்கும் அவன் மனைவிக்கும் போய் உதவு.”

அடுத்த பக்கம்