காற்றாக நான் வருவேன் 3

தோட்டாக்களின் சத்தம் கேட்டதும், தயனியை இழுக்காத குறையாக அழைத்துசென்று, அடுத்த அறையின் அட்டாச்ட் பாத்ரூமின் ஒரு சுவர் முழுவதும் வியாப்பித்திருந்த கண்ணாடியை திறந்து, உள்ளே தெரிந்த சிறு அறையுள் தள்ளிய அபிஷேக், “சத்தம் வரகூடாது தயனி” என எச்சரித்தான்.

“ப்ளீஸ் நீங்களும் வாங்க” கெஞ்சினாள் தயனி.

“நம்ம வீடு ,உள்பக்கமா பூட்டியிருக்குது தயனிமா, வந்திருக்கவங்க எப்படியும் உள்ள வந்திருவாங்க, உள்ள பூட்டியிரூக்கிற வீட்டில ஒருத்தரும் இல்லனு சந்தேகம் வந்து தேடுனா நீயும் கூட மாட்டிகிடுவ தயனி”

காரணத்தோடு மறுத்தவன் கதவடைத்துவிட்டு போய்விட்டான். அடுத்தடுத்து இருந்த அறைகளின் அட்டாச்டு பாத்ரூம்களுக்கு இடையில் இருந்தது இந்த அறை. கண்ணாடியாய் தோன்றும் வாசலமைப்பு. சந்தேகம் வரமுடியாதபடியான பாதுகப்பான அறைதான்.

தயனி அபிஷேக்கிற்காக ஜெபிக்க ஆரம்பித்தாள்.

தோட்டாக்களின் சத்தம் இன்னுமாய் அதிகரித்தது. கைகளால் தன் வாயை மூடிக்கொண்டு மனதால் மன்றாடினாள்.

இரண்டாயிரம் வருடம் போல் தோன்றிய 20 நிமிடம் கழித்துவந்து கதவை திறந்தான் அபிஷேக்.

”தேங்க்ஃஸ் தயனி ஃபார் யுவர் ப்ரேயர்” என்றபடி.

களைத்திருந்தான் அவன். ஆனால் காயம் ஏதும் இல்லை. கண்களால் அவனை ஆராய தொடங்கியவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

“ஏன் அபி, என்னை இப்படி லவ் பண்றீங்க?…… எப்பவும் உங்க உயிர பணயம் வச்சு காப்பாத்துறீங்க?……….”

அவள் பிடி இறுகியது.

“என் அம்மா அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்,…… ஆனால் அவங்களை விட கூட நீங்க என்னை அதிகமா…………..”

குலுங்கி கொண்டிருந்தவள் தலையை மெல்ல வருடினான் “தயனி, தயனிமா….ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்…ரொம்பவும் முக்கியமான விஷயம் சொல்லனும்டா….”

சட்டென அழுகை நின்றது.

“நீ..நீங்க ஏதும் ம..மர்டர்……..?” ஆவி ஆத்துமா அரள கேட்டாள்.

“ஹேய்…..விபரீதமா கற்பனை செய்றத முதல்ல நிறுத்து…ஏதோ கேங்க் ஃபைட் போல, முதல்ல வந்த ரெண்டுபேரை துரத்திட்டு அடுத்த ரெண்டு பேர் வந்தாங்க…….நாலு பேரும் ஒருத்தர ஒருத்தர் சுட்டுகிட்டாங்க…..இப்ப பிரச்சனை அது இல்ல….போலிஸ் வரும்…..இங்குள்ள லாஃஸ் தெரியும்தானே?…..”

“ஐயோ” என்றபடி தன் வாயை பொத்திக்கொண்டாள் தயனி.

“என்ன செய்யலாம்?” அபிஷேக் அவள் முகத்தை பார்த்தான். சிந்திக்க பெரிதாக நேரமில்லை. அவர்களை துரத்தியபடியோ, துப்புகிடைத்தோ போலிஃஸ் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

“உனக்கு சம்மதம்னா நாம மேரேஜ் செய்துகிடலாமா தயனிமா?” அவன் முகத்தில் தெரிந்தது உண்மை.

மறுகணம் சம்மதித்தாள் தயனி.

இருவருமாக ஒருவர் கரம் பற்றி மற்றவர் திருமண உடன்படிக்கை எடுத்தனர். அவசரமாக இருவரது பெர்த் ஐ டி வழியாக திருமணத்தை பதிந்தான் அபிஷேக்.

இனி நாட்டின் சட்டபடி அனைத்து தகவல்களிலும் இருவரும் கணவன் மனைவியாக அறியபடுவர்.

இருவருக்கும் புதிய பாஃஸ்போர்ட் டவுன்லோட் செய்தான் அவன். இவர்களது திருமணம் அவைகளில் பதிவாகியிருந்தது.

காவல் துறை இன்னும் வந்திருக்கவில்லை. அபிஷேக் அவர்களுக்கு தகவல் கொடுத்தான்.

ஒரு கடத்தல் கூட்டமது.  தனிமையான பெரிய வீடு இவனது. எப்பொழுதாவது மட்டுமே வந்து செல்லும் ஆட்கள். இதனால் தலைமறைவாக இந்த வீட்டை தெரிந்தெடுத்திருப்பார்கள் போலும்.

அபிஷேக்கின் வரவு அவர்கள் அறியாதது போலும். அவர்கள் வந்ததோ அவசரமாய். ஏனெனில் கூட்டத்திற்குள் சண்டை.

அதனால் வீட்டில் உள்ளிருப்பவரை போட்டு தள்ளிவிட்டு ஒளிந்து கொள்ளலாம் என எண்ணியிருக்க வேண்டும். அதற்குள் அவர்களது மறு பிரிவும் தொடர்ந்து  வந்து துவம்சம். விளைவு நான்கு சடலம்.

யுவ்ரேவ் தஜுவின் மகள் தயனி பாஹியா, மற்றும் அன்னாரது கணவருக்கு உரிய மரியாதையுடன் இந்த கதையை சொல்லிய காவல்துறை, அந்த கயவர்களின் விரைத்திருந்த சட;லங்களை அள்ளிக் கொண்டு போனது.

அத்தனை களேபரமும் முடிந்து மீண்டும் தனிமைக்குள் தயனியுடன் நின்றபோது அபிஷேக்கிற்கு மலைப்பாக இருந்தது. இவன் இப்பொழுது திருமணமானவன். இவன் உயிராய் நேசிக்க ஒரு மனைவி இருக்கிறாள்.

அடுத்த பக்கம்