காற்றாக நான் வருவேன் 06 (2)

“என்னாச்சு சிஸ்” ப்ரியத்தம்தான் கேட்டான்

“எனக்கு அவர்ட்ட பேசணும்…” கண்ணிலிருந்து நீர் கர கரவென வழிந்தது அவளுக்கு. சுயஇரக்கம்.

“நீங்க விழிக்கவும் பேச சொன்னான்” சொல்லியபடியே மொபைலை எடுத்து குடைந்த ப்ரியத்தம் அவளிடமாக அதை நீட்டினான்.

“அபிப்பா…..” அழுகைதான் வந்தது. “உடனே வாங்க நீங்க…எனக்கு பயமா இருக்குது…”

“கிளம்பிட்டேன் தயூ, வேலை முடியபோகுது….மார்னிங் நீ விழிக்கிறப்ப உன் பக்கத்தில இருப்பேன்…., இப்போ உனக்கு என்ன வேணும்னாலும் ப்ரிட்டயும், சுஜநிட்டயும் சொல்லுடா…நல்லா பார்த்துபாங்க…..”

“எனக்கு நீங்கதான் வேணும்”

“…………..”   “ வந்துட்டேன் தயூ”     “ இப்போ ரெஸ்ட் எடு, நாளைக்கு பார்போம்”

இயல்புக்கு மீறி தூக்கம் வர தூங்க ஆரம்பித்தாள் தயனி.

இவள் அலறலில் உள்ளே வந்த நர்ஸ் இறங்கி கொண்டிருந்த டிரிப்ஸில் ஏற்றிய மருந்தின் விளைவு.

அனைவரும் அறையை விட்டு வெளியேறுவது தூக்கத்தில் புரிந்தது தயனிக்கு.

“என்னங்க இந்த பொண்ணு….அபி அண்ணா சம்பாதிச்ச அத்தனை நல்லபேரையும் ஒரே நாள்ல கெடுத்துருவா போல….லூசு மாதிரி…..இங்க வந்து கத்திகிட்டு…பாவம் அண்ணா இவ்வளவு தேடி இப்படி ஒரு பொண்ணையா பிடிப்பாங்க….கவனிச்சீங்களா நீங்க…..வீட்டிலயும் அவ இருந்த ரூம்ல ஒரே புகை வாட, இங்க சாம்பல் ஸ்மெல்….என்ன பண்றா இந்தபொண்ணு…..அவங்க நாட்ல லேடீஸ் ஸ்மோக் பண்ணுவாங்களோ….ஆனாலும் இப்படியா நாறும் அது….”

சுஜநிஷாவின் முதல் வாக்கியங்களில் மனம் வலித்து அழுகைதான் வந்தது தயனிக்கு. ஆனால் இறுதி வாக்கியங்களில் வந்த பயத்தையும் தாண்டி ஒருவகை நிம்மதி. தனக்கு மனநோயோ என பயபட தேவையில்லை. வருவது கனவல்ல…நிஜம். இல்லையெனில் இந்த ஸ்மெல் அடுத்தவங்களுக்கு எப்படி தெரியும்?

ஆனால்

இது என்ன?????? ஏன்????பேய் நிஜமா????அபி அப்பா செத்துட்டாரா?????எப்படி????

தூக்கத்திற்குள் தொலைந்தாள்.

 

 

லுவலக வாசலைவிட்டு வெளியே வரும்போதே பார்த்துவிட்டாள் சுகந்தினி அவனை.

அவனை பார்க்காதவள் போல் டூவீலர் பார்க்கிங்கை நோக்கி நடந்தாள். பார்வையை பிடிவாதமாக தூரத்தில் தெரிந்த தன் பிங்க் நிற ஸ்கூட்டியின் மீது மாத்திரம் நிறுத்தி இருந்தாள்.

அவள் ஸ்கூட்டியை தொட்ட நேரம் தொட்ட கையை சற்று அழுத்தமாக பிடித்தான் அவன் மஹிபன்.

“விடுங்க மஹி….இது என்ன பழக்கம்….” சிறுகுரலில் சீறியபடி கையை உருவ முயன்றாள் சுகந்தினி.

“பதில் சொல்லு விட்டுடுறேன்…” கைபிடியில் காண்பித்ததைவிட அழுத்தம் அவன் முகத்திலும் குரலிலும்.

“வேண்டாம்னா விடுங்களேன்…அப்புறம் என்ன…”

“கல்யாணத்துக்கு சரின்னு சொல்றவரைக்கும் உன் பக்க காரணத்தை தெரிஞ்சுக்கிற உரிமை எனக்கு கிடையாது….ஆனா எப்ப சரின்னு சொல்லிட்டியோ….அப்புறம் அதை பிரேக் பண்றன்னா காரணம் கண்டிப்பா சொல்லனும்…”

“விடுங்க….மஹி”

“மொபைல்ல டிரை பண்ணிட்டேன் ஆயிரம் தடவைக்கு மேல…..வீட்டுக்கு வந்தா…..கதவை திறக்க கூட இல்ல…..நான் என்ன செய்தேன்னு இப்படி நாய துரத்துற மாதிரி….என்ன துரத்துற………”

மழைகண்களில் செவ்வரி மின்னல்கள் தோன்ற முழு அளவுக்கும் இமை விரித்து அவன் முகம் பார்த்தாள். யாசகம் என்பது பார்வை மொழி.

அவளை பிடித்திருந்த கைகளை விட்டுவிட்டான் மஹிபன்.

“இது ஒன்னு….குறி பார்த்து கரெக்டா அடி…..போ……போகிறவரைக்கும் போ….ஆனா ஒன்னு நீ எங்க போனாலும் நானும் உன் பின்னாலதான் வருவேன்……பதில் சொல்ற வரைக்கும் அது நைட் முழுசுனாலும் உன் வாசல்லதான் நிப்பேன்…”

சொல்லிய மஹிபன் வேக வேகமாக சென்று தன் ஃபார்சுனரை ஸ்டார்ட் செய்தான்.

சுகந்தினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவள் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு நகர, அவளை பின் தொடர்ந்தான் தன் வாகனத்தில் மஹிபன்.

நின்று பேசலாம் என்றால் எப்படி என்னவென்று சொல்லவென தெரியவில்லை சுகந்தினிக்கு. பைத்தியம் என்பானோ?!

எதை நினைத்தோ அழத்தொடங்கியது மழை.

வேகமாக வீடு போய் சேர வேண்டும். வண்டியை விரட்ட தொடங்கினாள்.

இருட்டும், குளிரும், எதிர்பாராத மழையும், தொப்பலான உடையும், கஷ்டபடும் மனதும், ஆள் நடமாட்டமற்ற அந்த சாலையும்….இருந்த ஒரே சுகம்??? தொடர்ந்து வரும் மஹிபன்தான்

.அடுத்த பக்கம்