இன்பம் எனும் சொல் எழுத 8 (2)

இவள் இதை வாசித்துக் கொண்டிருக்க,

“அனி, மோட்டர் ஸ்விட்ச் ஆன் செய்யேன் ப்ளீஸ்” என கேட்கிறது அவன் குரல்.

சமையலறையில் அதைப் பார்த்த நியாபகம்,

தேடிப் போன இவள் அங்கிருந்த இரண்டு மெகா சைஸ் ஸ்விட்சில் எது அந்த ஸ்விட்ச் என குழம்பி ஒன்றை இயக்க, பளீரென பரவுகிறது ஒளி வெள்ளம் வீட்டைச் சுற்றி எங்கும்.

ஹான்ன், பவர்கட் இல்லையா? ஏன் லைட்ட ஆஃப் செய்து வச்சான்? அவசரமாக ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தால், கண்ணில் படுகிறது அது.

இவள் காதில் வருகிறது புகை.

எவ்வளவு பெரிய பல்ப் கொடுத்துருக்கான்!!!!

இப்போது ப்ரெஷப் செய்து பெட்டில் உட்கார்ந்திருந்தாள் அனி,

சற்று நேரத்தில் அங்கு வந்த அவளது அவன், அவள் அருகில் அமர்ந்தவன், மிக மென்மையாய்

“அனுப் பொண்ணு நான் உன்னோட துவன்தானே” என்றபடி  தலை குனிந்திருந்த அவள் நாடியில் கைவைத்து தூக்க,

அவன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் சட்டென தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீச்சு வேகமாய் அவன் கழுத்தில் வைத்தாள் அவள்,

“ஹேய்” என்றபடி துள்ளி விலகிய அவன், அடுத்து எதுவும் சொல்லும் முன்

“முதல்ல என்ன பிஸ்டல் காட்டி நீங்க மிரட்டினீங்களேஅப்ப செய்ய வேண்டியது இது” என்றவள்

“இப்ப இன்னைக்கு என்னை பவர்கட் மழைன்னு காமிச்சு ஏமாத்தினீங்களே அதுக்கு செய்ய வேண்டியது இது” என்றபடி கத்தியை வீசிவிட்டு  இரண்டு கைகளாலும் அவன் கழுத்தைப் பிடித்தாள்.

அவனோ இப்போது அவளை இடையோடு இரண்டு கைகளாலும் வளைத்து தன்னோடு சேர்த்தான், அவளை ரசிக்கும் அத்தனை ரசனை அவன் கண்களில்

“ஏடி நான் உன் ஹஸ்பண்ட், கல்யாணம் ஆன அன்னைக்கே கழுத்த பிடிக்கியே, நீதான் மழைல நீச்சலடிச்சு விளையாட பிடிக்கும்னு சொன்ன, நாம சொன்னதும் மழை வந்துடுதா என்ன? அதான் ஜாலியா இருக்கட்டுமேன்னு இப்படி மழைக்கு செட் போட்டேன்”

போலி பரிதாபமாய் அவன் சொல்லிக் கொண்டு போக,

“அது தெரியுது, அதான் எனக்கு எது பிடிக்கும்னு பார்த்து செய்ததுக்கு இது”

இப்பொழுது அவன் கைகளுக்குள் இருந்தவள் அழுந்த இதழ் இறக்கியது கணவனின் அதரங்களில்,

‘அனிச்சம் பூவும் பாறாங்கல்லும் இருந்தாதான் இன்பம்னு சொல்லி இருக்கீங்களே,  அதான் இப்படி’ அவள் சொல்ல நினைத்த விளக்கத்தை சொல்ல விடுவது யாராம்????

முற்றும்

Advertisements

5 comments

Leave a Reply