காற்றாக நான் வருவேன் 1 (2)

அவன் படித்திருந்த மருத்துவம் அவள் இறந்து கொண்டிருப்பதை அறிதியிட்டு கூறியது. மனமிளக யோசித்தான். ‘என்ன செய்வது இப்பொழுது? ஒருவேளை கொள்ளையடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறதா?’ காரை முன்னும் பின்னுமாக செலுத்தி நோட்டமிட்டான். ஒருவழியாக அங்கு வேறு யாருமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர், கீழே இறங்கினான். அந்த பெண்ணை வாரி எடுத்து பின் இருக்கையில் சாய்த்து படுக்க வைத்தவன், உடனடியாக காரை கிளப்பிகொண்டு விரைந்தான்.

அவளை கையில் தூக்கிய நொடி தெரிந்துவிட்டது அவளை கொன்று கொண்டிருப்பது குளிர் மட்டுமல்ல என. அவள் அணிந்திருந்த ஒரே ஆடையாண அந்த கறுப்பு புர்கா சிதைக்கபட்ட அவள் முதுகு தோலில் ஒட்டி ரத்தமும் சதையுமாகி இருந்தது.

உடனடி மருத்துவ உதவி தேவை அவளுக்கு. என்ன செய்வது?

ரு பெண் உரிய துணையின்றி தனியாக வெளியே வருவது கடும் தண்டனைக்குரிய குற்றம் இங்கு. ஒருவேளை இவனோடு அவள் வந்ததாக புரிந்து கொண்டார்கள் எனில் இருவருக்கும் ஆபத்து. திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனித்து வெளியே செல்வது அதுவும் இந்த இரவு நேரத்தில், விபசார குற்றமாக கருதப்படும் இந்த நாட்டில். மரண தண்டணைதான். அவளுக்கு திருமணமாகி இருந்தால் இன்னும் மோசம். அது வேசிதனமாக கருதப்பட்டு நடு ரோட்டில் மரண தண்டணை நிறைவேற்றபடும். இருவரையும் கணவன் மனைவியாக கண்பார்களெனில் மனைவியை தாக்கிய குற்றத்திற்காக இவன் கைது செய்யபடுவான்.

பார்க்கின்ற யாருமே இவளை இவன் மனைவி என நம்ப வாய்ப்புகள் ஏராளம். காரணம் இருவரும் இந்திய உடம்புக்கு சொந்தக்காரர்கள். ஆபத்தில் மாட்டிகொள்ள அநேக வாய்ப்புகள் அவனுக்கு இருந்தாலும் அவளை விட்டுவிட்டு வரும் எண்ணமே அவனுக்கு வரவில்லை.

பால் வழியும் அவள் குழந்தை முகம் அவள் தண்டிக்கபட வேண்டிய குற்றவாளியல்ல, அநீதி இழைக்கபட்ட நிரபிராதி என்றது. காரை நேராக தான் பிறந்த வீட்டிற்கு செலுத்தினான்.

அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி, மருத்துவம் செய்து, ஒரு படுக்கை அறையில் அவளை படுக்க செய்து அருகில் திவாணை இழுத்துபோட்டு அதில் அவன் தூங்க சென்ற நேரம், பொழுது விடிய துவங்கியிருந்தது.

யனிக்கு முழுதாக நினைவு திரும்பியபோது அவளுக்கு  சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் பாலை வனத்தில் விழுந்து கிடந்தது வரை ஞாபகம் வர அவளுக்கு பலத்த ஆச்சர்யம். எப்படி அவள் இன்னும்?…….

மெல்ல சுற்றும், முற்றும் பார்த்தால் ஏதோ ஒரு வீட்டின் ஏதோ ஒரு அறை. அப்பொழுதுதான் அறையின் உள்ளே நுழைந்த அவனை பார்த்தாள்.

எதையோ யோசித்த வண்ணம் நுழைந்தவன் இவள் விழித்திருப்பதை கண்டவுடன் தன் முகத்தில் மென் புன்னகையையும் சேர்த்துக் கொண்டான்.

“ஹாய் ஐ’ம் அபிஷேக், ஐ’வ் கிவ்வன் யூ பெயின்கில்லர்ஸ், ஹட் டு புட் ஃப்யூ ஸ்டிச்சஸ் டூ, ஹவ் இஸ் த பெய்ன்? ஹவ் ஆர் யு நவ்?” அவள் அச்சூழலை புரிந்து கொள்ளவேண்டும் என்ற அக்கறை அக் கேள்வியில் தலை தூக்கி நின்றது. அதையும் மிஞ்சி நின்றது கரிசனை.

ஒரு ஆண் உள்ளே நுழைவதை கண்டதும் பதறியவள் அவன் மருத்துவ வார்த்தைகளில் அவன் மருத்துவன் என உணர்ந்து சற்று ஆறுதல் கொண்டாலும், அதிகமாக குழம்பினாள்.

“இ…இது ஹாஸ்பிட்டலா? எதுக்கு ஜென் டாக்டர்? லேடி டாக்டர்தானே………..…….” கேள்வியாய் அவனை பார்த்தாள்.

அவன் புன்னகை முழுவதுமாக மலர்ந்தது. அது வெகு அழகாக இருந்தது அவள் கண்களுக்கு. மனதிற்கோ பயத்தை தந்தது.

“நீங்களும் தமிழா?” அவனது ஆனந்த கேள்வியில்தான் உறைத்தது அவளுக்கு, தான் தமிழில் பேசியிருப்பதே!

“ம். நீங்களுமா?” கேட்டாகனுமே என்பதற்காக கேட்க்கபட்ட கேள்வி அது.

“ஆமாம், அடியேன் பிறவித்தமிழன், அபிஷேக் என்பது திருநாமம், தங்களுடைய முழு நாமத்தையும் தெரியபடுத்தினால் உதவியாக இருக்கும்….”

“த….தயனி பாஹியா” சொன்னவள் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள். ‘இவன் தன்னை இனம் காண்பானா?’

அவள் முகத்தில் ஒரு கடினத்தன்மை பரவுவதை பார்த்த அபிஷேக் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என உணர்ந்தான்.

ஏனோ ‘இந்த பொண்ணுக்கு ஓ.கேன்னா எனக்கும் ஓ.கேன்னு, இவன் வரன் பார்த்த எந்த பெண்ணும் இவனை விரும்பியதில்லை’ என்பது ஞாபகம் வந்தது அவனுக்கு.  ஒரு வித உற்சாகம் மனதில். இது பெண் பார்க்கும் படலமா? அப்படியெனில், அந்தவகையில் இவன் முக முகமாய் பார்க்கும் முதல் பெண் இவள்தான். இதுவரை அனைத்தும் புகை படத்துடன் நின்று போயிருந்ததே!.

“தயனிக்கு அபிஷேக்கை பிடிக்கலை” சாதாரணமாக சொல்லியபடி அவளருகில் சென்று அவளுக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸை பார்த்தான்.

“ப…பயமா இருக்குது ….உங்கள…..” அப்பொழுது அவள் கண்கள் அவன் கையில் சரிந்து கொண்டிருந்த பிரேஸ்லெட்டில் தொங்கிக்கொண்டிருந்த சிறு சிலுவையின் மேல் சென்று நிலைகுத்தியது.

“நீங்க எனக்கு சொந்தம்” என்றாள்.

அவள் சொல்ல வராத அர்த்தத்தை எண்ணி தனக்குள் சிரித்துகொண்டவன்,

“ம், அப்படித்தான் இருக்கும், நானும் கேள்விபட்டிருக்கேன். பூர்விக குடிகள் தவிர இந்த நாட்டில ஒரே ஒரு அந்நிய  குடும்பத்துக்கு அதுவும் தமிழ் குடும்பத்துக்கு மட்டும்தான் குடியுரிமை ஏதோ சில தலை முறைக்கு முன்னால குடுத்தாங்களாம். அவங்கள வச்சு இங்க வந்த அவங்களோட சொந்தக்காரங்கன்னு சில நூறு பேர் இருப்பாங்க தமிழ்காரங்க. அவங்க மட்டும்தான் இங்க கிறிஸ்டியன்ஸ். அவங்களுமே இந்திய தமிழ்நாட்டில இருந்து கல்யாணம் செய்து இங்க பொண்னையோ மாப்பிள்ளயையோ கூட்டி வந்து குடியேத்தனும்னா, இன்னும் அந்த முத குடும்பம் அனுமதி வேணும்ன்னு வீட்டில சொல்லியிருக்காங்க. அந்தவகையில் நாம சொந்தம்தான்.” அவளை நேருக்கு நேராக பார்த்தான்.

அடுத்த பக்கம்