காற்றாக நான் வருவேன் 06 (3)

டுத்து இரண்டு கிலோ மீட்டர் நேராக செல்லும் இந்தசாலை பகுதியில் இருபுறமும் வெட்ட வெளியும் குட்டை செடிகளும்,சில மரங்களும்.

ஏரிக்கு அடுத்த நிலபகுதி.

அரசு நிலம் என்பதால் படோபடமாய் பங்களாக்களோ அமர்களமான அடுக்குமாடி குடி இருப்புகளோ எதுவும் எழும்பி இருக்கவில்லை. எரியும் தெருவிளக்கற்ற தனி சாலை. இருள் அரசனின் பிரஜைகளற்ற ராஜ தர்பார்.

நுழைந்த ஒரே வெளிச்சம் இருவரது வாகனங்களின் தனி சொத்து. அந்த வெளிச்சத்தில் தடி தடியாய் தெரிந்தன மழைகோடுகள்.

தவளையின் சத்தங்களும், சில வண்டுகளின் க்ரீச்சிடல்களும் திடுமென நின்றது.

உய்ய்ய்ய்ய்ய்……………………………என சுழல தொடங்கியது ஒரு காற்று. தொடர்ந்து அதே சத்தத்துடன் வீசி வீபரீத உணர்வை தந்தது.

சட்டென முழு இருட்டு. என்னவாயிற்று இருவரது வாகன விளக்குகளுக்கும்? பதற்றம் பற்றி கொண்டது சுகந்தினியை. முன்னால் இருப்பது குண்டா குழியா? எதிரில் ஏதாவது விளக்கற்ற வாகனம் வந்தால்? யாரவது நடந்து வந்து கொண்டிருந்தால்?

வண்டியை நிறுத்தினால் பின்னால் வரும் மஹிபனுக்கு இவள் நின்றுவிட்டது தெரியுமா? இல்லை அவன் வந்த வேகத்தில் இவளை இடித்து விடுவானா? ஓரத்தில் இருப்பது ஓடையா? மண்மேடா?

“சளப் …சளப்…..” தேங்கி இருந்த நீரில் யாரோ நடந்து வரும் சத்தம். சாலைக்கு இடபுறமிருந்து வந்தது. வருவது மனிதனாக இருக்க முடியாது. இத்தனை பெரிய அதிர்வும்…. ஒலியும்?…. யானையா???!!!

நொடிக்கும் குறைவான நேரத்தில் இவை அனைத்தையும் மொத்தமாக மறந்து போனாள் சுகந்தினி. சர்வமும் அடங்க ஸ்தம்பித்தாள்.

முன்னால் வந்து கொண்டிருந்தது அந்த உருவம். ஆணின் நிழல் முப்பரிமாணம் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அது. அத்தனை இருட்டிலும் அதை அவளால் பார்க்க முடிவது எப்படி?

அக ஒளி உள்ளவர்க்கு ஆவிகள் வகை தெரியும்.

உள்ளுக்குள் கேட்டது ஒரு மென் குழல் குரல்.

பயம் விலகியது.

‘கர்த்தர் உன்னோடு இருக்கும்போது, உனக்கு எதிராக நிற்பவன் யார்?’

தைரியம்.

ஆனால் மஹி???  பரிதவித்தாள்.

சுகா…….!!! அவன் அலறலாய் இவளை அழைப்பது கேட்டது. காரிலிருந்து இறங்கிவிட்டான் போலும். இவளும் ஸ்கூட்டியை நிறுத்தி இருக்கிறாள் என்பதே இப்போதுதான் உறைத்தது.

நரக இருள்.

குரல் வந்த திசையை குறிவைத்து பாய்ந்தாள். ‘ஜீசஸ் மஹிய காப்பாத்துங்க ப்ளீஸ்!!’

இரெண்டெட்டில் அவனிடம் சிக்கினாள். அவனும் இவளை நோக்கி ஓடி வந்திருக்கிறான்.

ஆனால்…..அந்த உருவமும் இவர்களுக்கு அடுத்ததாய் தோன்றி இருந்தது.

மஹிபனை மறைத்தபடி நின்றாள் அவள்.

அவள் கழுத்தை நோக்கி நொடிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் நீண்டது அதன் கை. இவளை பார்த்து அது பயபடவில்லை ஏன்? இப்போது என்ன செய்யவேண்டும்? மீண்டும் மரணிக்கும் நேரமா இது?

பளிச்சென்று ஒரு மின்னல். வந்த மின்னல் மறையாமல் நிலைத்தது. அது மின்னல்ல என்பது அதன் பின்புதான் புரிந்தது.

மின்னல் நிற முழுமனிதன்.

முடி முதல் அடி வரை மின்னல் வண்ணன்.

மழைகுரலில் பேசினான்.

காலங்களுக்கு முந்தியவரை கண்டு வந்ததால் மட்டுமே இத் தீங்கு உன்னை தொடாது என எண்ணாதே!! இதை கையாள கற்றுதர உத்தரவு பெற்று வந்தேன்.”

சொன்ன அத்தேவ தூதன் அவள் அருகிலிருந்த ஒரு வெண்ணிற சட்டத்தை எடுத்தான். அது ஏதோ சன்னலின் கம்பி சட்டம் போலிருந்தது. அவளருகில் அது இருந்தது அதுவரை அவளுக்கு தெரியவே இல்லை.

அச்சட்டத்தை அவன் அந்நிழல் மனிதனை பார்த்து நீட்ட அது சங்கிலியாய் மாறி அவனை பிணைத்தது. அவ்வுருவம் கட்டபட்டு சாலை ஓரத்தில் போய் விழுந்து சுருண்டு, சுருங்கி மறைந்து போனது.

அடுத்த கணம் தூதனும் பார்வைக்கு படவில்லை. ஆனாலும் இருள் இல்லை. சாலையில் வெளிச்ச கற்றை. உபயம் இருவரது வாகன விளக்குகளும்.

தொடரும்..