காற்றாக நான் வருவேன் 2 (2)

த்தையின் வீடும் படு ஆடம்பரமாக பணத்தோட்டமாக இருந்தது.

மஞ்சுளா என்ற ஒரு தமிழ் பெண் இவளுக்கென உதவியாளராக நியமிக்கபட்டிருந்தாள். மற்றபடி பகலும் இரவும் தனிமை,தனிமையை தவிர வேறு ஏதுமில்லை தயனிக்கு.

அத்தையம்மாவையோ கண்ணால் காண கூட முடியவில்லை. அவரது மகனை பற்றி எந்த தகவலும் இல்லை. முதலில் தந்தையின் மரணத்திற்காக துக்கபட்டவள், மெல்ல தன் சூழலை ஆராய தொடங்கினாள்.

மனம் ஆறுதலுக்காக அன்புக்காக, துணைக்காக ஏங்கியது. வீடு ஏதோ சிறைகூடம் போலாகிவிட்டதே அதற்கு காரணம். ஆனால் அன்பிருந்தால் பாலைவனம் பரலோகமாக முடியும்.

கணவன் தான் அவளுக்கு இருந்த ஒரே எதிர்காலம் என மெல்ல புரிய தொடங்கியது தனித்திருந்த தயனிக்கு. மஞ்சுளாவிடம் தன் கணவனை பற்றி விசாரிக்க முயன்றாள். அன்றே அத்தை வந்து நின்றார்.

“இது கொஞ்சமும் திட்டமிடாத எதிர்பாராத கல்யாணம். எல்லாத்துக்கும் ஒரு நேரம் முறை இருக்குது. எதை எப்பொழுது எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும். ஒழுக்கமா அடங்கியிரு” என்றுவிட்டு போனார் அத்தையம்மா.

ஆனாலும் சில நாட்களில் ஒரு நகை பெட்டியை வந்து தந்தார். “என் மகன் உனக்கென இதை கொடுத்தான். மிகவும் பழங்கால நகை, விலை மதிப்பில்லாதது. பார்க்க பேசதான் வழியில்லை இதையாவது வைத்துகொள். இதை போல ஏதாவது அவனுக்கு கொடுக்க நகை இருந்தால் கொடு, நானே அவனிடம் கொடுக்கிறேன்” என்றார்.

நகை யாருக்கு வேணும்? இதற்கு பதில் அவன் கடிதமோ, அல்லது அவனது புகைபடமோ அனுப்பியிருந்தால் நல்லாயிருக்குமே என்றுதான் இவள் நினைத்தது.

மஞ்சுளாதான் நகைக்குள் ஏதாவது இருக்கும். உங்கள் அத்தை நகை என்றால் மட்டும் தான் உன்னிடம் தருவார் என அவர் மகனுக்கு தெரிந்திருக்கும் என அறிவுறுத்த, நகையை குடைந்தால் உள்ளே சுருட்டிய சிறுகடிதம்.

இவளை தன்னோடு அழைத்து போக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவன் செய்து கொண்டிருப்பதாகவும், அவன் அம்மா சம்மதித்தாலும் சம்மாதிக்காவிட்டாலும் உடனே வந்து அவளை கையோடு அழைத்து செல்ல விரும்புவதாகவும், இந்த ஏற்பாட்டுக்கு இவள் சம்மதம் தேவையென்றும் குறிப்பிட்டிருந்தான்.

அப்படி அவளுக்கு சம்மதமெனில் இதே போல் அவனுக்கு ஒரு விலை உயர்வான பரிசில் கடிதத்தை மறைத்து வைத்து அவன் தாயாரிடம் கொடுத்தனுப்ப சொல்லியிருந்தான்.

அவனுக்கு எதை கொடுக்க? ஆணுக்கு எந்த நகை கொடுக்க? தன் மாமியாரிடம் அனுமதி பெற்று தன் பிறந்த வீட்டிற்கான பாங்க் லாக்கரிலிருந்து நகை எடுத்துவர விரும்பினாள் தயனி. அப்பாவின் தங்க பேனா இந்த சூழலில் உதவும்.

உடனடியாக சம்மதித்த அத்தையும், “அனைத்து நகைகளையும் எடுத்து வந்து விடு, மீண்டும் மீண்டும் அலைய முடியாது” என்க, இவள் லாக்கர் காலியாகி மாமியார் வீட்டில் குடியேறின நகைகள்.

தந்தையின் தங்க பேனாக்குள் மறைத்துவைத்து கடிதம் கணவனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நான்காம் நாள் இவள் அத்தைகாரி இவளது அனைத்து சொத்துகளையும் மகன் பெயருக்கு பதிவு செய்து தரும்படி இவளிடம் வந்து நின்றாள்.

இந்த நாட்டில் எல்லாருக்கும் பெர்த் ஐ.டி எண்ணும்,  ஓ.சி என்கிற ஓபன் கோடும் உண்டு. ஓ.சி என்பது பாஸ்வஅர்ட். ரகசியமனது. அந்த நபருக்கு மட்டுமே அறிவிக்கபடுவது. குழந்தையின் பதினைந்து வயது வரை பெற்றோருக்கு அறிவிக்கபடும் ஓ.சி, அதன் பின் உரிய நபருக்கு மட்டுமே அறிவிக்க படும்.

அந்த ஓ.சி மூலம் பெர்த் ஐ டிக்குள் நுழைந்தால் போதும், அந்த நபர் தன் சொத்துகளை வாங்க விற்க,திருமணம் செய்ய விவாகரத்து அறிவிக்க, தொலைந்த பாஃஸ்போர்ட்டை நிறுத்த, புதிய பாஃஸ்போர்ட் பதிவிரக்கம் செய்ய என எல்லாம் செய்ய முடியும்.

இந்த முறையில் தான் தயனியின் திருமாணமே பதிவானது. அதன் மூலம் அவள் சொத்துகளை தன் மகன் பெயருக்கு மாற்ற சொன்னார் அந்த அத்தை.

அதற்கு வாங்குபவரும் தன் ஐ டி வழியாக சம்மதம் அனுப்ப வேண்டும். அவளது கணவனும் அனுப்பி இருந்தான்.

மனம் உடைந்து போனாள் இவள்.

மறுத்தாள் தயனி. பட்டினி போட்டாள் அத்தை. ஆறு நாளைக்கு மேல் பொறுமை இழந்தாள் அத்தைகாரி. சவுக்கால் இவள் முதுகை சிதைத்தாள். மசியவில்லை தயனி.

மொத்த வீட்டிலும் அத்தையையும் இவளையும் தவிர யாருமில்லை. இவளுக்கு உதவிக்கு ஒருவருமில்லை.

தொடர்ந்தது போராட்டம். இறுதியில் அரை மயக்கத்தில் இருந்தவளின் உடைகளையும் பறித்தாள் அந்த அத்தை.

உடுத்தும் உடை சொத்தை விட முக்கியமானதாயிற்றே! இவள் சொத்துக்கள் அவனுக்கு மாறின.

பதிலாக ஒரு பாலியெஸ்டர் புர்கா மாத்திரம் தரப்பட்டது. உணவு தண்ணீர் ம்கூம். அதிலிருந்து மூன்றாவது நாள் அவள் கணவன் அவளை விவாகரத்து செய்திருப்பது அறிவிக்கபட்டது. அங்கு அது சாத்தியம். அன்று இரவு தயனி பாலைவனத்தில் வீசப்பட்டாள்.

ஒரு ஆணிடம் சொல்ல முடிந்ததை கோர்வையாக தயனி அபிஷேக்கிடம் சொல்லி முடித்தாள்.

அடுத்த பக்கம்