காற்றாக நன் வருவேன் 4 (2)

“ஐ அஅக்ட் இன் மூவிஸ்….தமிழ் மூவிஃஸ் ப்ரொடியூஃஸ் பண்றேன்..அதில நடிக்கவும் செய்றேன்…”

“வாட்?” அஷ்ட கோணலாகியது தயனியின் முகம். விமானத்தில், விமான நிலையத்தில் அனைவரும் பார்த்த பார்வை ஞாபகம் வந்தது. ‘ஓ…. இதனால் தானா?’

கோபம் கொப்பளித்துகொண்டு வந்தாலும் அவனிடம் அதை காண்பிக்க விருப்பமின்றி அதை அடக்கியவள். “தப்புன்னு தெரியுதுல்லபா…தயவு செய்து விட்டுறுங்க..ப்ளீஸ்” கெஞ்சினாள்.

பெரும்பாலான கிறிஸ்தவ குடும்பங்களைபோல திரைபடம் பார்ப்பது தடை செய்யபட்ட குடும்பம் தான் தயனியுடையதும். சில நேரம் ஆசையில் ஒரு சில காட்சிகளை பார்த்திருப்பாளே தவிர முழு படம் எதுவும் பார்த்தது இல்லை. சில நிமிடம் பார்த்ததற்கே குற்ற மனப்பான்மை குறுகுறுக்கும். இதில் படம் தாயரித்து அதில் நடிப்பதென்றால்? நிச்சயமாக அவளால் ஏற்க முடியாது.

“நான் சொல்றத கேட்டுட்டு, நீ உன் முடிவ சொல்லுடா..ப்ளீஸ்” கணவனும் கெஞ்சினான்.

அவள் மௌனம் அவன் பேச சம்மதம் சொன்னது.

நாம எதை கேட்கிறோமோ…நாம விரும்பினாலும் விரும்பாட்டாலும்..அதை கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிக்கிறோம்….அது வார்த்தைகளோட வல்லமை…மனதில் வந்த நம்பிக்கை மெல்ல வாயில் வார்த்தையா வரும்…அப்புறம் ஏற்ற சூழல்ல அது செய்ல்ல வரும்….நானும் அதை முழுசா நம்புறேன்.

நியாமில்லாத கருத்துக்கள்….மாட்டிக்காம திட்டுதனம் பண்றது, பொய் சொல்றது புத்திசாலித்தனம்…பழிக்குபழி…வன்முறையை….சட்டங்களை மீறுவதை நியாயபடுத்துறது…லஸ்டிங்க்….ஃப்ளர்டிங்….ஈவ் டீஃஸிங்க்….ஃஸ்மோக்கிங்க்…டிரிங்க்ஃஸ்…. இதெல்லாம் ஃபன்….பொண்ணுக்கு விருப்பமே இல்லனாலும் தாலி கட்டிட்டா அது கல்யாணம்…ரேப் பண்ணவனை மேரஜ் பண்றதுதான் கற்பு…கல்யாணத்துக்கு முன்னால காதல்ங்கிற பேர்ல நெருங்கி பழகிறது ஹிரோயிசம்….வேலைக்குபோறதுக்கு முன்னாடி படிக்கிற காலத்தில லவ் பண்றது சரி….அத தப்புன்னு சொல்ற பேரண்ட்ஃஸ் வில்லன்….ரேப் விக்டிம்ஸ் அவங்க சேஸ்டிடிய லாஸ் பண்ணிட்டாங்க….முதல் ஒய்ஃப் இருக்கிறப்ப ரெண்டு கல்யாணம் பண்ற ஹீரோ….இன்னும் எத்தனையோ தவறான பல கருத்துகளை நியாயபடுத்திறத பார்க்கிறது, படிக்கிறது இதில் எனக்கும் சுத்தமா உடன்பாடில்லை.

நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆண்டவரோட வார்த்தைக்கும் விரோதமான கருத்தை நியாயபடுத்துற எதையும் நான் பார்ப்பதும் இல்ல, நடிக்கிறதும் இல்ல…..

ஆனால் நல்ல பொழுதுபோக்கு இல்லனா?……கெட்டதைதானே பார்க்கவேண்டிய கட்டாயம்……அதான்….

நான் ஹவுஃஸ் சர்ஜனா இருக்கிறப்ப அதுவா தேடி வந்தது ஆக்டிங் சான்ஸ்…..அப்ப ஜஸ்ட் ஃபார் ஃபன் அப்படின்னுதான் போனேன்….மூவி படு ஹிட்…அப்படியே தொடர்ந்து ஃப்யூ மூவிஸ்…. அந்த டைம் தான் ஐ கேம் டு காட்….நடிக்கிறத விட்டுடலாமான்னு தோணிச்சுதான்….பட் எனக்கு ஒரு சூப்பர் டீம் கிடச்சாங்க…எல்லாருக்குள்ளயும் பாவமில்லாத தரமான பொழுதுபோக்கு மக்களுக்கு கிடைக்கனும்னு ஒரு ஆசை….எனக்கு அது காட்ஸ் கால் ஃபார் மை லைஃப்னு  தெரிஞ்சுது…. ஐ ஸ்டார்டட் அவர் ப்ரொடக்க்ஷன் ஹவுஸ்…என் மூவிஸை பாரு தென் யூ டிசைட்….”

அவனது ஒரு திரைபடத்தை பார்த்த தயனி மனதில் நிம்மதியே!

 

சுகந்தினி அலுவலகம் விட்டு வெளியே வரும்பொழுதே தூரல் துவங்கியிருந்தது. வழக்கத்தைவிட விரைவாக கிளம்ப எண்ணி நேர்மாறாக வழக்கத்தைவிடவும் தாமதமாகி இருந்தது. ஆனாலும் இன்று அவள் கடைக்கு போய் அவள்பிறந்த நாளுக்காக உடை வாங்கியே ஆக வேண்டும். இல்லை எனில் அம்மா வருத்தபடுவார். நாளை பிறந்தநாள். தினம் நாளை நாளை என்று நாளை கடத்தி இன்றே செய்தாக வேண்டிய இன்று வந்துவிட்டிருந்தது.

வீட்டிற்கு செல்லும் வழியிலிருக்கும் அந்த கடைக்கு செல்லும் முடிவுடன் தன் ஃஸ்கூட்டியை விரட்டினாள். அரை குறையாய் ஆடை நனைத்தது மழை.

அந்த ஆடையகத்துக்குள் படியேறினால்……வாடிக்கையாளர் என யாருமின்றி வெறிச்சென்று இருந்தது அது. வாரத்தின் மத்தியில், இத்தனை மணிக்கு, இந்த மழையில் யார் வருவார்?

சேல்ஃஸ் கேர்ள்ஸ் குழுவாக இவளை கடந்து படி இறங்கி சென்றனர். திரும்பி போய் விடலாம் என நினைத்தால் கல்லாவிலிருந்தவர் “வாங்க மேடம்” என்றார்.

இரண்டு சேல்ஃஸ் பெண்கள் தலைகளும் எட்டி பார்த்தது. வேகமாக வாங்கிவிட்டு கிளம்பிவிட வேண்டும் என்றபடி உள்ளே சென்றாள்.

பெண்கள் பிரிவு முதல் மாடியில். சென்றதும் எடுத்து காண்பித்தனர் இரு பெண்கள்.

பார்த்தவற்றுள் வெண்மையும் லவண்டருமான அந்த சல்வார் மிகவும் பிடித்தது திறந்து பார்த்தால் ஒரு ஓரத்தில் சிறு டேமேஜ்.

வெறுப்பாய் வந்தது. பார்த்த மற்ற எதுவும் மனதுக்கு பிடிக்கவில்லை. மனம் முந்திய சல்வாரில் மூழ்கி இருந்ததே காரணம்.

“மேடம் இதே பீஃஸ் கீழே குடோன்ல இருக்கும்…இதே டிசைனில் வேற கலர்ஸ் கூட வந்திருக்குது….”

அந்த பெண் சொல்ல குடோன் செல்லும் வழியை அவசரமாக தேடியது இவளது கண்கள்.

“குணா! போய் மேடத்துக்கு காமி…எங்களுக்கு நேரமாச்சு…”

அந்த குணாவை தொடர்ந்து படி இறங்கினாள்.

அடுத்த பக்கம்