காற்றாக நான் வருவேன் 5

ரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தயனிக்கு சட்டென விழிப்பு வந்தது. தூக்க கலக்கமற்ற முழு விழிப்பு.

ஷ்……………………ஷ்……………….

ஷ்………………………..ஷ்…………..

தரையில் துணி இழுபடும் சத்தம்.

அது மெல்ல அதிகரிக்க உடை தரையில் இழுபட யாரோ நடை பயிலும் சத்தம் அது என புரிந்தது.

மற்றபடி செவிகளில் மாயான அமைதி.

உடல் இறுகியது.

அத்தனை திசுக்களும் அலர்ட் நிலை.

அடி வயிற்றில் இருந்து மேலெழும்பியது ஒரு விபரீத உணர்வு.

இதயத்தை தவிர எதுவும் அசையவில்லை. உடலுக்குள் பரவியது ஒரு சூடு.

காற்றில் மெல்ல கலந்து வந்தது அந்த நறுமணம். அடி மனதில் எமிலி அக்காவின் ஞாபகம்.

‘இறந்து பத்து வருடம் இருக்குமா?’

உடல் உள்ளம் அத்தனையிலும் பரவியது அந்த எமிலியின் அருகாமை.

அறை முழுவதும் பரவி இருப்பது எமிலி.

இவள் சுவாசத்திலும் அந்த தொடுகை.

கற்றை குளிர் காற்று முகம் தொட்டு சுருண்டு புகை போல் இவளுக்கு இடபக்கம் மையம் கொள்வதாய் ஒரு மனகாட்சி.

பார்க்காதே என உள்மனம் ஓலமிட்டாலும் வெளி மனதில் ஒரு பயமற்ற தூண்டல். கருவிழிகளை மட்டும் உருட்டி இடபுறம் பார்த்தாள்.

காற்றாய், திரவமாய் ஜடப்பொருளாய் விரைத்த வெளிர் சடலமாய் எமிலி!!!!

“வேண்டாம்……வேண்டாம் பப்பு…..இது வேண்டாம்….”

அழுகையும் கெஞ்சலுமாய் ஆரம்பித்த குரல்.

அவளது அன்பான எமிலி அக்கா……இவளது தாய் இறந்த பின்பு இவளை கண்ணுக்கு கண்ணாய் வைத்து பாதுகாத்த காப்பாளர்…..பாச உணர்வு இவளுள்.??????!!!!!!

இவளை காப்பாற்ற முயன்ற முயற்சியில் ஜெயித்து அதன் விளைவாக தான் வாகன சக்கரத்தில் சிக்கி சின்னா பின்னமாகிய எமிலி அக்கா……பயங்கரமாய் அக் கோர காட்சி கண்ணில் வந்தது.

8 வயதில் பார்த்ததானாலும், இன்னும் இவ்வளவு தெளிவாய், சித்திரமாய் உள்மனதில் இருக்கின்றதா?

அந்த விபத்தில்…அழகு எமிலி அலங்கோல எமிலியாகி கோரமாக……மனதில் தெரிந்தபடியே கண் முன் மாறிக்கொண்டிருந்தாள் எமிலி.

அழகு மெழுகு முகம் சிதைந்து எலும்பு துருத்த, புழுவரித்த அழுகிய பிண்டமாய்……குப்பென்ற துர் நாற்றம்.

வீல் என அலற வேண்டும், அபிஷேக்கை அழைக்க வேண்டும்….மூளைக்கு மட்டும் தான் புரிகின்றது. உடல் இவளுக்கு உடன் படவில்லை.

“க…கஷ்…..ட்டஅ..அ….பட்டு………..உ….உனக்காக…..அ….. வ…வந்தேன்……ப….ப…ப்பு……போ……றேன்…..ப்…ப..ப்பு………..அ…அ….து.  வே….வேண்…டா…..ஆ………..”

மணல் சுருளாய் மாறி, காற்று கற்றையாகி சுருண்டு சுவர் கடந்தாள் அந்த எமிலி.

வாயும் வார்த்தையும் இவள் வசப்பட்டபோது மெத்தை வரை நனைத்திருந்தது வியர்வை.

அபீ……..அபிப்பா…..”அலறியபடி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவனை அப்பிப் பிடித்தாள்.

“என்னடா……என்னாச்சுடா….?” அடுத்த கணம் அரவணைத்திருந்த அபிஷேக்கின் குரல் அவளை ஆசுவாசபடுத்தியது.

“கனவு கண்டியா அம்மு?”

கனவா அது? யோசித்தாள் தயனி. இருக்கும். என்ன ஒரு பயங்கரமான உணர்வு.

“ம்,” முனங்கியவள் அவன் மார்பில் இன்னுமாய் புதைந்தாள். பார்த்த பயங்கரம் மனம் விலகியது. ஒரு நிசப்தம் மனதில்.

அவளுக்காக ஜெபித்தவனின் அரவணைப்பில் தூங்கிப்போனாள் மனையாள்.

று நாள் தூங்கி விழிக்கும்போது இயல்பாகி இருந்தாள் இளையவள். வழக்கம் போல் அவளுக்கு முன்பாக எழும்பி இருந்த அபிஷேக் அவள் பார்வை படும் தூரத்தில் வாட்ரோபிலிருந்து எதையோ எடுத்து கொண்டிருந்தான்.

அடுத்த பக்கம்