கர்வம் அழிந்ததடி 4 (4)

தோட்டத்து அழகில் சொக்கிப் போய் நின்ற அக்ஷராவின் புறம் பார்வை போக, “அம்மா உன்னோட பேத்திம்மா” என்று சத்தியன் சொன்னதும் “அச்சரா” என்று மீனாவின் குரலில் திரும்பிய அக்ஷரா கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்ட தன்னைப் பார்த்து இருகை நீட்டி நிற்கும் அந்த முதியவளின் கையணைப்பிற்குள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டாள்.

 

“எந்தாயீ!!! இந்த ஆச்சிய பார்க்க வந்தீராம்மா!! காட்டுக்குப் போக காத்திருக்கேன் நான். இப்பவாது வரனும் தோணுச்சே ராசாத்தி. அடி என் கட்டி வெல்லமே!! ராசகுமாரியாட்டம் இருக்கியே. இந்த ஊர்கண்ணு பட்டுரும் தாயீ உனக்கு. எலே மருது!! நம்ம கனகத்தை வரச்சொல்லுப்போய். எந்தங்கத்துக்கு திருஷ்டி சுத்தட்டும்.” பரபரத்தாள்.

 

இந்த வயதிலும் எவரது துணையுமின்றி திடகாத்திரமாக இருக்கும் ராஜமீனா அக்ஷராவிற்கு வியப்பை அளித்தாள். அவளுக்கு ஆச்சியின் இந்தப் பாசப்புயல் புதிதாக அதே சமயம் இருந்தது. கனகம் வரும்வரை வாசலில் காத்திருந்த போது யாரோ தெருவாயிலுக்கு அந்தப் புறம் நின்று எட்டி எட்டிப் பார்ப்பது புரிய தந்தையின் கைகளை மெல்ல அழுத்தினாள் அக்ஷரா.

Advertisements

மகளின் பார்வையைத் தொடர்ந்த சத்தியனின் பார்வையில் பட்ட அந்த மனிதரைக் கண்டதும் உடல் விரைத்துப் போனது சத்தியனுக்கு. கண்கள் சிவக்க மகளின் கரத்தை ஒரு கையிலும் மனையாளின் கரத்தை மற்றொரு கையிலுமாகப் பிடித்தவர் விலுக்கென்று திரும்பி வீட்டிற்குள் புகுந்து கொண்டார்.

 

சத்தியனின் இந்த செய்கையால் காயப்பட்ட அந்த மனிதர் மெல்ல தளர்ந்த நடை நடந்து ரோட்டைக் கடந்து தள்ளாடிய நடையுடன் சென்று விட்டார்.

 

 

அக்ஷராவின் மனதுக்குள் கேள்விகள் ஊற்றெடுத்தன. யாரவர்? நமக்குமே கேள்விகள் தான்!!! விடைகள் விரைவில்!!!!!!

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

கர்வம் அழிந்ததடி – Comments Thread

 

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

Advertisements